DENTIST’S CHAIR
பல்லோடு நான் படும் பாடு.....
சுமார்பதினாலு வயதிலேயே சொத்தைப் பல் வந்தது... (சொத்து வந்ததோ இல்லையோ... சொத்தை நிறைய வந்தது !!!)
எனக்கு காரணம் எல்லாம் தெரியாது... பல் ஏன் கெட்டுப் போறதுன்னு... (தெரிஞ்சப்புறம் மட்டும் ஏதாவது பண்ண முடிஞ்சுதா என்ன ? வந்துண்டேதான் இருந்தது..)
ஆனா ஒண்ணு.. போன ஜென்மத்தில, இந்தடாக்டர்ஸ்க்கெல்லாம் நெறைய கடன்பட்டு, இந்த ஜென்மத்தில தீக்கறேன் ன்னு மட்டும் நன்னா தெரியறது...என் பற்களுக்கு அவா போட்டிருக்கற சிமெண்ட், நான் குடுத்திருக்கற பணம்... எல்லாம் சேர்த்தால்... கண்டிப்பா, ஒரு வீடு வாங்கி இருக்கலாம் !!)
இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்... தஞ்சாவூர்ல, எல்லாரும் செங்கப்பொடியில பல் தேக்கரச்சே, நாங்க சலிச்ச அடுப்பு சாம்பல்ல பல் தேச்சோம்..
அவா எல்லாம் சாம்பலுக்கு வரச்சே, நாங்க பல்பொடிக்கு மாறிட்டோம்...
அவா பல்பொடிக்கு வரச்சே...நாங்க மெட்ராஸ்வந்து, பேஸ்ட்டுக்கு மாறியாச்சு...
பத்தடி முன்னேதான் !!!
நஞ்சங்கூடு, பயோரியா பல்பொடிகளை மறக்கமுடியுமா ?
பயோரியா கொஞ்சம்காரம்...(அதோட இங்கிலீஷ் ஸ்பெல்லிங் வேற ரொம்ப கஷ்டம் !!)
நஞ்சங்கூடு நன்னா இருக்கும்... அதனாலே தாராளமா கையில கொட்டிண்டுடுவோம்னு அப்பா, சின்ன
சின்ன பேப்பர் துண்டுல, கோவில் குருக்கள் விபூதி மடிக்கராப் போல , நீட்டா , அழகா, ஒரே சைஸ்ல பொட்டலம் கட்டி வெப்பா...
தினமும்ஆளுக்கொண்ணு...
அம்மா வைவாளேன்னு, குழாஅடிக்குப் போய், "போனேன்..வந்தேன்" ன்னு பல் தேச்சுட்டு வந்துடுவேன்...
தஞ்சாவூர்ல பல்லுக்கெல்லாம் பெரிசாவைத்தியம் ஒண்ணும் கிடையாது. பல்வலிச்சா, கன்னத்தில கை வெச்சு அமுக்கி, அம்மான்னு கத்தினா, அப்பா, ஒருதொடப்பக்குச்சில கொஞ்சம் பஞ்சுசுத்தி, கிராம்புதைலம், டின்க்ச்சர், எதிலயாவது தோச்சு, அந்தபல்லுல வெப்பா... வலி கொறஞ்சிடும்..
அங்க ஆஸ்பத்திரிக்குப் போனாலும், மருந்துதான் போட்டு அனுப்புவா... இன்னொரு நல்ல விஷயம்... அப்போ எல்லாம் painkiller ன்னு மாத்திரை குடுக்கவே மாட்டா... எத்தனை நல்ல விஷயம் !!!
எங்க மாமா பையன் ஒருத்தன் மெட்ராஸ் போய் வந்து, அங்க பல் டாக்டர், சொத்தைப் பல்லை சுரண்டி, சிமென்ட் வெச்சு அடைத்து விட்டதை சொன்னபோது, அதிசயத்துப் போயிட்டேன் !! எனக்கும்
அந்த நல்ல நாள் வந்தது...
மெட்ராஸ்வந்து... காலேஜ் attendance ஐவிட, பல் டாக்டர் attendance ரெகுலர் !!
இங்கே வந்து பழக ஒரு வருஷம் ஆகி, மறுபடியும் அமுங்கி இருந்த பல்வலி வெளிக்கிளம்ப, General Hospital உடன் சேர்ந்த Dental Wing பீச்ரோட்ல் இருக்கு...அங்கே போகஆரம்பித்தேன்...
பெரியநல்ல Hospital, free treatment; நெறைய ஸ்டுடென்ட் டாக்டர்ஸ்... ஜே..ஜே.. ன்னு இருக்கும்..
