Wednesday, December 13, 2017

வத்தக் குழம்பும் நானும் .....

வத்தக் குழம்பும் நானும் .....

எப்போது சாப்பிட ஆரம்பித்தேன் என்று ஞாபகம் இல்லை...ஆனால் என்று நானே பண்ண ஆரம்பித்தேன் என்று நன்றாக ஞாபகம் இருக்கிறது.

கல்யாணம் ஆன புதிதில் புக்காத்தில் எல்லோரும் சாயந்திரம் வெளியே போகும்போது, "ராத்திரிக்கு வத்த குழம்பு வைத்து, சாதம் குக்கரில் வைத்து விடு" என்று இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்து விட்டு போய் விட்டார்கள். நானும் பயந்துண்டே "சரி"  என்று சொல்லி விட்டேன். ஆனால் எனக்கு சமையலில் ABC  கூட தெரியாது. SK தான் ஸ்டெப் by ஸ்டெப் சொல்லிக் கொடுத்தார். !! ஒரு வழியாக சமைச்சுட்டேன். !! (இன்று வரை தான் சமையல் சொல்லிக் கொடுத்ததை பீத்திக் கொள்வதுதான் எரிச்சல் !!)

வடாம், பொரிச்ச அப்பளம், தேன்குழல், முறுக்கு - இதுல ஏதாவது ஒண்ண எடுத்து, வத்தக் குழம்புல தோச்சு தோச்சு சாப்பிடுவேன்.
பிஸ்கட், ரஸ்க், பிரெட் - வத்தக்  குழம்பை spread  பண்ணி சாப்பிடலாம்.

வாழை இலையில் சுடச்  சுட சாதம் போட்டுண்டு, பருப்பு, நெய் ஊத்தி பிசைஞ்சு சைடில கொஞ்சம் வத்தக் குழம்பு ஊத்தி தொட்டு தொட்டு சாப்பிட்டா ... ஆஹா...

அதே இலையில சாதம் போட்டு , நெய் அல்லது நல்ல எண்ணெய் விட்டு, வத்தக் குழம்பு ஊத்தி பெசஞ்சு, பொரிச்ச அரிசி அப்பளம் தொட்டுண்டு சாப்பிட்டா... "சொர்கம்" ....

அதே இலையில சாதம் போட்டு, கெட்டி தயிர் விட்டு பிசைஞ்சு , நடுவில குழிச்சு, குழம்பு ஊத்தி, கலந்து கலந்து சாப்பிட்டா பிரமாதமா இருக்கும். அந்த குழியிலே கீரை  மசியல் போட்டு, அதை குழித்து  வத்தக்  குழம்பு விட்டு கலந்து சாப்பிட்டால் இன்னும் ருசி.

அம்மா தயிர் சாதம் உருட்டி கையில் குடுக்க, நான் கட்டை விரலால் அதில் ஒரு குழி குழிக்க, அம்மா அதில் ஒரு ஸ்பூன்  வத்தக்  குழம்பு விட , அடா, அடா , அடா... அளவு தெறியாமல் சாப்பிடலாம். ஹும்ம்ம்ம்.... அதெல்லாம் ஒரு காலம்.

Tuesday, December 5, 2017

June 1st memories....

with all 3 children settled & away from me.. my pleasure now is recalling life with my children in their child hood days.
I talk - SK listens ( that is what i think !-- he listens !!)
when all three were in early school days... June 1st week is the most awaited period for them.
schools re-opening in june... a major, interesting shopping to be done.
1. School bag - 5 to 10 rs.
2. pensil box - 1 re.
3. leather shoes - 30 to 40 rs. - sockes - 3 rs. pair
4. canvas shoes for PT - 5 to -10 rs.
5. fountain pen 1 or 2 rs.
6. pencil - 25 ps. each - bought as 1 ozen
7. erasers / sharpeners / instrument box (5 rs.)
children சாமான்களின் அழகை பார்க்க, இவர் விலையை பார்க்க, நான் தரத்தை பார்க்க .....
எல்லோரும் ஒரு comromise க்கு வந்து, பேரம் பேசி, இவர் இன்னொரு கடை பார்க்கலாம் என்று கடைக்காரனுக்கு போக்கு காட்ட...
குழந்தைகள், அந்த சாமான் கை நழுவி விடுமோ என்ற உணர்வை முகத்தில் காட்ட..
கடைக்காரன் அதை கவனித்து, சாமர்த்தியமாக கொக்கி போட ....
when all purchases were finished...
கொஞ்சம் கோபம், கொஞ்சம் தாபம், கொஞ்சம் கண்ணில் நீர் முட்டுதல் ... அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் நடுவில் நான் சமாதான தூதுவராக பேச்சு வார்த்தை, சமாதானம், some promises etc. etc.
With the purchase of cone ice cream (1 re.) , shopping ends happily.
next few days, covering the books, arranging the new things, daily morning take the new items out & compare between them....
அருமையான நாட்கள்.
ஒரு ஆறுதல்....
காலம் எவ்வளவு மாறினாலும்... இந்த குழந்தைகளின் போக்கும், உணர்ச்சிகளும், சிறிய சிறிய சந்தோஷங்களும், ஸ்கூலுக்காக புதிதாக வாங்கும் சாமான்களும் இன்னும் மாற வில்லை.
மாறவே இல்லை....
மைலாபூர், பாண்டி பஜார் போனால்... இந்த காட்சிகள் இப்பவும்.
நாடகம் அதே.. சீன்ஸ் அதே.. வசனம் அதே.. நடிப்பும் அதே... நடிகர்கள் மட்டும் வேறு ... !!!!

Tuesday, November 21, 2017

Fashion & VK

Fashion ன்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவ நான். காலேஜ் சேந்தப்புரம் ஒரே மலைப்பு city  பெண்களைப் பார்த்து. தெரியாதது மட்டுமில்லை.. நெறைய பிடிக்காது.. (வளர்ப்பு அப்படி).. கட்டுப்படி ஆகாது.. அதனால் அதைப்பத்தி யோசிச்சதே இல்லை.
காலேஜில் P.U.C யில் பாவாடை தாவணி, B.Sc. யிலிருந்து புடவை compulsory.

காலேஜ் வேலைக்குப் போனப்புறம், புடவை தலைப்பு, நீளும், குறையும், ஆனால் யாரும் பின்னு குத்தி பாக்க முடியாது. சல்வார் கமீஸ் போட யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த குட்டை தலைப்பை மட்டும் follow பண்ணினேன்.. எப்போ? அநேகமாக அந்த பேஷன் முடியிற தருவாயில். "ஹமேஷா தஸ் கதம் பீச்சே" அதாவது.. பத்தடி பின்னே..
80, 90 களில் ப்ளௌஸ் pattern மாற ஆரம்பித்தது. ஆனால் எனக்கு பயம்...
"நான் நீள கைக்கு போகையில், குட்டை கை தான் வந்தது...
குட்டை கை போகையில் (தையல் காரரை பிடித்து, அத்தனை கையையும் வெட்டி, தைத்து, அட்டகாசம் அடித்து) ..... பஃப் கை வந்தது.
இது சூட் ஆகுமா என்று, trial பாத்து, மாறும்போது, பேஷன் உம் மாறி விட்டது. அதுக்காக தூக்கிப் போட முடியுமா... எப்போதும் போல் அவுட் of பேஷன் தான்.

என்னோட டைலர் அதுக்கும் மேல. நான் ஏதாவது மாறுதல் சொன்னால் "கொஞ்சம் கை நீளத்தை குறை,நெக் back ஐ. கொஞ்சம் இறக்கு" ன்னு சொல்லிட்டு வந்தால், அதற்கு நேர் மாறாக, கொஞ்சம் நீள கை, கழுத்து வரை கழுத்து.. இப்படி "ஏன்" என்று கேட்டால், "அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம் மா" என்று, நான் என்னவோ சினிமாவில் சில்க் ஸ்மிதா மாதிரி act பண்ணப்போறேன். அதை தடுக்கணும் என்ற முடிவோட இருப்பான். யாரை எதிர்க்க முடியும் ? கோச்சுண்டா, அடுத்தது சாக்கை இரண்டு பக்கம் தையல் போட்டார் போல் இருக்கும்.

ஒரே ஒரு தடவை, சுமார் 6 வருஷத்துக்கு முன்ன, ஒரு துணி குடுத்து, படம் எல்லாம் வரஞ்சு, "தோளில் 3 சின்ன மடிப்பு; சின்ன பஃப்; குட்டை கை; கை விளிம்பில் கொஞ்சம் அகல பைப்பிங்" என்று சொல்லி குடுத்தேன். எனக்குள் மகா சந்தோஷம், முதல் முறை நானே பாஷனாக இருக்கப் போறேன் என்று.
அவனுக்கு புரியல்லே, தெரியல்லே ன்னா சொல்லி இருக்கலாம் இல்லையா? "அதெல்லாம் உங்களுக்கு சூட் ஆகாது" ன்னுட்டான். பேசாம வந்துட்டேன்.
இதில் கொடுமை என்னன்னா.. சரவணன்-மீனாக்ஷி யில் மீனாக்ஷி அதே மாதிரி போட்டுண்டு வரா!! எனக்கு எப்படி இருக்கும்? அநேகமாக, என் தையல் காரன் தான் நான் குடுத்த படத்தை வைத்து தைத்திருப்பான்.

சரி; இவனை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒரு லேடி , டிசைனுக்காக பரிசு எல்லாம் வாங்கியவள்; அவள் கிட்ட போனா, "கவலையை விடுங்கோ, நான் உங்களை அப்படியே மாத்திடறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டு, ஒரு நல்ல பட்டுப் புடவை சட்டையை, தைத்துக் கொடுத்தாள். ஆசையாக போட்டா... சட்டைக்கு முதுகு பக்கம் துணியே காணும் !! 2 இன்ச் துணி கீழே.. தடிமனான கயிறு மேலே.. !!
இதை போடப் பிடிக்குமா? அப்படியே கிடந்தது... இதில் தையல் காரரை குற்றம் சொல்ல என்ன வேண்டி இருக்கு??
இப்போ அதே கலர்ல துணி வாங்கி, ஜரிகை மட்டும் கட் பண்ணி வைத்து, தைத்துக் கொண்டேன்.
எனக்கு freedom for dressing 1947 க்கு பதில் 1997 இல் கிடைத்தது. சல்வாரில் ஆரம்பித்தேன். அதிலும், குட்டை டாப், டைட் leggings இதெல்லாம் கிடையாது. அனார்கலி, அமராவதி, லைலா ஒன்றும் கிடையாது.
ஒரு வழியாக அதெல்லாம் பழகி, மூன்று பேரக் குழந்தைகளுக்கு பாட்டி ஆனப்புறம், "why not jeans & top" ன்னு யோசிக்கரச்சே... அதை செயல் படுத்தரதுக்குள்ள, உடம்புக்குக் கூட பிடிக்காமல், என்னை தடுப்பதற்காக, கண்டபடி குண்டாயிட்டேன்.
இப்ப, மரியாதையா, காட்டன் புடவை, கொஞ்சம் லூசாக தைத்த சட்டை (இன்றைய லூஸ் நாளைய டைட்) என்று போகிறது வாழ்க்கை.

Sunday, November 19, 2017

ஏமாந்தவ .......

