CONFUSION - ரொம்ப சீரியஸ் மேட்டர் !!!!
"சும்மா இருந்த சிட்டுக் குருவியை சேஷ்ட பண்ணுவானேன் ?
அது கொண்டைய கொண்டைய ஆட்டிக் கிட்டு கொத்த வருவானேன்?"
அது கொண்டைய கொண்டைய ஆட்டிக் கிட்டு கொத்த வருவானேன்?"
அப்படித்தான் நான் நேத்திக்கு பண்ணினேன்? குழப்பம் அங்கே தான் ஆரம்பம்.
இந்த சாக்ரடீஸ் சும்மா இல்லாம "எதையும் ஏன், எதற்காக என்று கேள்; உன்னையே நீ அறிவாய்" என்று சொல்லிட்டு போயிட்டாரு.
ஆனா, இது வரைக்கும் அதெல்லாம் கேட்க நேரமில்லை .
இந்த சாக்ரடீஸ் சும்மா இல்லாம "எதையும் ஏன், எதற்காக என்று கேள்; உன்னையே நீ அறிவாய்" என்று சொல்லிட்டு போயிட்டாரு.
ஆனா, இது வரைக்கும் அதெல்லாம் கேட்க நேரமில்லை .
சனிக்கிழமைகளில், வாரா வாரம் எங்க ஸ்கூலில், ஹோமம் உண்டு... யஜுர் வேதத்திலிருந்து எடுத்து, தொடுக்கப்பட்ட சிறந்த வரிகளுடன் , காயத்ரியையும் சேர்த்து, சொல்லுவோம். அப்போ, எங்க பிரின்சிபால் , கண்டிப்பாக பேசுவார். என் ஞாபகச் சக்திக்கு உட்பட்டு , அவற் ஒவ்வொரு தடவையும் தவறாம சொல்வது "Who am I?" என்று சிந்திக்க சொல்லி. அந்த கேள்வியை சொன்னவுடனே வரும் சிரிப்பை அடக்கவே கவனம் பூர இருந்ததால், மற்ற பேச்செல்லாம் காதில் ஏறாது. ஏறினாலும், ஒண்ணும் மாற்றம் எதுவும் இருக்காது !!!
சரி, நிகழ் காலத்துக்கு வருவோம்.
முந்தா நாள், ஒரு boy admission க்கு வந்தான்.... அட்மிஷன் குடுத்தோமா, பணத்தை கல்லா கட்டினோமா, சந்தோஷமா வீட்டுக்கு வந்தோமா ன்னு இருக்கலாமொன்னோ ??
முந்தா நாள், ஒரு boy admission க்கு வந்தான்.... அட்மிஷன் குடுத்தோமா, பணத்தை கல்லா கட்டினோமா, சந்தோஷமா வீட்டுக்கு வந்தோமா ன்னு இருக்கலாமொன்னோ ??
அவன் கிட்ட கொஞ்ச சீண்டலாம்னு (நாக்குல சனி சப்பளாம் போட்டு உக்காந்தா, இப்படி எல்லாம் தான் பேசத் தோணும்)
"நீ எதிர் காலத்துல என்ன பண்ணப்போறே?"
"12 th ல நல்ல மார்க்கு வாங்கி பாஸ் பண்ணுவேன்" (ஜோக்கு)
"12 th ல நல்ல மார்க்கு வாங்கி பாஸ் பண்ணுவேன்" (ஜோக்கு)
அப்புறம்?
நல்ல computer எஞ்சினீயர் ஆவேன்
நல்ல computer எஞ்சினீயர் ஆவேன்
அப்புறம்?
நிறைய சம்பாதிப்பேன்.
நிறைய சம்பாதிப்பேன்.
அப்புறம் ?
அமேரிக்கா போவேன்.
அமேரிக்கா போவேன்.
அப்புறம்?
பெஸ்ட் கம்ப்யூட்டர் எஞ்சினீயர் என்று பேர் வாங்குவேன்.