காலம்பர சீக்கிரம் கிளம்பி, புரசவாக்கத்தில் இருந்து ஏழாம் நம்பர் பஸ் பிடித்து, பல் ஆஸ்பத்திரிக்குப் போய், அதே பீச் ரோடில் இருக்கும் காலேஜுக்கு ,21ம் நம்பர் பஸ் பிடித்துப் போய் சேர்ந்து விடுவேன்...
இது வருடக்கணக்கா நடந்தது... என்னை அறியாமல், பழக்க
தோஷத்தில் 7ம் நம்பர் பஸ் பிடிப்பது வாடிக்கை ஆகி விட்டது...
நல்லவேளையாக ஒரு பல்லும் பிடுங்கப்பட வில்லை
பெண்பாக்கும்போது, நல்லவேளை , என் பல்லை நன்றாகப் பார்க்கவில்லை... ஒரு தெத்துப்பல் வேறு (சிங்கப்பல்லாம், அதிர்ஷ்டமாம் !!)..
பல்வலி, ஒருதருமத்துக்குக் கட்டுப்பட்டு சிலவருஷங்கள் அடங்கி இருந்தது...
ஆனால் குழந்தைகள் பிறக்கவும், மறுபடி ஆரம்பம்..
(அதுவரை, genetic problem ; 9 th child ; calcium deficiency ன்னு ஏதோகாரணம் சொல்வேன்.. குழந்தை
பிறந்தப்புறம், child birth க்குப்பிறகு இப்படித்தான் ஆகும் என்று சொல்ல ஆரம்பித்தேன்.. இன்று
வரை இப்படியாப்பட்ட காரணங்கள் கண்டுபிடிப்பேனே தவிர, என்தப்பு, பல்லை நன்னா maintain பண்ணவில்லை என்று சொல்ல வேமாட்டேன் !!)
அப்புறம் என்ன... ஒண்ணுவிட்டு ஒரு நாள் எங்க outing ஏ... பல் டாக்டர் தான்...
Technology has advanced very much....
From simple filling to root canal, bridge, extraction, denture.. I have had implant also !
In the process... how much of knowledge I have gained !! I am a theoretical dentist - not practical !!
இப்ப என் வாய் நெறைய பல் இருக்கு.. ஆனா எத்தனை ஒரிஜினல்ன்னு தெரியாது... ஒண்ணு ரெண்டு இருக்கலாம் !! அதுவும் சிமென்ட் பூசப்பட்டதாதான் இருக்கும்...!!
பல்பொடியால பல் தேக்கப்படுத்தினவ... அப்புறம் (பிரஷ் / பல்பொடி) combination க்குமாறி, (அதுவும், தஞ்சாவூர்ல, நாங்கதான் முதல்ன்னு நினைக்கிறேன் )... அப்புறம் மெட்ராஸ் வந்து (பிரஷ் / பேஸ்ட் ) க்குவந்து... இரண்டு வேளை தேய்த்து...
இப்போ... floss , super floss ன்னு கலக்கறேனாக்கும் !!
Mahabharatha Characters ஐ விட, நான் பல்லை காண்பித்த டாக்டர்ஸ் அதிகம் !!
ஆனா, இன்னி வரைக்கும், டென்டிஸ்ட் சேர்ல உக்காந்து, வாயை திறந்ததும், ஒரு instrument கொண்டு வருவாரு பாருங்க, சொரண்டரதுக்கு, அத கிட்ட எடுத்துண்டு வந்த உடனே , பயமான பயம்.. போக மாட்டேங் கிறது ! அந்த "கூசல்" ஐ அனுபவிச்ச வாளுக்கத் தான் தெரியும் !
அமாம், ஏன் இந்த பல் டாக்டர் எல்லாம் , நம்ம வாய்க்குள்ள, இன்ஸ்ட்ருமென்ட் ஐ வெச்சு, ட்ரீட் பண்றச்சே, கேள்வி கேக்கறா ?
எல்லா பதிலையும் கண்ணாலே சொல்ல முடியுமா ??
இப்படிஎன் Medical Profession Interest ம் , Medical Articles எந்த Magazine ல, internet ல பாத்தாலும் படித்து, டாக்டர்களிடம் டிஸ்கஸ் பண்ணி, சொந்த அனுபவமும் சேர்ந்து, dental மட்டும் அல்ல...
General, Cardio, Neuro, Ortho, Ophthalmi, Gynic, Psychco, Gastro doctors கிட்டபோனஅனுபவம்...
Skin, E.N.T., Brain இன்ன பிறவற்றையும் கொஞ்சம் படித்து,
மூன்று குழந்தைகளை வளர்த்ததில் Pediatric ம் தெரிந்து...
(குழந்தைகளை வளர்த்துப் பாருங்கள் ..பாதி டாக்டர் ஆகிவிடுவீர்கள் !!)...
நான் 75 % டாக்டர் !! Practice தான்பண்ணமுடியாது !!
ஒரு surgery பாக்க ஆசை... அதற்கு இன்னும் நேரம் வரல்ல .