என் நெத்தியில ஏமாந்தவ ன்னு எழுதி 'பச்சக்' ன்னு ஒட்டி இருக்கு போல இருக்கு.
வீடியோ டேப் வந்த புதுசு. சிங்கபூர்லேர்ந்து பிளேயர் வாங்கி வந்தாச்சு. ஒரு பையன் டேப் எடுத்துண்டு வருவான். "அம்மா, இந்த படத்துல கதை சூப்பர்; இதுல டைரக்ஷன் பிரமாதம்; இதுல பாட்டெல்லாம் ஓஹோ ..." இப்படி சொல்லியே மூணு சினிமா டேப் குடுப்பான். என் குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னாலும், அவர்களை நம்பாமல், அந்த பையனை நம்பி வாங்குவேன். இப்படி வாங்கித்தான் விசு, மனோரமா, எஸ்.வி.சேகர் படம் 'சிதம்பர ரகசியம்' - மனோரமா ஒரு குட்டை பாவாடையுடன் ... பார்த்து நொந்தோம். ஆனாலும் புத்தி வரவில்லை.
இதே போல் - ஸ்ரீலங்கா போன பொது ... ஒரு ஆயுர்வேத தைலங்கள் கடையில் அந்த கைட் நிறுத்த (கமிஷன், கமிஷன்) , அந்த கடை சேல்ஸ் பையன் நெத்தியில், தோளில், எண்ணெய் தடவி அமுக்கி விட... ஒரே ஆர்வக் கோளாறில், 10,000 Rs. பழுத்தது. சென்னை வந்து பிரித்து பார்த்தால் எல்லாம், நம்ம கேரளா சமாச்சாரங்கள். இதில், அதிக விலை கொடுத்தது சந்தன எண்ணைக்கு. மனதிற்குள் ஒரே கற்பனை - சந்தோஷம். தண்ணீரில் சொட்டு விட்டு குளித்தால் நாள் முழுவதும் வாசனை என்று. முதல் நாள் மிகப் பெருமையாக, கொஞ்சம் தாராளமாக விட்டு குளித்தால், உடம்பெல்லாம் ஒரே பிச்சுக்..பிச்சுக். ஒவ்வொரு பாட்டிலாக வேலைக்காரிக்கு குடுத்து (எப்படி யூஸ் பண்ணனும்னு கிளாஸ் வேற) , கடைசியாக, ஒரு மாதம் முன்பு, சந்தன எண்ணையும் கை மாறியது !!
இப்போதைய கதைக்கு வருவோம்.
டெட் ஸீ யில் குளித்து, அடி கருப்பு மண்ணை உடம்பு பூரா பூசிக்கொண்டு, அரை மணி காய்ந்து, குளித்து, ஏக சந்தோஷம் ! அந்த கைட், இந்த மண்ணை தினமும் பூசி குளித்தால், டாக்டர், ஆஸ்பத்திரி, மருந்து ஒன்றும் வேண்டாம். எங்கம்மாவுக்கு ஹார்ட் கோளாறு, மனைவிக்கு மூட்டு வலி, குழந்தைகளின் ஜலதோஷம், இருமல் எல்லாத்துக்கும் ஒரே வைத்தியம் இதுதான் என்று ரீல் சுத்த, நாங்கள் அப்படியே வேத வாக்காக நம்பி... அவன் "இங்கே எல்லாம் வாங்காதீங்க; நான் நல்ல கடைக்கு கூட்டிண்டு போகிறேன்" என்று சொல்லி (கமிஷன், கமிஷன்) ஒரு கடையில் கொண்டு விட்டான்.
அங்கே சால்ட்... வித விதமான கலர், வாசனையுடன். "தோல் வியாதி எல்லாம் பறந்து விடும். காலை வெந்நீரில் சால்ட் போட்டு பத்து நிமிஷம் உக்காந்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்" என்று மானாவாரியாக கடைக்காரன் பேச (ஒரு பெரிய கடை முழுதும் 'டெட் ஸீ ப்ராடக்ட்ஸ்' ... இது மாதிரி நூற்றுக்கணக்கான கடைகள். நிஜமாக அதிலிருந்து எடுக்கப் பட்டிருந்தால், ஸீ வற்றி, காய்ந்து, மணல் கூட இல்லாமல், பாறையாக இருந்திருக்கும் !!) . இதை தவிர 'குழ, குழ' கருப்பு மண்.
சிகப்பழகு க்ரீமிலிருந்து , என்னென்னவோ. உடனே எங்களுக்கு, நுரையீரல் பாதிப்பால் ௦௦ அவதிப்படும் ஒன்று விட்ட அண்ணா, தோல் வியாதியால் தவிக்கும் இரண்டு விட்ட அக்கா, மூட்டு வலி ஆரம்பித்துள்ள எங்கள் மகள், ஸ்கின் அலர்ஜி உள்ள பேத்தி .. என்று உறவுகள் மனதில் வரிசை கட்டி நிற்க, எங்களை யோசிக்க விடாமல் கடைக்காரன், "ஒன்று வாங்கினால் ஒன்று ப்ரீ ; மூன்று வாங்கினால், இரண்டு ப்ரீ" என்று மூளை சலவை செய்ய, "சரி, கஞ்சத்தனம் பார்க்காமல் வாங்கிப் போடுவோம்; இனிமே யாரு இவ்வளவு தூரம் வரப்போறா" ன்னு சகட்டுமேனிக்கு வாங்கித்தள்ளி, பொட்டி கனமாகிப்போக- வந்து சேர்ந்தோம். "தினமும் காலை வெந்நீரில் வைக்கணும் - டி.வி. பார்க்கும்போது. joints ல எல்லாம் கருப்பு மண் பூசி குளிக்கணும்" என்று ஏக டிஸ்கஷன்.
திரும்பி வந்து அஞ்சு நாள் ஆச்சு. இரண்டு பெரும் அசடு வழிகிறோம். பெண் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்படி இருக்க, யாருக்கு குடுப்பது. எங்களுக்கும் பொறுமை இல்லை. இப்போதுதான் ஞானோதயம். "இந்த பாக்கட் தீர்ந்துதுன்னா , அப்புறம் எப்படி வாங்கறது?" ன்னு. ஹும்ம்ம்ம்......
"பட்டா தெரியும் பாப்பானுக்கு" என்று பழ மொழி.
"பட்டாக் கூட தெரியாது இந்த வசந்தா பாப்பாத்திக்கு " என்பது புது மொழி.

Monday, November 13, 2017

நாடகம்........

பழைய நாள் ல ரேடியோவில Sunday afternoon நாடகம் உண்டு. ஒரு ரேடியோ வை சுத்தி whole family உக்காந்து கேப்போம். நன்னா இருக்கும்.
கல்யாணம் ஆனதும் பெரிய சந்தோஷம் , இவர் கிட்ட இருந்த Mylapore Fine Arts membership தான். 2 டிக்கெட். அதை தவிர வாணி மஹாலில், இரண்டு - வீட்டில் போட்டி இல்லாமல் இருக்க.
67 களில் பாலச்சந்தர், சோ, மேஜர் சுந்தரராஜன், சேஷாத்ரி, மனோகர் ... இவர்கள் நாடகமெல்லாம் ரொம்ப நன்னா இருக்கும். ஆனால் முக்கால் வாசி சீரியஸ். Cho உடையது மட்டும் political satire.
ஞான ஒளி, நீர்க்குமிழி, சோ வின் மனம் ஒரு குரங்கு, இன்னும் பல படமாக்கப் பட்டன. மெரினாவின் கதைகள், பூரணம் விஸ்வநாதன், YGP, எல்லாம் சூப்பரா இருக்கும். சோ வின் "மனம் ஒரு குரங்கு", "மொஹமத் பின் துக்ளக்" எல்லாம் படமாகி இருக்கு.
ஸ்கூட்டரில் நுங்கம் பாக்கத்திலிருந்து , சனிக்கிழமை மாலை கிளம்பி, drive in இல் டிபன் சாப்பிட்டு, வாசலில் அடர்த்தியாக கட்டி விற்கும் மல்லிகைப்பூ வாங்கி தலை நிறைய வெச்சுண்டு... (சந்தோஷமான நாட்கள்).
ஒரு YGP நாடகத்தில் , (YGM சின்ன பையன்), YGP , கூப்பிட்டு, "என் பையன் ரொம்ப நன்னா சஹஸ்ர நாமம் சொல்லுவான்" என்று வந்தவரிடம் அலட்டி விட்டு, YGM ஐ "கண்ணா, எங்கே, சஹஸ்ர சொல்லு" ம்பார். YGM கணீரென்று, "சஹஸ்ர நாமம்" என்று சொல்லுவான். மெரீனாவின் தனிக்குடித்தனம் எல்லாம் இன்றைக்கும் பார்த்து சிரிக்கலாம்.
அப்புறம் வந்தவர்கள், மௌலி, எஸ்.வீ.சேகர், பிறகு கிரேசி மோகன், காத்தாடி ... எல்லாம் காமெடி. டெல்லி கணேஷும் , T.V.Varadarajanum (வித் மெசேஜ்)
Mylapore Fine arts ராசி என்று எல்லா நாடகமும் அங்கே அரங்கேறும்.
80 மேல் நாரத கான சபா. ... இன்று வரை.
எல்லா ட்ராமாவுக்கும் போவேன். டிராமா ஆரம்பிக்கும் வரை ப்ரெஷ் ஆ இருப்பேன். அந்த ஹாலின் comfort & AC சேந்து, டிராமா ஆரம்பித்த 5 நிமிஷத்தில் தூங்கி போயிடுவேன். இவரும் எழுப்பி எழுப்பி பாத்து, இதற்குமேல் இவளை சீண்டினால். கொத்தி விடுவாள் என்று, விட்டு விட்டார்.
ஆனால், நடுவில் இன்டர்வெல் மணி அடித்ததும், போய் chips வாங்கிண்டு வந்து கொடுப்பார். அப்போது அதுவரை (!) நடந்த கதையை கேட்டுப்பேன்.
சிப்ஸ் ஒவ்வொண்ணா, சத்தமில்லாமல் சாப்பிடுவேன். பாக்கெட் காலி ஆனதும், என்னை அறியாமல் தூங்கி விடுவேன்.
டிராமா முடிந்ததும், சத்தத்தில் முழித்து, "என்ன ஆச்சு" ன்னு பாக்கி கதையை கேட்டால், இவர் கடுப்பை அடக்கிக் கொண்டு, சொல்லுவார். இதுவும் இன்று வரை தொடர்கிறது.
அதனால் தானோ என்னமோ, இப்போதெல்லாம் டிராமா, இடைவெளி இல்லாமல் 2 மணி நேரத்தில் முடித்து விடுகிறார்கள் !!
S.V.Shekhar, Kaatthaadi, Crazy Mohan, இவங்க டிராமாவில் எல்லாம் தூங்க முடியாமல் சிரிப்புத் தோரணங்கள் !!
அதிலும் சேகர் டிராமாவில், அன்றைய நிகழ்ச்சிகள், அரசியல் எல்லாம் நுழைத்து on the spot comment அடிக்க, கூட நடிப்பவர்கள் சட்டென்று re-act பண்ண முடியாமல், அவர்களும் சேர்ந்து சிரிப்பார்கள். அதை பார்த்தே நமக்கும் சிரிப்பு வரும்.
T.V. ல கூட, பொதிகை மட்டும் இருக்கும்போது, every Tuesday 7-8 PM டிராமா உண்டு. என் பெண் ஸ்கூலில் படித்தாலும், அதை என்னுடன் சேர்ந்து பார்க்க அனுமதி உண்டு !!
LikeShow 

Monday, October 30, 2017

cooking tips - 1

காலையில், முதல் காரியமாக, காப்பி கலந்து, ஆற்றி, நுரையுடன், எல்லார்க்கும் முன்னாடி, (husband எழுந்துட்டா கூட குடுக்க கூடாது), பதட்ட படாம, சாப்பிட்டு, வேலையை ஆரம்பிக்கவும் !!!!!
1. சேப்பங்கிழங்கை முதல் நாளே 3/4 பாகம் வேக வைத்து (குக்கர் இல் அல்ல), உரித்து, கட் பண்ணி fridge இல் வைத்து, மறு நாள், அதில் உப்பு, பெருங்காயம், சாம்பார் பவுடர், மஞ்சள் போடி கலந்து, பிசிறி, கொஞ்ச நேரம் வைத்து, தாளித்த பின், போட்டு கலந்து, சில நிமிடங்களுக்கு அப்புறம், transfer to a shallow non-stick frying pan... spread... ஒத்தை ஒத்தையாக..சிம் இல் வைத்து, அப்படியே விட்டு விட்டால், கொஞ்ச நேரத்தில் crisp கரி தயார்.
வாழை, உருளை,சேனை இதை எல்லாம் கூட தளித்த பின் transfer to a shallow non-stick frying pan... spread...
2. பருப்பு உசிலிக்கு முதல் நாளே அரைத்து, இட்லி தட்டில் ஊற்றி, வெட்டில் வைத்து, எடுத்து, fridge இல் வைத்து, மறு நாள் உதிர்த்து உசித்தால், என்னை அதிகம் இல்லாமல், உசிலிக்கலாம்.
3 . சாம்பாருக்கு அரைக்க வறுக்கும்போது, ரொம்ப வறுக்காமல், 75 % வறுத்தால் போதும் வாசனையாக இருக்கும்
4 . இட்லி க்கு வெங்காய சாம்பார் செய்யும்போது, அரைப்பதற்கு, தனியா, பொட்டுக்கடலை (கடலை பருப்புக்கு பதில்), வெங்காயம், தேங்காய் - பச்சையாக (வறுக்காமல்) அரைத்து, கடுகு, வெந்தயம், மி.வற்றல் தாளித்து, சின்ன வெங்காயம் வதக்கி புளி குறைவாக விட்டு, ஒரு தக்காளி கட் பண்ணி போட்டு, வெந்த காரட் ஒன்று போட்டு (நறுக்கி தாங்க..!!!), சாம்பார் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து, ரொம்ப நேரம் கொதிக்க விடாமல், பருப்பு, அரைத்த விழுது சேர்த்து, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
5 . பருப்பு போடும்போது, வெந்த பருப்பை மிக்ஸ் யில் ஒரு சுற்று அரைத்து விடுவேன். ரசம், சாம்பாரில், முழித்து பார்க்காமல் இருக்கும்.
6 . ஊத்தப்பத்துக்கு , பச்சை அரிசி ஒரு கப், புழுங்கல் அரிசி ஒரு கப் ஊற வைத்து, துவரம் பருப்பு 3 / 4 கப், வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து ஊறவைத்து, தனி தனி ஆக, அரைத்து, (பருப்பு, வெந்தயம் கொட கொட ன்னு அரைக்கணும்) , உப்பு சேர்த்து, கலந்து, கொஞ்சம் அதிகமாக புளிக்க வைத்து, சின்ன தாக வெட்டிய தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை , துருவிய காரட் எல்லாம் தனி தனியாக வைத்துக்கொண்டு, கல்லில் கெட்டியாக தோசை ஊற்றி, veg தூவி, சிம் இல் வைத்து, எக்ஸ்ட்ரா எண்ணெய் ஊற்றி, திருப்பி போட்டு, நன்றாக வேக வைத்து, கொத்த மல்லி சட்னி உடன் சாப்பிடவும். (சரஸ்வதி, கரென்ட் போவற்கு முன்னாள் சட்னி அரைக்கவும் !!)
7 . சப்பாத்திக்கு செய்த கரி, salad ஏதாவது மிஞ்சினால், கவலை வேண்டாம். மிக்ஸ் இல் அரைத்து, stuffed பராத்தா செய்யலாம்
இதை எல்லாம் படித்து, முத்து லக்ஷ்மி மாதிரி "அதான் எனக்கு தெரியுமே, அதான் எனக்கு தெரியுமே" என்று சொல்கிறவர்கள், "அதாங்க எனக்கு தெரியாது" என்கிறமாதிரி ஏதாவது எழுதலாம். !!!!!