பெஸ்ட் கம்ப்யூட்டர் எஞ்சினீயர் என்று பேர் வாங்குவேன்.
அப்புறம்?
இன்னும் நிறைய பணம் அம்பாதிப்பேன்.
இன்னும் நிறைய பணம் அம்பாதிப்பேன்.
அப்புறம்?
பெரிய வீடு, கார் எல்லாம் வாங்குவேன்.
பெரிய வீடு, கார் எல்லாம் வாங்குவேன்.
அப்புறம்?
அப்புறம்?
அப்புறம்?
அப்புறம்?
அப்புறம்?
பதில் இல்லை...தூங்கி விட்டானோ ? இல்லையே? என்னையே ஒரு மாதிரி பார்க்கிறானே?
நல்ல வேளை - fees வாங்கி விட்டேன். no ESCAPE !!...
நல்ல வேளை - fees வாங்கி விட்டேன். no ESCAPE !!...
அவனை இப்பவே மெண்டல் ஆக்க வேண்டாம்; கிளாஸ் ஆரம்பிக்கட்டும். ; ஏப்ரல் , மே யில் கிளாசுக்கு வரும்போது, அவனே மெண்டல் ஆகி விடுவான். அப்புறம் கண்ணில் ஒரே சோகமும், கலக்கமும் தான்..
.(ஆனால் என் கிட்ட மட்டும் வந்து தொந்தரவு பண்ண மாட்டான்... (ஒரு தரம் அடி பட்டுட்டான் இல்லையா... ? இனிமே நோ ரிஸ்க்.)
பாய்ண்டுக்கு வருவோம்.
இப்போது எனக்கு அனாவசியமாக (இல்லை அவசியமாகத் தான்) நிறைய சந்தேகங்கள்...
மறு நாள் வாக்கிங் போகும்போது, கிருஷ்ணனிடம் - (நம்ம பிருந்தாவன கிருஷ்ணன் தாங்க) பேசிண்டே போனேன்..
"இது வரை எத்தனை பிறவிகள் எடுத்திருப்பேன்? புல்லாய், பூண்டாய், செடியாய், மரமாய், புழுவாய், பூச்சியாய்.... எல்லாம் முடிந்து... உயர்ந்து உயர்ந்து, இப்போ மனிதப் பிறவி..
"மானிடராகப் பிறக்கவே மாதவம் செய்திருக்க வேண்டும்" என்ற மமதையுடன் !!
நம் பிறவியின் பயன், கடவுளை அடைவது.
எப்படி...
இறைவனிடம் சரணாகதி...
எப்படி...
இறைவனிடம் சரணாகதி...
எப்போது...?
நல்லதோ, கேட்டதோ ... தெரிந்தோ, தெரியாமலோ... செய்தால் "சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" ..."போற்றுவார் போற்றலும் , தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே"
என்று, பாவம், புண்ணியம் எல்லாத்தையும் கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு.......

நான் கண்ணனிடம் கேட்டேன் ... "பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து வெளியேறுவது எப்படி?"
படிப் படியாக, படைப்பில் உயந்து, ஞானம் வந்ததும்.
படிப் படியாக, படைப்பில் உயந்து, ஞானம் வந்ததும்.
அது எப்போது வரும்?
நீ உன் ஆத்மாவை உணரும் போது.
நீ உன் ஆத்மாவை உணரும் போது.
அப்போ அடுத்த பிறவி, இதை விட உயர்ந்த தாக இருக்குமா?
அது, கர்ம வினையை பொருத்தது...
அது, கர்ம வினையை பொருத்தது...
நான் இந்த ஜென்மத்தில் "கர்ம மார்கத்தில் தான் இருக்கிறேன்? அடுத்த ஜென்மத்தில்... பக்தி மார்க்கம்... அதற்கு அடுத்தது.. ஞான மார்க்கம்...அப்புறம்.. பார் கடல் தான்... நாராயணன் திருவடிதான்..." என்று, எனக்கே நான் இரண்டு ஜென்மாவை முடிவு செய்தேன்.