அப்பாவோட மாமா ..

மாயவரத்தில் அப்பாவோட மாமா .. காவிரி கரையில ஆக்ராஹாரத்தில பெரிய வீடு... என்ன அப்பா ஒரு தரம் அழைச்சிண்டு போயிருக்கா..
அப்பா, ஹை ஸ்கூல் படிச்சது மாமாவாத்துல தங்கி...
அப்போல்லாம் இது ரொம்ப சகஜம்... உறவுக்காராத்துல தங்கி படிக்கிறது...
சாப்பாட்டுக்கு காசு குடுக்கறது, அவா திட்டராளா, அடிக்கராளான்னு பாக்கறது, சாப்பாடு சரியா போடராளா ன்னு கவலைப் படறது... ஒண்ணும் கிடையாது...
அவாத்து வழக்கம் என்னவோ அதத்தான் தங்கி படிக்கிற குழந்தையும் follow பண்ணும்... எதிலும் வித்தியாசம் பாராட்ட மாட்டா..
அம்மா அப்பாவ விட்டு இருக்கானே ன்னு கொஞ்சறதும் இல்ல... நமக்கு பாரமா இருக்கானே ன்னு மனசால கூட நேனைக்கறதும் இல்ல.
அப்பா, குத்தமாகவோ, சோகமாகவோ அல்லது ஸ்பெஷல் ஆகவோ தன் மாயவரம் life பத்தி சொன்னது இல்ல. ஏன்னா.. எல்லாமே நார்மலா தான் உணர்ந்திருக்கா !!
காவிரியில் தினமும் மணிக்கணக்கில் நீச்ச்சலடித்தது பத்தி நெறைய சொல்லி இருக்கா.

Saturday, October 28, 2017

Photo......





பழைய நாட்களில் photo எடுக்கும் வழக்கம் அவ்வளவாக கிடையாது.
தஞ்சாவூரில், எனக்கு சுமார் 5 வயது இருக்கும்போது, அப்பா, ஒரு group photo எடுக்க decide பண்ணினார்.
நாங்க sisters எல்லாம் ஒரே துணியில், பாவாடை, சட்டை , தாவணி...uniform !! (நான் மட்டும், அதே துணியில், என் life லேயே போட்ட ஒரே கவுன் !!)
eldest sister புடவை.
என் சின்ன அண்ணா.. நல்ல சட்டை இல்லை என்று ஒரே அழுகை... கண்ணெல்லாம் சிகப்பு ! போட்டோவிலும் தெரியும் !
என் அம்மா அந்த போட்டோவில் super look !! she must have been around 37/38 yrs. (i have separated it & saved)
கல்யாணத்துக்குப்பிறகு பிறகு, எங்கப்பா உத்தரவு படி, முதல் வேலை...
Mount Road G.K.Vale இல், நின்று கொண்டு ஒரு full size photo & பாதி (bust size) photo ...
right side daughter or d' in law... left side s' in law or son. .... same pose !!
எல்லாரும் எடுத்து ஒரு காப்பி அப்பாவுக்கு...
அப்பா ஆத்தில்.. ஹால் சுவற்றில் வரிசையாக.. ஒவ்வொருத்தருக்கும் இரண்டு போட்டோ... age order இல் மாட்டப்பட்டிருக்கும்...
half - one row... full one row...
இதை தவிர...
M.S.Subbulakshmi, D.K.Pattammaal, N.C.Vasanthakokila, U.R.Jeevarathinam !!
(coming to think of it, why no male singer like GNB, Madurai Mani Iyer, Semmangudi, Ariyakkudi .. etc. who were very famous then ??)
நான், என் கல்யாண reception saree, Black beeds necklace போட்டு எடுத்திருந்தேன்.
என் புக்காத்தில் அந்த மாதிரி எடுக்கும் பழக்கம் இல்லை..
(with great difficulty i got permission to take the photo for my father's sake 5 months after marriage !!)
என் படத்தை பார்த்ததும்.. மாமியாருக்கு தன பெண் எடுக்க வில்லையே என்று ஆதங்கம்.
3 years முன்னாடி கல்யாணமாகி, 2 வயது குழந்த இருந்த , என் நாத்தனாரை வர சொல்லி, அதே புடவை, அதே ரவிக்கை, அதே கருகமணி மாலை, அதே போல் ஒற்றை பின்னல், நிறைய மல்லிகை பூ (இரண்டு பக்கமும் தெரிய வேண்டும் !!) ... அதே G.K.Vale இல், அதே மாதிரி இரண்டு போட்டோ எடுக்க வைத்தார் !!
அடுத்த நாத்தனாருக்கு, 5 வருடம் கழித்து கல்யாணம். அந்த புடவையை பத்திரமாக வைத்திருந்து...
அதே புடவை, அதே......, அதே.......அதே.... அதே.... அதே.... போட்டோக்கள் !!
7 வருடங்கள் கழித்து... மச்சினர் கல்யாணம்...
அதே புடவை, அதே......, அதே.......அதே.... அதே.... அதே.... போட்டோக்கள் !!
25 வருடங்களுக்கு பிறகு, என் கடைசி மச்சினனுக்கு கல்யாணம் ஆனபோது...
அப்பா... அந்த புடவை இல்லை...!! (உழைத்து உழைத்து உயிரை விட்டு விட்டது !!)

Friday, October 27, 2017

பழைய நாவல்கள்.......

இந்த பழைய நாவல்கள் படிக்கறதே ஒரு சுகம்...
அக்ரஹாரம்; 10/12 வயசுல 4 நாள் கல்யாணம்; அதோட விதரணை....
4000 ரூ. எதிர் ஜாமீன் குடுத்து, அக்ரஹாரட்தை அடைத்து பந்தல் போட்டு, 6 நாள் அங்கே ஒரு வீட்டிலேயும் அடுப்பு மூட்ட மாட்டா... ஒரு வேளைக்கு 500 பேர் போல் சாப்பாடு .... பண்ணை ஆட்களை சேர்த்து... துணி மணி , பட்சணம் பாடி... வெத்திலை சீவல் எல்லாம் சேர்த்து, 6000 ரூ. ல அமர்க்களமான கல்யாணம். மொத்தம் 10000 ரூ. எல்லாம் அப்பா, நிலத்தை வித்து, செய்வார். அதுவும் எப்படி- பத்துக்கு அஞ்சு பழுதில்லாம...
சினிமாவா.. 2 அணா குடுத்து பாத்துட்டு வருவா.. இது நானே பண்ணி இருக்கேன். 2 அணா டிக்கட், 1 அணா பாட்டு புஸ்தகம், காலணா கடலை, காலணா கமர்கட்டு... அம்மா குடுத்த 4 அணாவில பாக்கி அரை அணா திருப்பிக் குடுத்திருக்கேன் !!
கல்கி நாவல் ன்னா.. 500 ரூ. க்கு 50 பவுன் நகை; கையில 10/20 ரூ வெச்சுண்டு கல்காத்துக்கு பயணம். அன்னிக்கு தீர்மானிச்சு, அன்னிக்கே ரயில் ஏறுவா... "ஏண்டி அம்மா, இங்கே வறயாடி சித்த..." இது, பெண் அம்மாவை கூப்பிடுவது...
எங்கம்மாவே தன்னோட சித்திய (step mother) வாடி போடின்னு பேசுவா !! வேடிகையா இருக்கும் !!
கல்கிக்கு வருவோம்... தியாக பூமில, ஒண்ணுமே தெரியாத பட்டிக்காட்டுப் பொண்ணு, கல்கத்தாவில போய், மாமியார்ட்ட கஷ்டப்பட்டு, 8 மாசம் pregnant ஆ இருக்கச்சே , தனியா ரயில் ஏறி கிராமத்துக்கு (கும்பகோணம் பக்கம்) வருவா.. கையில் சில்லறை.. அங்கே அப்பாவை காணாம , பட்டணத்துக்கு போவா.. பட்டணத்துல சுத்தி "சம்பு சாஸ்திரி வீடு எதுன்னு தெரியுமா.. " ன்னு கேட்டுண்டே சுத்தி, மயக்கம் போட்டு, பிரசவம் ஆகி (செலவில்லாம ஆஸ்பத்திரில), ஒரு பெஞ்சியில தூங்கிண்டிருக்கற அப்பாவ பாத்து, குழந்தைய அவர் பக்கத்துல விட்டுட்டு, பம்பாய்க்கு ரயில் ஏறி , 6 வருஷம் கழித்து, 5 லக்ஷம் சொத்து இருக்கிற, ரொம்ப பணக்காரியா (!) நாகரீகமா திரும்பி வருவா...
இந்த நாவல் எல்லாம் லேசில் முடியாது... நம்ம மெகா சீரியல் மாதிரி இழுத்திண்டு போகும்.. coincidence ன்னா , அப்படி ஒரு coincidence.. 1000 சம்பவங்கள்...
பேரெல்லாம் இப்படித்தான்... அம்மாளு, அம்புலு, அம்பி, பட்டாம்பி, பாச்சா, சம்புவய்யர், பாப்பா, சீதா... இப்படித்தான் ... நிறைய சொல்லிண்டே போகலாம்.
இதே சிவசங்கரி பழைய வாழ்க்கை பற்றி கதை களம் அமைச்சால், பாண்டி ஆடற 8 வயசு பெண்ணுக்கு, 16 வயசு பையனோட கல்யாணம்.. அந்த கல்யாணத்துக்கு அப்பளம் இடுவதிலிருந்து வர்ணனை... அந்தோ பரிதாபம்... 10 வயசுல அந்த பெண்ணோட ஆம்படையான் செத்துப் போயிடுவான்... 14 வயசுல நார்மடி புடவை கட்டிண்டு... அடுக்களையில் பூந்தா.... ஆயுசு பரியந்தம் சமையல் அறை வேலை தான்... அந்த ஆயுசு ங்கறது 40/45.
தமிழ் ரொம்ப அழகு. எங்கப்பாவே எண்பதுக்கு , எம்ப்ளது ன்னு சொல்லுவா. 980 க்கு தொளாயிரத்து எம்ப்ளது ம்பா ... அது ஒரு வழக்கு தஞ்சாவூர் பக்கம்.
தஞ்சாவூர் அக்ரஹாரம் தமிழ் அப்படி ஒரு அழகு. அதில வளந்த நான்தான், போன "வேலைக்காரி லீவு" கதையில "கலீஜ்" ன்னு எழுதினேன் !!
இன்னும் சொல்லிண்டே போகலாம்... அவ்வளவு எண்ணங்கள் 

பிறந்த நாள்......

எங்கம்மாவாத்தில் எல்லார் பிறந்த நாளும் கொண்டாட வசதி இல்லை. அன்று ஒரு பாயசம் மட்டும் உண்டு.
நான் லக்கி. எனக்கு 3 ம் தேதி பிறந்த நாள். அப்பாக்கு சம்பளம் 1 ம் தேதி வரும். கையில் கொஞ்சம் பணம் புரளும்
(ஒன்றிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... தேதி 20 லிருந்து 30 வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம்)
எனக்கு சீட்டியில் (அது ஒரு வகை துணி) பாவாடை சட்டை உண்டு. (என் வாழ்க்கையில் நான் ஒரே ஒரு கவுன் தான் போட்டிருக்கிறேன்). 
அப்போதெல்லாம் சாக்கலேட் கொடுக்கும் வழக்கம் கிடையாது - யாருக்குமே.
டிசம்பர் மாதம் ரோஜா சீசன். 4 அணாக்கு க்கு 30/40 பூ கிடைக்கும்... ரோஸ் நிறத்தில். அப்போதெல்லாம் நான் வேற கலர் ரோஜாவே பார்த்ததில்லை. !!
ரோஜா வாங்கி, துணிப்பையில் (பிளாஸ்டிக் இல்லாத நல்ல காலம்) போட்டு தருவா. ஸ்கூலில் எல்லா டீச்சருக்கும் குடுப்பேன். எல்லா டீச்சரும், சந்தோஷமா தலையில் வெச்சுப்பா. எனக்கும் சந்தோஷமா இருக்கும்.
இப்படியாக என் பிறந்த நாள் இனிமையாக கழியும்.
ஆனால் நான் S.S.L.C. படிக்கும் போது (school final) ஏதோ காரணத்தால் அப்பாக்கு எனக்கு புதுசு வாங்க முடியல்ல. அன்றைக்கு கண்ணீர் விட்டு அழுதா. பசுமையா நினைவிருக்கு. நான்தான், "நான் என் தீவாளி டிரஸ்ஸை போட்டுக்கறேன்" என்று சொல்லி சமாதானம் பண்ணி, ரோஜா மட்டும் எடுத்துண்டு போனேன்.
மறக்க முடியவில்லை.... மறக்க முடிய வில்லை...இப்போது எவ்வளவு தான் கொண்டாடினாலும், அது அதுதான்... இது இதுதான்.

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...

1. வாழப்பூ நறுக்குகையில், பிய்த்துப் போடப்பட்ட மடலை ஆளுக்கொன்று எடுத்து வைத்துக் கொண்டு, அன்று சாப்பிடும்போது, அந்த மடலில் கறி போட்டுண்டு சாப்பிட்டது...
2. வெண்டைக்காய் நறுக்கியதும், அந்த தலைப்பாகத்தை (வெட்டி ஒதுக்கியது) நிறைய எடுத்து, முகம் பூர ஒட்டிக்கொண்டு திரிந்தது...
3. வாழப்பூ உள்ளிருக்கும், கடைசி பருப்புக்கு சண்டை போட்டு ஜெயித்து சாப்பிட்டது...
4. வெண்ணை உருக்கி மீந்த கசந்டில் சர்க்கரை கலந்து சாப்பிட்டது...
5. பழுத்துப் பிளந்து நீட்டவாக்கில் இருக்கும் வெள்ளரிப் பழத்தை வெல்லச் சர்க்கரை சேர்ர்த்து சாப்பிட்டது...
6. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டு, அப்பா குடுக்கும் பழைய பேப்பரில் சக்கையை துப்பி , குப்பைத்தொட்டியில் வாசலில் எரிந்தது....
7. சரோஜா தேவியைப் பார்த்து...
இரட்டைப்பின்னல் போட்டு மடிச்சுக்கட்டியது, அந்த பின்னலில் அடிவழியாகக் குடுத்து, இரண்டு பக்கமும் கொண்டு வந்து, மல்லி வைத்துக்கொண்டது...
நடுவில் மையால் ஒரு திலகம்- அதன் இரண்டு பக்கமும் இரண்டு சற்றே சிறிய திலகம்-அடியில் ஒரு சின்ன கொடு - அதன் அடியில் ஒரு சின்ன வட்டப் போட்டு... வைத்தது...
கண்ணில் மையிட்டு, திக்காக குருவி இழுத்தது...
அனுபவமே இல்லாமல், அர்த்தமே புரியாமல்.. "காத்திருந்தேன் காத்திருந்தேன்"... "காதலொன்றே இல்லையென்றால் கன்னி மனம் கருகி விடும்..." என்று அனுபவித்துப் பாடியது...
8. விடியற் காலை 4 - 6 மணிக்கு ரேடியோ மலேசியா கேட்டது...
9. அப்பா வருவது தெரிந்ததும்... சட்டென்று ரேடியோ வில் கர்நாடக கச்சேரி வைத்து, சமத்துப்போல் வேஷம் போட்டது...
10. விகடனுக்கு காலையில் தொடர் கதைக்காக சண்டை போட்டு, பிடுங்கி படித்தது....
11. கல்லுரல் மேல் உக்காந்து, குகுட்டி அடுப்பில் அம்மா போட்டுக்கொடுக்கும் காப்பியை அம்மாவைப் பார்த்துக் கொண்டே குடித்தது...
இன்னும்...இன்னும்... எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்... ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்...
மறக்க முடிய வில்லை... மறக்க முடியவில்லை...
அது ஏன் அம்மாவாத்தில் இருந்த நினைவுகள் மட்டும் அழுத்தமாக...??
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...!!.. 1.

Pinnal........

ஒரு 12 வயது பெண்ணுக்கு தலை வாரி பின்னி விட்டேன். - உடனே எனக்கு என் அம்மா ஞாபகம்.
ஸ்கூல் போகும் நாளில் இரட்டை பின்னல்தான் என்றாலும், லீவு நாட்களில், ஒத்தை பின்னல் போட அம்மாதான் வாருவாள்.
அதுவும் எப்படி.. ? நின்னுடுண்டா..? ஊஹும் !
எண்ணெய் ஜாடி, சீப்பு, ரிப்பன், சமயத்தில் வாழை நார் எடுத்துண்டு, வெளிச்சம், காத்து இருக்கும் இடமா பாத்து, மேல் படியில் உட்கார, நான் கீழே. 
முதல் ஒரு கரண்டி முட்டை எண்ணெய் எடுத்து, இடது கையில் வெச்சுண்டு , ஒரு விரலால் தொட்டு, உச்சந்தலை, அப்புறம், குழைத்து தலை முழுதும், மயிர் கால்களில் படும்படி- இன்னொரு கரண்டி முட்டை எடுத்து, குழைத்து, கீழே முடியில்.
பிறகு சிடுக்கு எடுக்கும் படலம். கையால் கொஞ்சம் ஆத்தி விட்டு, சீப்பால் வலிக்காமல், வெட்டு வெட்டு என்று இழுக்காமல் (கொஞ்சம் வலித்தாலும் பொறுத்துக்கணும்) ..
அப்புறம் முன்னாலே வழிச்சு, தழச்சு, இழைய வாரி, வகிடு எடுத்து, மூணு கால் பிரிப்பாள்.
வலது பக்க காலை முதலில் போட்டு, பிறகு இடது.
அப்போ ஒரு இருக்கு இருக்குவா பாருங்கோ.. என் தலை, கழுத்து ரெண்டும் முன்னால் போய், பின்னால் வரும் .
"ஆ...!" என்றால் அதுக்கொரு குட்டு. "அப்புறம் தளர்ந்து போயிடும்" ன்னு ஒரு explanation .
இப்படி இரண்டு கால் போட்டவுடன் ஒரு "அழகு" வாரல் ஆரம்பிக்கும். அதாவது...
இடது பக்க காலை போட்டால், இடது கை கட்டை விரலால் பிடிச்சுண்டு, வலது கை சீப்பால் அந்தக் கால் மேல் "வழ வழ" ன்னு வாருவாள். பிறகு, வலது பக்க காலை போட்டு, அதை ஒரு வாரல்..
இப்படியே பொறுமையாக, அலுக்காமல், ஒவ்வொரு காலையும், "இழைய" வாரி, நுனி வரைக்கும் பின்னி, ரிப்பன் அல்லது நார் வைத்து நுனியை பின்னி, முடிச்சு போட்டு, பின்னலை ஒரு இழு இழுத்து, உள்ளங் கையால் மேலே இருந்து, கீழ் வரை தட்டி, கொஞ்சம் மடித்துக் கட்டி, "தாடையை" பிடித்து, வெடுக்கென்று திருப்பி, சீப்பால் "முன்னுச்சு" வாரி, முதுகில் ஒரு குத்து குத்தி, "எழுந்திறேன்" ன்னு ஒரு அதட்டல். - யாரோ ரொம்ப ஆசையா உக்காந்திண்டே இருக்காப்போல !
யாராவது தலையை குடுங்களேன். இழைய வாரி பின்னி விடுகிறேன் !!

விரதங்கள்......

எங்காத்தில இருந்த அத்தை சில பல விரதங்கள் எடுத்துண்டா ..
அதில ஒண்ணு - அரச மரம் சுத்தறது...
அதாவது... திங்கள் கிழமை அமாவாசை வந்தா ரொம்ப விசேஷம்.. அன்னிக்கு அரசப் பிரதட்சிணம் பண்றது ன்னு ஒரு ஐதீகம்... அதை விரதமா எடுத்துண்டு, அத்தை பண்ணுவா... 108 பிரதட்சிணம் பண்ணனும்...
எண்ணிக்கை தவறாம இருக்க, ஏதாவது எடுத்துண்டு போவா ..
வேர்க் கடலை, போட்டுக் கடலை உருண்டைகள், பூவம்பழம் என்று சில சௌகரியமான சாப்பிடும் ஐடங்கள் ...108 எண்ணி. 
அரச மரத்தடியில் அந்த தூக்க வெச்சிட்டு, பக்கத்தில ஒரு காலி பாத்திரம்... (நான் காவல் இருப்பேன் - நான் நிச்சயம் பூனை இல்லை !!)
ஒவ்வொரு பிரதக்ஷினத்துக்கும், ஒவ்வொண்ணா எடுத்து காலி பாத்திரத்தில் போடுவா...
108 முடிஞ்சதும், கோவில்ல எல்லாருக்கும் குடுப்பா... நான் எடுத்துக் குடுக்கறச்சே எனக்கு ரொம்ப பெருமையோ பெருமையா இருக்கும்.. (அதாங்க.. எனக்கு குடுக்கப் பிடிக்கும் !!)
(சில பேர், மஞ்சள் ,ரோஜாப்பூ என்று எடுத்துண்டு போவா) எங்கத்தை அதெல்லாம் avoid பண்ணிய காரணம்... புரிந்திருக்கும் !!
இன்னொரு விரதம் "ரிஷி பஞ்சமி" ... ஆத்துலேயே ஹோமம் .. அன்னி பூரா "கொலை" பட்டினி
இந்த விரதத்தை எல்லாம் "முகிக்கறது" (முடிக்கறதைத் தான் அப்படி சொல்லுவா !!) ன்னு பண்ணுவா...
அதாவது... விரதம் எடுத்துக்கொண்டவர்கள், தாங்கள் சிவலோகம் செல்வதற்குள் முடிக்க வேண்டும்... அது எப்போ என்று தெரியாததால்... சில வருடங்கள் செய்த பிறகு, முடிக்கும் பூஜையை முடித்து விடுவா... ஆனால் விரதம் தொடரும் கடைசி வரை...
பூஜை என்பது... சாஸ்திரிகளை கூப்பிட்டு, ஹோமம் பண்ணி, தம்பதி பூஜை பண்ண வேண்டும்... அந்த தம்பதி, அன்று, பார்வதி, பரமேஸ்வரன் மாதிரி.
எங்காத்தில வேற யாரு... அம்மா, அப்பா தான்...
புதுப்புடவை குடுத்து, மாங்கல்ய தாரணம் உண்டு...
இப்படியே எங்கம்மா கழுத்துல... wedding - 2; shashtiapthapoortthi - 1; sadhaabishekam - 1 ; virathangalilvandhathu - 3 ... என்று மஞ்சள் கயிற்றில் 7 திருமங்கல்யங்கள்...
அதுக்கான சமையல், ஏற்பாடுகள் எல்லாம் அம்மா அலுக்காம பண்ணி இருக்கா, அவ்வளவு வருஷம் ... சுமார் 25 years !!

Thursday, October 26, 2017

250 ரூ. ஞாபகம்........