பிறகு தோன்றியது, "இதை எப்படி நான் தீர்மானிப்பது? இந்த ஜென்ம பாவ, புண்ணிய கணக்கு வழக்கை, balance sheet ஐ பார்த்துதான் முடிவாகும். அது கடவுளுடைய சித்தம்.
"ஐயோ... அப்பன்னா, மறுபடியும் "புழுவாய், பூச்சியாய் " என்று இன்னொரு circle ஆ?"
எப்படி தப்புவது?
நான் கேட்கிறேன்..
. "நான் என்ன பேசுகிறேனோ, அது கண்ணன் மனதில் இருந்து பேசுவது; நான் என்ன செய்கிறேனோ, கண்ணனின் தீர்மானம், அவனன்றி ஓரணுவும் அசையுமோ? அப்போ, என் மனதில் ஆத்மாவாக இருக்கும் நாராயணனே இதையும் அதையும் பேச, செய்ய செய்து விட்டு , அப்பப்போ அதற்கு பலனையும் , புளிப்பாக, இனிப்பாக என்று 6 சுவையுடன் குடுத்து... (இது என்ன ஞாயம்.. நீ என்னை கருவி ஆக்கி , ஆண்டு விட்டு, பழி , பாவம் என்னுதா? அது எப்படி கண்ணா செல்லும்? "
தப்பு நானா செய்தேன்; நீதானே 'சூத்திர தாரியாய் இருந்து ஆட் டுவிக்கிறாய்? நானும் ஆடுகிறேன். பின் எப்படி நான் பாவி ஆவேன்? அதற்கும் நீதான் பொறுப்பு.
தப்பு நானா செய்தேன்; நீதானே 'சூத்திர தாரியாய் இருந்து ஆட் டுவிக்கிறாய்? நானும் ஆடுகிறேன். பின் எப்படி நான் பாவி ஆவேன்? அதற்கும் நீதான் பொறுப்பு.
அப்போ கணக்கு தீர்க்கும்போதுbalance பூஜ்யம் ஆகவேண்டும் என்றால், 'A ' + 'B ' = '0' என்ற equation வர வேண்டும்.
அதாவது A = -B ... A - positive ; அதற்கு இணையான 'B ' நெகடிவ் .
இந்த கணக்கில் என் ரோல் என்ன? எல்லாம் நீதானே செய்யச் சொல்கிறாய்... "
அதாவது A = -B ... A - positive ; அதற்கு இணையான 'B ' நெகடிவ் .
இந்த கணக்கில் என் ரோல் என்ன? எல்லாம் நீதானே செய்யச் சொல்கிறாய்... "
அப்படி இருக்க, (அப்பா போட்டுக் கொடுத்த ஹோம் வொர்க் தப்பா இருந்தால், தண்டனை, மகனுக்கு... அப்பாக்கு இல்லை... அதனால் தான், ஜீசஸ், தண்டனையை தான் ஏற்று, சிலுவையில் தொங்கினாரோ?) நான் எப்படி பொறுப்பாவேன்?
அதற்குள் வீடு வர கண்ணன் மறைந்தான் ; காப்பி வந்தது.
இப்போ, நான் என்ன செய்ய வேண்டும்... ? பிறப்பு, இறப்பிலிருந்து வெளியே எப்படி வரவேண்டும். அந்த circle இன். எந்த புள்ளியில் இருந்து Tangent ஆக வெளியே நேர்கோட்டில் பாய வேண்டும்?
இதுதான் குழப்பம்....
சந்தேஹத்தை தீர்ப்பவர்களுக்கு, "பொன் வைக்குக் இடத்தில் பூ வைத்து" ஆயிரம் முல்லை மொட்டுக்கள்... !!
No comments:
Post a Comment