 250 ரூ. ஞாபகம்.
Late seventees இல் என்று ஞாபகம்.. பூனாவில் இருந்தேன். அப்போது மார்க்கெட்டில் புதிதாக ஒரு சாமான் வந்தது..
சுமீத்தில் சப்பாத்தி மாவு பிசையும் அட்டச்மெண்ட்..... 250 ரூ. என்றதும் உடனே பல நன்மையான காரணங்களை சொல்லி, வாங்கி விட்டேன்.
ஒரு எலெக்ட்ரிக் இட்லி கிரைண்டர் சைஸ் இருந்தது.... ஆஹா.. கொடுத்த காசுக்கு இவ்வளவு பெரிய பாத்திரமா- அதுவும் மூடியுடன்!!.
மறு நாள் அதில் மாவு பிசைய ஆரம்பித்தேன். அதில் மிக்சியில் பதிக்கும் அடி பாகம் ஒரு சைடில்.. நடுவில் இல்லை !!
எப்படியோ, தூக்கி பொருத்தி விட்டேன்.. (இதில் என் friends எல்லாம் நான் மாவு பிசைவதை பார்க்க வரேன்னாங்களா...நல்ல வேளை .. அவர்களுக்கு தெரியாமல் ஒரு trial - practical எக்சாமுக்கு ப்ராக்டிஸ் மாதிரி ஒரு சிறிய நடுக்கம்...)
ஆச்சு... கொஞ்சம் மாவு போட்டேன்... ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டேன்.. கொஞ்சம் தண்ணீர்..அப்புறம்.. ஒரு டிர்ர்ரர்ர்ர்.......
திறந்து பார்த்தால் - மாவை காணோம்.. உள்ளே நன்றாக தலையை விட்டு தேடினேன்.. அடியில் பிசு பிசுப்பாக ஏதோ இருந்தது..
ஒ... நான் போட்ட கொஞ்ச மாவு அந்த கடோத்கஜன் வாய்க்கும், வயிறுக்கும் போரல்ல...
சரி... நிறையவே போடலாம்... பிரிஜ்ஜில் வைத்து 5 நாள் ஓட்டலாம் ...ம்ன்னு .. கொஞ்சம் பாசிடிவ் ஆக யோசித்து...சுமார் இருபது சப்பாத்திக்கு தேவையான.. மாவை போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு , மறுபடியும் drrrrrrrrrrrrrrrr - அதிக நேரம். ஏதோ கடமுட சத்தம் கேட்க.. திறந்து பார்த்தால், மாவு சற்றே ஈரப்பதத்துடன் - முக்கால் வாசி மாவாகவே இருந்தது...
"இது பரவா இல்லை... தண்ணி ஜாஸ்தியாகத்தான் போகக் கூடாது" என்று எனக்கே சொல்லிக் கொண்டு.. தண்ணீர் விட்டேன்...மறுபடியும்.. (ஒரு..............)
திறந்து பார்த்தால், இந்த முறை, தண்ணீர் அதிகம் !! பரவா இல்லை என்று இன்னும் கொஞ்சம் மாவு...
இந்த சக்கர வட்டத்தில் கடைசியாக (நொந்து போய் ) எடுத்தது .. ஒரு இருபது பேர் கொண்ட குடும்பத்துக்கு !!
இப்போது குழப்பம்... குடும்பத்தை பெருக்குவதா... மாவை கூட்டுவதா.. கழித்துக் கொட்டுவதா... வகுத்து பிரிஜ்ஜில் வைப்பதா?
கடைக்காரன் demonstrate பண்ணும்போது, மாவு, உருண்டு திரண்டு... நன்றாக இருந்தது..
(இந்த அனுபவம் மட்டும் எல்லா பெண்களுக்கும் இருக்கும்..எக்சிபிசன் போகும்போது... அந்த கறிகாய் நறுக்கும் வேகமும், சீரான வெட்டுதலும்... ஆசையாக வாங்கி வந்தால் (அப்பாடா , இனி வீட்டு வேலை செய்பவளை எதிர் பார்க்க வேண்டாம் .. நாமே செய்து கொள்ளலாம் .. என்று வாங்கி வந்தால், நம்மை காலை வாரி விடும்.. இப்படியாக பாரதியார் பாட்டு போல்...(கூலி மிகக் கேட்பான்....)... வாங்கிய சாமான்கள் பலப் பல... vaccum cleaner சேர்த்து... இப்போது.. அவளுக்கு என்ன தேவையோ அவைகளை பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்து, பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்.."அமெரிக்காவிலிருந்து நல்ல கத்தி வாங்கிட்டு வாங்கம்மா " என்று ஒரு indent போட்டிருக்கிறாள். கடைக்குப் போனால் கவிதாவுக்காக என்ன வாங்கலாம் ? என்றே யோசிக்கிற அளவு அவளுடைய ஆளுமை)
சரி, மாவுக்கு வருவோம்.. உருளவும் இல்லை , திரளவும் இல்லை.. வெளியில் பாத்திரத்தில் கொட்டி, கொஞ்சம் எண்ணெய் விட்டு, சேர்த்து, அடித்து பிசைந்து, ஒரு வழியாக பிரிஜ்ஜில் வைத்தேன்...
அதற்கப்புறம், அந்த பாத்திரங்களை அலம்பப்பட்ட பாடு இருக்கே ? தாவு தீர்ந்து விட்டது... மேடை நிறைய பாத்திரம்... எல்லாவற்றையும் துடைத்து, எடுத்து, தள்ளி வைத்து விட்டு... மேடையை தேய்த்து சுத்தம் பண்ணி , நிமிர்ந்தால் !! அப்பாடா... "நான் போருக்குப் போனேன் .. அங்கு போர்க்களம் ஆனேன் " என்று பாட வேண்டி இருந்தது. )ஏதாவது புதிதாக வாங்கினால், ஒரு பத்து நாள் நானே தேய்த்து அலம்புவேன்.. வேலைக்காரி பாழாக்கி விடுவாளாம்.. அவளுக்கும் தெரியும்.. "இது ரொம்ப நாள் தாங்காது...நம்மிடம் தான் வரும் என்று..."
இந்த கஷ்டங்களை எல்லாம் வெளிக்காட்டாமல், சப்பாத்தி பண்ணி, இவரிடம் பெருமையாக, "நம் புது மெஷினில் பிசைந்த மாவு" என்றேன்.
ஆச்சு... இன்னும் நாலு நாளைக்கு ராத்திரி சப்பாத்தி தான் என்று மறு நாள் மாவை எடுத்தால், கல்லு போல இருக்கு !! முதல் லேயே எடுத்து வெளியே வைத்திருக்கனும் போல இருக்கு !! "அனுபவம் புதுமை... அவரிடம் சொன்னேன்..."
இப்படியாக, very few டைம்ஸ் யூஸ் பண்ணி விட்டு, பரணில் ஏத்தினேன்...நல்ல வேளை - இவருக்கு ஞாபகம் இருப்பதில்லை.. !! நல்ல குணம்..
இப்படி நொந்து நூலாகி, "உனக்காச்சு, எனக்காச்சு" என்று கஷ்டப்பட்டு, சென்னைக்கும் லாரியில் ஏற்றி கொண்டு வந்து... அப்புறம் யார் தலையிலேயோ (ப்ரீ யாகத்தான்) கட்டினேன்.. அதன் அருமை பெருமைகளை சொல்லி... அன்று முதல் "அவளுக்கும் பகையானேன் "
அது இப்போது யார் வீட்டு பரணிலோ, அல்லது குப்பை யிலோ !!
(மறக்க முடிய வில்லை.... மறக்க முடியவில்லை...)

Monday, October 23, 2017

coffee puraanam Part 2

coffee puraanam Part 2

இதோட இந்த காபி கடைய மூடறேன்...
கணேஷ் wife பவித்ராவுக்கு, காபி போட  தெரியுமா இல்லையா என்று தெரியாது. 
(ஒண்ணு தெரிஞ்சுக்கோங்கோ... யாருக்கு நல்ல காபியின் ருசி தெரியுமோ, அவாதான் நன்னா காபி போடுவா)

கணேஷ் கல்யாணம் முடிந்து முதல் தடவை அமெரிக்கா கிளம்பினேன். 
அதனால்.. நான் கிளம்பும்போதே, மனதளவில் தயாராகத்தான் போனேன். 
(எல்லாரும் ஊருக்குப் போக pack பண்ணும்போது, முதலில் ஒரு சின்ன சாமி படத்தை பெட்டியிலே முதலில் வைப்பாள். நான், என் பில்டரையும் , காப்பி பொடியையும் தான் முதலில் வைத்தேன் !!)
ஒண்ணு சொல்லியே ஆகணும்... அஞ்சு வட நாட்டு சமையலில் கெட்டி. இப்போ சாம்பார் ரசமும்.
பவித்ரா நம்ம தஞ்சாவூர் சமையல் பிரமாதமாகப் பண்ணுவாள் 

ஊரிலிருந்து கிளம்பும்போதே.. இவர் "நான் போய் ஒரு மாதம் ஜாலியாக இருக்கப் போறேன். அவா  லைப் ஸ்டைல் எப்படி இருந்தாலும், எதையும் கண்டுக்காமல், மனதளவில் எதற்கும் வருத்தப் படாமல் "சூதனமாக" இருக்கப் போறேன்... " என்றார்.
அப்பாடா... இந்த "சூதனமாக" என்ற தமிழ் வார்த்தையை, சரண்யா ஒரு படத்தில், பிள்ளை வெளியூர் போகும்போது சொல்வாள். "சூதனமாக இருந்துக்கப்பா " என்று.
அந்த வார்த்தைக்குள் எவ்வளவு அர்த்தங்கள்... "சாமர்த்தியமாக இரு", "புத்திசாலியாக பொழச்சுக்கோ" "எல்லாரிடமும் அவாளுக்கு எத்த மாதிரி நடந்துக்கோ".. என்று சொல்லிக்கொண்டே போகலாம் !!

இப்ப நான் சமத்தாக... இல்லை இல்லை சூதனமாக நம்ம கதைக்கு வரேன்....
அப்பாடா... சுமார் இருபது மணி நேர பயணத்துக்கு அப்புறம்...போய்  சேர்ந்தேன். வீட்டுக்கும் போனேன் ...
நுழைந்து செருப்பை கூட அவிழ்க்க வில்லை.. குசலம் விசாரிக்க வில்லை. கணேஷ் "அம்மா, ஒரு நல்ல காப்பி போட்டுத்தா.." என்றான். (முதலில் டாக்ஸி யிலேயே பெட்டியில் இருக்கும் சமாச்சாரத்தை கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டான்)
சரி என்று, இவர் சூட் கேஸிலிருந்து உபகரணங்களை மேடையில் பரப்பினார். பில்டரில் பொடியை போட்டு, வெந்நீர் விட்டு, ஒரு குளியல் போட்டு வரதுக்குள்ள, அஞ்சு நட்சத்திர ஹோட்டல் ல ஒரு காப்பிக்காக அரை மணி நேரம் காத்திருக்கும் ஜென்மங்கள், காப்பி, காப்பி என்று கூப்பாடு. ஒரு வழியாக காபி போட்டுக் குடுத்து.. கணேஷ் ஆர்வமாக குடிப்பதை கண்ணார கண்டு... அப்புறமாகத்தான் வீட்டை பார்த்து, பவித்ராவிடம் பேசி எல்லாம் !! இது வரை ஒரு ஏமாற்றமும் இல்லை. அதான் எனக்கு தெரியுமே... எனக்கும் எவ்வளவு பக்குவம் !!!

பெரிய குண்டு அப்புறமாக வந்தது.
கொஞ்சம் பின்னோக்கி...
பவித்ரா research பண்ணிக் கொண்டிருந்தாள். இந்தியன் பாலிடிக்ஸில் . அதற்காக மூன்று மாதம் இந்தியாவுக்கு பயணம். நாங்கள் வந்ததும், எங்களுக்கு பதினைந்து நாட்கள் ஒதுக்கி வைத்து, தன் ட்ரிப் பை பிளான் பண்ணி இருந்தாளாம். ஆனால், சில பல காரணங்களினால் அவள் பிளான் மாறிப்  போக, இது தெரியாத நான் , "அய்யா ... பதினைந்து நாட்கள் நோ சமையல்... உக்காந்து சாப்பாடு" என்று
"காத்திருந்தேன், காத்திருந்தேன், காலமெல்லாம் காத்திருந்தேன், காத்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா"... "சங்கடமான சமையலை விட்டு, சங்கீதம் பாடப்போறேன்.." இன்ன பிற போன ஜென்மத்தில் கேட்ட பாடல்களை எல்லாம், அடி பிறழாமல் பாடிக்கொண்டு வந்தேன்.
அய்யகோ... "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்ற பாட்டுக்கு தள்ளப் பட்டேன்... நான் போனது செவ்வாய்... பவித்ரா இந்தியா கிளம்பியது வியாழன் ! செவ்வாய் இரவு சமைத்தது ரொம்ப மிஞ்ச, புதன் அவள் ஸ்கூல் போக, பையன் சொல்லி விட்டுப் போகிறான்,
"அம்மா, ராத்திரிக்கு ஜோரா வத்தக் குழம்பு வை " ன்னு.(இந்த டயலாக் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா.. ரமேஷும் அதே சொன்னான்..!!!)
ஆச்சு, வியாழன் பூரா, packing - மாலை நாலு மணிக்கு புறப்பாடு... இப்போ கிச்சன் என் ஆளுகையில்... எப்படி இருக்கும்...!!!
ஆனால், நான்தான் இப்போ மாறி விட்டேனே... அதையும் ஏத்துக்கொண்டு, கறிகாய் வாங்கி, நறுக்கி, சமைத்து, துடைத்து.... உங்களுக்கே சீக்வன்ஸ் தெரியும்..
ரமேஷ் வீட்டில் 49 வயதில்... இப்போ 70 வயதில்... "மாற்றம் ஒன்றே மாறாதது ... இல்லை இல்லை நம் வாழ்க்கையில் நிறைய "மாறாதது" நடக்கும்.

சரி ... இந்த காபி புராணத்தை  இப்படியே நிறுத்துவோம்.. (ஆனால் ஒண்ணு.. எனக்கும் நாக்கு நீளம்.. நல்ல காபி வேண்டும்.. அதை நான்தான் போட்டுக்கொள்ள வேண்டும் !!!)
ஆனால் ஒரே ஒரு சந்தேஹத்தோடு முடிக்கிறேன்...
சென்னையில் , என்காத்தில், குழந்தைகள் எல்லாம் சேர்ந்தால், எனக்கு முதல் காப்பி; அடுத்தது எழுந்திருப்பவர்களுக்கு தனியாக ஒரு தரம் கலக்கல்.. இப்படி ஒவ்வொருத்தருக்காக குடுத்து முடிக்க.. முதலில் சாப்பிட்டவருக்கு இரண்டாவது டோஸ்...நான் எரிச்சலில் சொல்வேன்.. "டீக்கடை மாதிரி பாய்லரில் கொட்டி வைக்கிறேன்.. எடுத்துக் குடியுங்கள்  என்று.. " அப்பவும் குழந்தைகள் "அம்மா, அப்பவும் நீதான் டம்ளரில் எடுத்து, கொண்டு குடுக்க வேண்டும் " என்பார்கள்.
அப்ப மட்டும் அந்த "அம்மா" வில் பாசம் பொங்கி வழிந்து ஓடும் !!!
மற்றபடி ரமேஷ், கணேஷ், அஞ்சு, பவித்ரா எல்லாரும் ஆசையாக இருப்பார்கள். 
இப்போது, ரமேஷ், இன்ஸ்டன்ட் வாங்கி வைத்து, காலை அஞ்சு மணிக்கு (அஞ்சு தூங்குகையில்) தானே கலந்து குடிக்கிறான்.
கணேஷ் , 'அமெரிக்கன் காபி, இட்டாலியன் காபி' என்று சொல்லி ஏதோ சில பல மெஷினில் போட்டு, சுவைக்கிறான்...

பெண் வீட்டுக்கு உரிமையோடு போனால்; காலையில்  முதல் சுப்ரபாதம், " அம்மா, காபி குடுக்கறயா ?'' 
இது எப்படி இருக்கு !!!!! 

Coffee Puranam Par 1

ஹும்ம்ம்ம்......
மொதல்ல கொஞ்சம் ஹிஸ்டரி சொல்லிடறேன். அப்போதான் புரியும்...
1967அக்டோபர் மாசம், 27 ம் தேதி, தட்டுத் தடுமாறி கலக்க ஆரம்பிச்ச காபி, 2017 October  24th  வரை, நாள் தவறாமல் தொடருகிறது. !!
எப்போதும் சொல்லிண்டே இருப்பேன்.... "மாட்டுப் பெண் வந்து காபி போட்டுக் கையில குடுக்கணும்... நான் சாப்பிடணும்; என்ன உக்கார வெச்சு சமச்சுப்
போடணும்- நான் சாப்பிடணும்..." ன்னு....
1992 - மே ... என் பெரிய பையன் கல்யாணம் ஆச்சு..
முதலில் பம்பாய் ல குடித்தனம் வெச்சு.. (நான் வெக்கலை... அவாளே வெச்சுண்டா...நான் எல்லார் கிட்டயும் பெருமையா சொல்லிண்டிருக்கேன்..."நான் சிறிசுகளை தொந்தரவு பண்ண இஷ்டப்படலை; அவாளே எல்லாம் சேர்ந்து செஞ்சு கத்துக்கட்டும்" ன்னு... என் நாத்தனார் கிட்ட எல்லாம் சொல்லிடாதீங்கோ.
நிற்க... ஆறு மாசத்தில்... பெங்களூருக்கு மாறினார்கள். ஏன்னா, அவளுக்கு அங்குதான் வேலை. நான் பாணிக் கிரகணம் பண்ண வில்லை. பையன் தானம் பண்ணிட்டு, சீதாபூரில் பிள்ளையை விட்டு விட்டு, "சமத்தா இருடா ன்னு" புத்தி சொல்லி... சென்னை வந்தேன்...
அப்பா... பெங்களூரு கிட்டக்க... ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டு, சிறுசுகளையும் கூட்டிண்டு ஆசையாய் போனேன்.
காலம்பர அடுக்களையில ஏதாவது சத்தம் கேக்கறதா ன்னு வெயிட் பண்ணினேன்- படுத்துண்டே... கேட்டுது..."அம்மா, காபி போடறையா" ன்னு ரமேஷின் குரல்..
தூக்கி வாரிப் போட்டது... "குழலினிது, யாழினிது..." குறள் எல்லாம் குழந்தைக்கு 5 வயசு வரைக்கும் தான். வள்ளுவருக்கு பசங்க இல்லியோ ?? இருந்திருந்தா... இன்னும் 1330 குறள் எழுதி இருப்பார் !!!
என் மாட்டுப் பொ ண் , உ.பி. அவளுக்கு காபி க்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது... அவளும் ஒண்ணும் சாப்பிட மாட்டா. தெய்வமே என்று, (நல்ல வேளை... உஷாரா, பில்டரும், பொடியும் கொண்டு போனேன். காபி போட்டு குடுத்து நானும் சாப்பிட்டேன்.
ஆச்சு... ஒரே சஸ்பென்ஸ் ... அப்பாடா... ஒரு உப்புமா வந்தது டிபனுக்கு. சந்தோஷப்பட்டு முடிக்கறதுக்குள்ள, ஒரு சின்ன இடி.
ரெண்டு பெரும் ஆபீஸ் கிளம்ப, "அம்மா , சாயங்காலம் ரெண்டு பெரும் 7 மணிக்குத் தான் வருவோம். வத்தக் குழம்பு பண்ணி சமைச்சு வெச்சுடுன்னான். மத்தியானத்துக்கு, உங்களுக்கு ஏதாவது பண்ணிக்கோ ன்னு இன்ஸ்ட்ரக்ஷன் வேற.
அது மட்டுமா... வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது... டைம் ஒத்து வரலையாம். வாரத்துக்கு ஒரு தரம் பெருக்கி துடைப்பாளாம்.
யாரை நொந்துக்கறது. ? வீட்டை பெருக்கி, துடைத்து, (அப்போ குச்சி மாப் எல்லாம் கிடையாது)அழுக்கு கிச்சனை கிளீன் பண்ணி, சமைச்சு, துணி தோய்த்து, வேலையே முடித்து, பிரிஜ் ஐ பாத்தா ... காலி. !!! தேதி போடாமல் ... குட்டி குட்டி டப்பாவில் சாப்பாடு... chronological ஆர்டர் தெரியாததால்... எல்லாத்தையும் கொட்டி, கிளீன் பண்ணி...மத்தியானத்தை ஒப்பேத்தி...
கடைக்குப் போய் காய் கரி வாங்கி வந்து, சமைச்சு, மறுபடியும் மேடையை கிளீன் பண்ணி, காத்திருந்தால்....
இரண்டு பெரும் வந்தார்கள். எல்லோரும் சாப்பிட்டோம். ஒரு வார்த்தை - அஞ்சு (அதான் அவள் பெயர்) வாயிலிருந்து ... ஒரு எதிர் பார்ப்போடு காத்திருந்தால்... ஒரு கமென்ட் இல்லை... வீட்டு சுத்தத்தை பத்தி...
ஹும்ம்ம்ம்... இப்படியே நாலு நாள் ஒட்டி விட்டு, "பையனுக்கு பாவம்; அம்மா கை மணம் வேண்டி இருக்கு" ன்னு நானே சமாதானம் பண்ணிண்டு வந்து சேந்தேன்.
அப்போலேர்ந்து, எப்போ போனாலும், காபி போடி, சாம்பார் பொடி, அரிசி மாவு ன்னு எடுத்துண்டு போய், சென்னைக்கு பதிலா, பெங்களூரில் சமைத்து சாப்பிட்டு வருவேன்.....
ஆனால் .... இப்போ மகா சௌகரியம்... அவர்கள் ஆபீஸ் போனதும்... நான், என்னை சுத்தி 5 ஆட்கள் ... கவலையே இல்லை.. ஆனால் காப்பி மட்டும் நான் தான். !!
இது முதல் பார்ட்.
இதை கவனித்திருந்த கணேஷ்..."அம்மா... உனக்காக நான், நீ கை காட்டும் அய்யர், தமிழ் பேசும் பெண்ணை கல்யாணம் பண்ணிண்டு, என் wife சமைத்துப்போட, நீ ஜம்மென்று காலை நீட்டி உக்காந்து சாப்பிடனும். உன்னை நான்தான் வெச்சுப்பேன்" என்று கூற நெகிழ்ந்து போயிட்டேன். ......
அவன் என்னவோ genuine ஆகத்தான் சொன்னான்.. ஆனால் அவன் ஒன்று சொல்ல, நான் நம்ப, தெய்வம் ஒன்று பிளான் பண்ணி விட்டது !!
இது பார்ட் ஒன்...... 

Sunday, October 22, 2017

மன்னி ........

"மன்னி " (அண்ணி) என்பது ஒரு நல்ல உறவு.
ஒரு நடுத்தரத்துக்கு கீழே இருந்த, 9 பிறந்து, 7 வளர்ந்த குடும்பத்தின், கடைசி குழந்தையாக, செல்லமாக, சலுகைகளுடன், வளர்க்கப்பட்டு,....அம்மா, அப்பா, 5 குழந்தைகள் உள்ள குடும்பத்தின், முதல் மருமகளாக அனுப்பப்பட்டு...."மன்னி" என்று நாலு கீழ் கிளைகள் அழைத்த பொது...மகிழ்ந்துதான் போனேன் !! எவ்வளவு இனிமையான பொறுப்புகள்
விடி காலையில் நான் செய்து கொடுக்கும் tiffin ஐ , ஆசையோடு சாப்பிட்டு college க்கு செல்லும் பெரிய மைத்துனன்...
"மன்னி, record எழுதி குடுங்களேன் " என்று என் திறமையை மதித்து , வேலை கொடுத்த நாத்தனார்...
"மன்னி சாதம் ஊட்டட்டும் " என்று சாப்பிட்ட 7 வயது மச்சினன்....
எனக்கு ஏதாவது உடம்பு முடிய வில்லை என்றால் உண்மையான பாசத்தோடு , இன்றும் பதறும் இந்த உறவுகள் !!
வீட்டிலே ஒருபுது உறவு வளைய வருவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட குடும்பம்...!!
50 வருடங்களுக்கு அப்புறமும் , இன்னமும் "மன்னி" என்று கூப்பிடும் குரலில் பாசம் தெரிகிறது....
kaalam antha paasatthai koottatthaan seithirukkirathu... kuraya villai !!
இப்போதும் சந்தோஷப்படுகிறேன்....
முதல் மாட்டுப்பெண்ணாக , பெரிய மன்னியாக , மச்சினர் குழந்தைகளுக்கு பெரியம்மாவாக , நாத்தனார் குழந்தைகளுக்கு மாமியாக ...இன்றளவும் நிலைத்திருக்கும் உறவுகள் !! இதை ஒரு Blessing என்றுதான் நினைக்கிறேன் !!!

50 வருஷங்கள் பின்னோக்கினால்....

50 வருஷங்கள் பின்னோக்கினால்....
ஆகஸ்ட் 25 - வெள்ளிக்கிழமை -வரலக்ஷ்மி நோம்பு - மாலை - 4 மணி
நீள ஒற்றைப் பின்னல் - தலை நிறைய மல்லிகைப்பூ (இரண்டு பக்கமும் தெரிகிற மாதிரி - இப்போது போல் நீளமாக வைத்து , முன் பக்கம் விட்டுக்கொள்ளும் ஃ பாஷன் தெரியாத நாட்கள்) ஒரு சிம்பிள், ராமர் கலர் பட்டுப்புடவை (அக்காவினுடயது) , கழுத்தில் ஒரு செயின் (மற்றொரு அக்காவினுடயது) , போட்டுக்கொண்டு, ஒல்லியாக, உயரமாக, அமைதியாக, உட்கார்ந்து,
எதிரே SK யும், அவர் அப்பாவும் நாற்காலியில் (அதில் ஒன்று கீழாத்திலிருந்து கொண்டு வந்தது !!), அம்மா, தம்பிகள், தங்கைகள் பாயில்...
எதிரே நான் - வீணையுடன் - ஆபோகி ராகத்தில் "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா...தில்லை.." என்று வாசிக்க, அப்பா, "பாடிக்கொண்டே வாசி " (அப்போதுதான் என் குரல் வளம் தெரியுமாம் !! அப்பாவின் நம்பிக்கை) , பாடிக்கொண்டே வாசித்து....
"அவளுக்கு புல்புல்தாரா கூட வாசிக்கத் தெரியும்" என்று அப்பா கொக்கி போட ...
புல்புல் தாராவை எடுத்து "கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ..." என்ற பாட்டை (ப்ளீஸ் நம்புங்க... எதேச்சையாக அமைந்ததுதான் !!!) வாசிக்க...
பஜ்ஜி, சொஜ்ஜி யுடன் பெண் பார்க்கும் படலம் முடிய...
அங்கேயே, அப்போதே (போய் லெட்டர் போடுகிறோம் என்று சொல்லாமல் ) "எங்களுக்கு பெண்ணை ரொம்ப பிடித்திருக்கு" என்று சொல்லி விட்டு செல்ல,
எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்ட அப்பா ஆனந்த கண்ணீர் விட, அம்மா, தெருக்கோடி அம்மன் கோவிலுக்கு ஓட (அந்த அம்மன் அங்கு இருப்பதே எங்கம்மாவின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கத்தான் என்று அம்மாவுக்கு அசாத்திய நம்பிக்கை... சன்னதியில் நின்று பேசுவாள் )
வீட்டிலேயே சந்தோஷ அலைகள் அடிக்க...
நான் --- டிபனை டேஸ்ட் பண்ணிக்கொண்டு, "என்னை யாரும் கேட்கவில்லையே - மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று? " என்ற அனாவசியமான, complicated சிந்தனை எல்லாம் இல்லாமல், (அப்பா, அம்மாவின் சந்தோஷம், என் சந்தோஷம்) ...
அதற்கப்புறம் விவரமா அந்த நிகழ்ச்சிகளை பற்றி விமரிசனமும், அபிப்பிராயங்களும் நடக்க... நான் மெளனமாக கேட்டுக்கொண்டு...
இப்படியாக என் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது !!!
(16 ம் தேதி, அவர் அம்மா அப்பா மட்டும் பார்த்து (ஆவணி அவிட்டம் அன்று) , சம்மதம் சொன்னதும் தான் இவர் வந்தார் -"ஒரே பெண்தான் பார்ப்பேன்" என்ற கண்டிஷன் இவருடையது)

நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட படலம் ...

நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட படலம் ... (என் வசந்தாயனத்தின் - "வசந்தஸ்ய + அயனம் = வசந்தாயனம் - பால காண்டம்)
எங்காத்தில ஒரு பொண்ண்ணுக்கும் சைக்கிள் ஓட்ட சொல்லித் தரல்ல... தெரு பசங்க கிட்ட கத்துக்கவும் தடை..
ஸ்கூல் ல நான் ஒம்பதாவது படிக்கும்போது, சைக்கிள் சொல்லித்தர ஆரம்பிச்சா... ஆனா எங்கம்மா தடை.. கீழே விழுந்துடுவேணாம். !!
எங்கம்மா இப்படித்தான் எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லுவா...அப்பாக்கு எல்லாம் இஷ்டம்.. ஆனா.. எங்கயாவது சில இடத்தில அம்மாக்கு பயப்பட வேண்டி இருக்கே !!
இப்படித்தான்...
"அப்பா, நான் N.C.C. ல சேர்றேன்.."
அப்பா "சேந்துக்கோயேன்"
அம்மா உள்ளேர்ந்து... "அங்கல்லாம் ஹா ஃ ப் trouser ! அதெல்லாம் போடக்கூடாது... அதனாலே சேரக்கூடாது" உல் குரல் ஜெயித்தது...
(இப்படி அசரீரி அடிக்கடி கேக்கும்... முகம் தெரியாமலே அதட்டு போட்டு, அடக்க அம்மாக்குத் தான் தெரியும் !!)
மெட்ராசில, போராடி, புல் pants ஐ காண்பித்து, ஜெயித்து, N.C.C. ல சேந்துட்டேன்... !!
சாயந்திரம் கிளாஸ் முடிந்து லேட் ஆகும்போதெல்லாம்.. ஆத்துல முணு முணுப்பு ஆரம்பிச்சிடும் !!
ஒரு வருஷம், என்.சி.சி. cadets க்கு, ப்ரீ யா ஸ்விம்மிங் கிளாஸ் S.I.E.T. pool ல ஆரம்பிச்சா... ஒரே ஒரு நாள் போனேன்.. அங்கே புடவையில நீச்சல் கத்துக்க வந்த ஒரே பெண் நான்தான்... !! அதனாலே வேடிக்கை பாத்துட்டு வந்துட்டேன்.
வீட்டில சொன்னேன்... மறு நாள்... அம்மா...
"நீச்சல் ட்ரெஸ் எல்லாம் போடக்கூடாது ; [என்ன டூ பீஸ், பிகினி யா போடப்போறோம் (ரெண்டும் ஒண்ணு தானோ ?)]
"மார்கழி மாசம்.. தண்ணி ஜில்லுன்னு இருக்கும்.. உடம்புக்கு வந்துடும்.."
"அங்கேயே ஈர ட்ரெஸ் மாத்தனும்னா- அது கூடாது.. "
இப்படி காரணங்கள் சொல்லப்பட்டு... அதுவும் நின்றது...
கேம்ப் போகணும்னாலே, வீட்டிலே ரகளை... ஆனா அப்பா அம்மாவை சரி கட்டி எல்லா காம்புக்கும் அனுப்பிச்சா..
ஒரு தடவை என்.சி.சி. ("லஸ்கர்" ன்னு ஒரு ஆள் இருப்பான்.. என்.சி.சி. ஆபீஸ் ல. அது பேர் இல்ல. அது ஒரு போஸ்ட். ) லஸ்கர், சூப்பர் ஆ கஞ்சி போட்டு, டிரஸ் அயர்ன் பண்ணி, வீட்டுக்கு வந்து Dehradun camp .. நாளன்னிக்கு கெளம்பி ஸ்டேஷனுக்கு வந்துடுங்கோ ன்னு சொல்லிட்டு போனான்..
எங்கம்மா என்ன சொல்லி இருப்பா ? "அந்த இடம் எங்கே இருக்குன்னே எனக்கு தெரியாது... ரொம்ப குளிருமாம். இமய மலையில இருக்காம்...அங்கெல்லாம் போகக் கூடாது.."
அம்மாக்கு எது ஒலகத்தில பாக்கி இடம் எல்லாம் எங்கே இருக்குன்னு தெரிஞ்ச மாதிரியும், இது ஒண்ணு தான் தெரியாத மாறியும் !
ஆச்சு... போகல்லே... (பிடிவாதம் பிடிக்கத் தெரியாது !! அப்பாவும் கை விட்டுட்டா... !!)
அய்யய்யோ ... சைக்கில் கதைக்கு வருவோம்...
சைக்கில் கத்துக்காததிலே எனக்கு வருத்தம்...
அண்ணா நகர்ல இருந்தேன்... 42 வயசு... 55 கிலோ வெய்ட்டு !!
என் நாத்தனார் பிள்ளை வந்தான்... (சுமார் 16 வயசு) .. அவன்கிட்ட கெஞ்சினேன்...
அவனும் மாமி ஆசப்படராளேன்னு ஆழம் தெரியாம கால விட்டான்...
காலம்பர அஞ்சு மணிக்கு வந்துடுவான்.. சைக்கிள எடுத்துண்டு ஆவடி ரோட் ல என்ன வெச்சு தள்ளி, எனக்கு balance பண்ண வராம.. நொந்து போயிட்டான்..
ஆத்துக்கு வந்து ஹார்லிக்ஸ் எல்லாம் போட்டுக்குடுத்தேன்..
"நாளைக்கும் வந்துடுவியோன்னோ " ன்னு சந்தேகமா கேட்டேன்.. அவனும் ஒரு தாக்ஷன்யத்துக்கு கட்டுப் பட்டு, சரின்னுட்டான்..
மறு நாளும்.. இதே இதே... ரொம்ப களச்சு போயிட்டான்..
மூணாம் நாள் லேர்ந்து .. நான் சந்தேஹப்பட்டது சரியா போயிடுத்து...
அதுக்கப்புறம், ஒரு வருஷம், (இத்தனைக்கும் அவா வீடு ரொம்ப கிட்ட) என் கண்ணிலேயே பாடல்ல...
நான் அந்த ஆசைய மொத்தமா விட்டுட்டேன்னு தெரிஞ்சிண்டுதான் வந்தான்..
(யாராவது எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுங்களேன்.. 65 கிலோ தான் இருக்கேன்... ஹார்லிக்ஸ் போட்டு தரேன் !!)

ஓடுகிறோம்...ஓடுகிறோம்...

ஓடுகிறோம்...ஓடுகிறோம்... என்று பன்மையில் சொல்லும் குழந்தைகளே....
"ஓடுகிறேன்...ஓடுகிறேன்.." என்று ஒருமையில் சொல்லுங்கள்.
"எதை நோக்கி ஓடுகிறேன்" என்று கேட்கும்போதே... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்....
உங்களுக்காக ஓடவில்லை... யாரோடையாவது போட்டிப் போட்டி ஓடுகிறீர்கள்... யாரையெல்லாமோ ஓட்டத்தில் ஜெயிக்கப் பார்க்கிறீர்கள்... ஏன் இந்தப் போட்டி.
உங்களுக்கு என்று கொடுக்கப் பட்டதை அனுபவிக்க  முடியாமல், ஒரு வட்டத்துக்குள்ளேயே ஓடி, புறப்பட்ட இடத்திற்கே வந்து, திக்கு திசை புரியாமல், மறுபடி ஓட்டம்.
கடவுள் படைக்கும்போது மனிதனை மட்டும் ஆறறிவுடன் படைத்தான். பகுத்து அறிந்து, நல்லது கெட்டது புரிந்து, பிறப்பு, இறப்பில் சிக்கி, உழன்று, ஏதோ ஒரு பிறப்பில் முழுவதுமாக அவனை உணர்ந்து , அவன் பாதம் அடைய...
பறவையைப் பார்த்து, அதன் மாடல் செய்து, அதில் பறக்கலாம்... பறவையைப் போல் பறக்க ஆசைப் பட்டால் முடியுமா?
பஞ்ச பூதங்களால் ஆனது நம் உடம்பு. அந்த பஞ்ச பூதங்களுக்கு அடிமையாகிப் போனோம்.
மண்ணில் வாழ்கிறோம், மண்ணில் விளைந்ததை உண்ணுகிறோம்; நீரை குடிக்கிறோம்; காற்றை சுவாசிக்கிறோம்; வயிற்றில் அக்னியை எரிய விடுகிறோம்; மனதை மட்டும் வெற்று வெளி ஆக்கி, இறவன் நினைவைத் தவிர வேறேதுவுமில்லாமல் வெற்றிடமாக வைக்க முடியவில்லை.
வாழ்க்கையை உணர, ஆண்டவனை தரிசிக்க, நம் முனிவர்கள்... முதலில் உணவைத் தவிர்த்தார்கள்; பிறகு நீரை; சுவாசத்தை நிறுத்தி தியானம் செய்தார்கள்; ஆண்டாண்டு காலமாக இந்த தவத்தை செய்து, தன்னையே கட்டுப் பாட்டுக்குள் வைத்தார்கள். அப்போது கூட அவர்கள் வைகுண்டம் ஏக யுக யுகாந்திரம் ஆச்சு.
ஆனால், கலி உகத்தில் நாம் இந்த பஞ்ச பூதங்களுக்கு அடிமை ஆகிப் போனோம். அவைகளை நமக்கு அடிமை ஆக்க நம்மால் முடிய வில்லை.
த்ரௌபதிக்கே கண்ணன் உதவியது, தான் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தைக் கை விட்டு, கைகளை உயர்த்தி யாசித்த போது தான். திரௌபதிக்கு அண்ணனாக கண்ணன் புடவை குடுக்கிறான், அவள் மானத்தைக் காப்பாற்ற.
இந்த சரணாகதி தத்துவத்தைத் தானே ஆண்டாள் பாடினாள்... நெய்யுண்ணோம், பாலுண்ணோம், என்று !!
சரி, இதையெல்லாம் நம்மால் இப்போது பண்ண முடியுமா.? என்று கேட்டால்... கண்டிப்பாக முழுவதும் முடியாது. ஆண்டவன், அவரவர்க்கு ஏற்றாற்போல், limitation வைத்துத் தான் படைத்திருக்கிறான். இல்லாவிட்டால், ஏன் ஏற்றத் தாழ்வு.? ஏற்றத் தாழ்வு என்னும் சொல்லும்போதே.. நாம் materialistic ஆகிவிடுகிறோம்... அழகு, ஆஸ்தி, நல்ல குழந்தைகள் என்று முடிவில்லாமல் போகிறது நம் ஆசைகள்.
உங்களை ஒடச்சொன்னது யார்? அது உங்கள் ஆசை, வழி.
கலி முடியும் வரை, மறுபடி மறுபடி பிறந்து, இறந்து... ஏதோ ஒரு பிறப்பில் அவனை உணர்ந்து.. ஒரு முடிவு கிடைக்கும்.
நின்று நிதானமாக உங்களைச் சுற்றி பாருங்கள். அனுபவியுங்கள். அப்படி ஓடினாலும் அது கிருஷ்ணனின் செயல். உங்களுக்கு கிடைத்தது, கிடைக்கவில்லை என்று நினைப்பது, நிலைத்திருப்பது, நிலைக்காதது எல்லா இயக்கமுமே கிருஷ்ணனால் ஆனது.
நாள் முழுவதும் "எல்லாமே கிருஷ்ணனுக்கு அர்ப்பணம்; நான் எதுவும் செய்யவில்லை" என்று நான் சொன்னது போல் "ஸ்ரீ ராம ராமேதி..." சொல்லுங்கள்.
உங்கள் குழப்பம், தெளிவு, சந்தோஷம், சந்தேஹம் எல்லாம் கண்ணன் தான்.
அதனால் எதற்கும் மூலக்கூறு ஆராயாமல், அன்றன்று கிடைத்ததை சந்தோஷத்துடன் ஏற்கப் பழகினால் , வாழ்க்கை எளிதாகும். எல்லாரையும் ஆட்டுவிக்கும் அந்த கண்ணன், உங்கள் உடலின் பஞ்ச பூதத்தை அடக்கும் வழி வேணுமானால் காட்டுவான்; செய்ய வேண்டியது நீங்கள் தான்...
அதனால் no குழப்பம்; no waste of time... கடமை, கண்ணியம், கட்டுப்பாடு...
இனி சந்தோஷம், திருப்தி எல்லாம் உங்கள் கையில், கிருஷ்ணன் ஆசிகளுடன், மூதாதையர் ஆசிகளுடன்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???
(
ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி........
நம் மூளையில் ஆயிரக்கணக்கான கெமிகல்ஸ் இருக்கின்றன.. மில்லியன்ஸ் நரம்புகளும் நெட் வொர்க் ஆக தொடுக்கப் பட்டுள்ளது... சிக்கு கோலம் மாதிரி.
இந்த கெமிகல்ஸ் ஒரு பாலன்ஸ் இல் இருக்க வேண்டும்.. மிக துல்லிய கணக்கு ... கடவுளின் அற்புதமான ஏற்பாடு... மனிதனால் காபி அடிக்க முடியாதது.
இந்த பாலன்ஸ் ஐ சரியான லெவலுக்கு வைக்க, இன்னும் பல பல சுரப்பிகள் துணை செய்கின்றன. இவை எல்லாமே, குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருந்தே ஆகவேண்டும்.. இயற்கையில் இருக்கும். அதை கெடுப்பது நம் மனமென்னும் குரங்கு. அதை சமன் செய்வதற்கு நம் பெரியவர்கள் அநேக வழி முறைகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்...

[
மனம் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்; கோபமோ, வெறுப்போ, சலிப்போ, பொறாமையோ.... இந்த சமன் பாட்டை கெடுக்கும்.. அதுதான் எல்லா வியாதிகளுக்கும் (உடல், மனம் சார்ந்த ) மூல காரணம்... இது எப்படி சாத்தியம்... வழி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் ஞானிகள், மூத்தவர்கள்... நம்மால் அதை கடை பிடிக்க முடிவதில்லை...

நாலைந்து நாட்களுக்கு முன் எழுதப்பட்டு, தொடரும் போட்ட இந்த போஸ்ட் , நடுவில் வால்மீகியை பார்க்கப் போய் விட்டதால் நின்று போய் விட்டது. இன்று தொடருகிறது....]

இந்த பாலன்ஸ் ஐ சரியான லெவலுக்கு வைக்க, இன்னும் பல பல சுரப்பிகள் துணை செய்கின்றன. இவை எல்லாமே, குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருந்தே ஆகவேண்டும்.. இயற்கையில் இருக்கும். அதை கெடுப்பது நம்
மனமென்னும் குரங்கு. அதை சமன் செய்வதற்கு நம் பெரியவர்கள் அநேக வழி முறைகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்...

நம் மூலையில் உள்ள நரம்புகள், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு ஆர்கனுக்கு கனெக்ட் செய்யப்பட்டு, டெடிகேட் பண்ணப் பட்டுள்ளது. அவைகள் தான், அந்த உடல் பாகத்திலிருந்து செய்திகளை அனுப்பி, பதில் பெற்று, வேலை செய்கிறது. அதனால் நம் மூளை தான் மாஸ்டர்.

உதாரணமாக, அட்ரீனலின் என்ற ஒரு சுரப்பி. நாம் கோபப் படும்போதோ, கோபப் பட்டு கத்தும் போதோ, இது அதிகமாக சுரக்கிறது. இதயத்தின் பாலன்ஸ் ஐ சரியாக வைத்திருக்கும் இது, அதிக மாகும்போது, ஹைபர் டென்ஷன், மார் வலி, தலை வலி உண்டாகிறது. இதயத்தை பாதிக்கும்போது, மூச்சு விடுவதும் சிரமமாக, மூச்சு வாங்குகிறது. இது ரொம்ப கெடுதல்.

இதே போல், ஜீரண உறுப்புகள் மற்றும் லிவர், spleen என்று, ஒவ்வொன்றும் மூளையுடன் கோர்க்கப் பட்டு, இந்த நெட் வொர்க் சரியாக வேலை செய்ய வேண்டும். அப்படி செய்யாத போது, இயற்கையிலேயே, நம் உடலில் சில வீக் பாகங்கள் இருக்கலாம் . அவை பாதிக்கப் படுகின்றன.. அதனால் தான், துக்கம், வெறுப்பு, கோபம் ஏன் பொறாமை , பேராசை உணர்வுகள் கூட, இவ்வுருப்புகளை பாதிக்க, சிலருக்கு வாயிற்று ப்ராப்ளம், தலை வலி, கால், கை வலி, ஜுரம் என்று வருகிறது... சிலருக்கு அதீதமாக பயந்தால் கூட ஜுரம் வரும். இந்த பாதிப்புகள் அதோடு போகாது... நாம் எடுக்கும் மருந்துகள், ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் உட் பகுதிகள் பாதிக்கப் படும்.

சரி... மனதை எப்படி அமைதியாக வைத்துக் கொள்வது... பலர் தியானம் என்று சொல்வார்கள் (இதை பற்றி ஒரு psychiatrist இடம் டிஸ்கஸ் செய்து வைத்திருக்கிறேன்... அது பிறகு...)

மனம் கடவுளிடம் ஒருமை பட்டு நிற்கும்போது, கேட்ட எண்ணங்கள் வருவது குறையும்; நிற்கும். அதாவது, சாமியிடம் (சாமி நமக்கெல்லாம் சுமை தாங்கி !!) உட்கார்ந்து பிரார்த்திக்கும் போது, மனம் வேறு எதையும் சிந்திக்காது; சிந்திக்கக் கூடாது. சாமியிடம் டீல் போடக் கூடாது; நமக்கு என்ன தேவை என்பது கடவுளுக்குத் தெரியும். அப்படியே மன நிம்மதிக்காக வேண்டினாலும், "லஞ்சம் தருவதாக (சம்திங்) " வேண்ட வேண்டாம். அந்த சில நாழிகையாவது மனம் கெடுதலை நினைக்காது (வேண்டுதலே, பிறர் கஷ்டப்பட வேண்டும், தண்டிக்கப் பட வேண்டும் என்று இருந்தால் கடவுளே ஒன்று செய்ய முடியாது). யாரையும் தண்டிக்கும் உரிமை நமக்கு கிடையாது... மனதளவில் கூட. அம்மாக்கள் மட்டும் தான், கோபம் வந்தால் "நாசம் அற்றுப் போக" என்பாள் !!!

இப்படி கொஞ்ச நேரமாவது மனம் நல்ல சிந்தனை அல்லது blank ஆக இருந்தால் , மூளையின் நரம்புகளும், கெமிகல்சும் பாலன்ஸ் உடன் இருக்கும். அல்லது சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கலாம். நிறைய பெண்கள் சமைக்கும் போது சுலோகம் சொல்லுவார்கள். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். மன அமைதி; சமையலில் ருசி.. பாசிடிவ் வைப்ரஷன் - இவைகள், அந்த சாப்பாட்டை சாப்பிடுவர்களுக்கும் போய் சேரும். அதனால் தான் வீட்டு சாப்பாடு நல்லது. ஹோட்டலில் சமயத்தவரின் மன என்ன ஓட்டங்கள் நன்றாக இல்லாமல் போகலாம்.

இதே காரணத்துக்காக கோவில்.... 

கோவிலுக்குள் நிறைய பாசிடிவ் எனெர்ஜி இருக்கு... லைட் எனேஜி, சவுண்ட் எனெர்ஜி என்று. இவைகளைத் தவிர உச்சரிக் கப்பட்ட மந்திரங்கள் அலைகளாக காற்றில் இருக்கும். 

நம் சம்ஸ்க்ருதத்தில், உச்சரிப்பு, ஒலி வடிவமைப்பு ரொம்ப முக்கியம். அவைகள் நம் உடலில் ஒரு வைப்ரேஷனை ஏற்படுத்தும். அந்த வைப்ரஷன் சரியாக இருக்க வேண்டும். அது ரொம்ப பவர்புல் வைப்ரஷன். நமக்கு சொல்ல தெரிய வில்லை என்றால், தெரிந்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்... அதனால் தான் காலையில் நாம் நல்ல சுலோகங்கள், சஹஸ்ரநாமம் இவைகளை பாட்டாக ஓட விட்டு கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

கோவிலுக்குள் போகும் போது, மனம் முழுதும் கடவுளிடம் ஈடு பட்டிருக்க வேண்டும். இறைவன் நாமத்தை தவிர, பிற வார்த்தைகள் பேசக்கூடாது... சில கோவில்களில் இந்த வாசகத்தை எழுதி வைத்திருப்பார்கள். வீட்டுக் கதை, கஷ்டங்கள் இவைகளை தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள கோவிலை ஒரு இடமாக எடுக்கக் கூடாது. 

கோவிலின் காற்றில் இருக்கும் வைப்ரஷனை உட்கொள்ள வேண்டும். நம் உடல் good conductor of electricity... so also earth... all signals are converted as electrical pulses & sent to brain. When we absorb the positive vibration, the negative gets drained through feet to the earth & the body, retains the positive.

அதனால் தான் பிரகாரத்தை சுற்றி மெள்ள நடக்க வேண்டும் (பைய பைய ) .... giving enough time to gain energy. 

இதை தவிர முக்கியமானது... புஷ்பங்கள், மரங்கள். அரச மரம், வெப்ப மரம் காற்று உடம்புக்கு நல்லது. அதனால் தான் அரச மாற பிரதட்சிணம். 

வாசனை மலர்கள் நம் மனதில் உள்ள எண்ணங்களை சிக்னலாக எடுத்துக் கொண்டு, சுவாமியை அடையும் தன்மை கொண்டவை. நாம் பூ வங்கி, மனத்தால் கடவுளை ச்மரித்து, குருக்களிடம் கொடுத்து, அவர் அதை சுவாமி மேல் சாத்தும் போது, நம் எண்ணங்களின் சிக்னல்கள் சுவாமியை சேருகின்றன. சுவாமி மேல் சார்த்திய புஷ்பத்தை நமக்கு தரும் போது, அந்த பூ கடவுளின் பதிலாக, கடவுளின் எனர்ஜியை தாங்கி வருகிறது. அதை அப்படியே தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்தாலும், பூவை ஒரு இடத்தில் 2 /3 நாட்கள் வைத்திருத்தல் நல்லது. 


பூக்களின் இந்த சக்தியை உணர்ந்ததனால் தான் ஆண்டாள், தான் இறை சிந்தனையுடன் கட்டிய மாலையை , தான் சூடி, பிறகு கண்ணனுக்கு சூட்டுகிறாள். இது ஒரு transfer of thoughts . 
நம் பெற்றோருக்கு தெரியாதா நமக்கு தேவையானது. இருந்தாலும், நாம் சொல்லிக்கொண்டே இருப்போம். அது மாதிரி தான் இது. தான் கண்ணனை அடைய நினைக்கும் நினைப்பை, தினமும் உறுதி செய்கிறாள். 

இது போல் கோவிலில் இருக்கும் சிறிது நேரம் மனதில் அமைதி. அதனால் தான், மாலை வேலை எல்லாம் முடித்து விட்டு , நிம்மதியாக கோவிலுக்கு போகிறோம்... அவசரப் பட வேண்டாம். பெரியவர்கள் , தான் கடமைகளை முடித்தவர்களுக்கு, இறைவனடி சேருவதுதான் ஒரே சிந்தனை. அதனால் தான், சிறிசுகள் "கிருஷ்ணா, ராமா என்று ஒரு இடத்தில் உட்காரு" என்று சொல்கிறார்கள் !! அந்த இடம் கோவிலாக இருந்தால், வீட்டில் இருக்கும் சிறியவர்களுக்கு கொஞ்ச நேர தனிமை, பெரியவர்களுக்கு கோவிலில் நிம்மதி. !!! 

அர்ச்சனைக்கு தேங்காய், புஷ்பம் தரும் போது, சிலர் சுவாமி பெருக்கே செய்யும்படி சொல்வார்கள் அது தவறு. நம் பெயர், கோத்ரம், நட்சத்திரம் என்று அடையாளப் படுத்தி கொடுக்கும் போது, நம் எண்ணங்களும் பகவானை அடையும். குடும்பத்தில் உள்ள எல்லார் பேரையும் சொல்லலாம். அல்லது பெரியவரின் பெயரை சொல்லி "சக குடும்பம்" என்று சொல்லலாம். 

ஆக, ஒரு நாளில், சில மணி நேரங்கள் தெய்வத்துடன் செலவழிக்கும் போது, குழந்தைகளுடன் செலவழிக்கும் போது ( because children are Gods & innocent. antha innocence nammayumthotrikkollum)

மனம் அமைதியாக இருப்பதால், நம் மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, பாலன்சுடன் இருக்கும். அதனால் அனாவசிய உடல் கோளாறுகள் தவிர்க்கப் படும்.