Sunday, June 28, 2020

வேர்களை தேடி - 3.....


4 வருடங்களுக்கு முன் 3 நாள் தஞ்சாவூரை சுற்றினேன். amazing... the house in which i was born is still there .... structure same.. கோடவுண் ஆக use பண்ணுகிறார்கள்.
it is 'KANDI RAJA PALACE'... even the room in which my mother delivered me is intact !!! என்ன...ரொம்ப பழசாக இருக்கு... !! அனால் இருக்கு !!!
ஒரு வேளை VK 's birth place endru , National Monument ஆக அறிவிச்சிருப்பாங்களோ !!!! (better i will collect photos & write ups ready)
the school-where my father taught; where i studied till S.S.L.C. ..... i was so happy going around nook & corner. the present headmistress / teachers & students !!! oh.. what a pleasure... took photographs of the class rooms, lab, prayer hall, மரத்தடி church.....
I have offered my services for any academic help...
என் அப்பா பேரில் ஒரு லட்ச ரூபாய் டொனேஷன் தருவதாக , செக் புக் கையில் வைத்துக் கொண்டு, சொன்னேன். "ஒரு ரூம் கட்ட வேண்டும்; பிறகு வாங்கி கொள்கிறோம் " என்று அந்த முதல்வர் சொன்னார். ஆனால் , இரண்டு, மூன்று முறை போன் செய்தும், இன்னும் வாங்கி கொள்ள வில்லை. !!!
ஒரு நாள், ஸ்டூடெண்ட்ஸ் க்கும் டீச்சர்ஸ்க்கும் - ஒரு speech கொடுத்தேன். அந்த பள்ளியை பற்றி என் அனுபவங்கள், ஞாபகங்கள் ..... எனக்கு ரொம்ப பிடித்த ஒரு பிரேயர் பாட்டை எல்லோரும் பாடினார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
i have offered... notes, qn. papers, guidelines etc. & see that they get 100% pass ! i am thrilled that i am able to contribute to the unforgettable institution where i had my foundation-not only for edu. but also for a disciplined life !!
இன்னும் நாங்கள் வாசித்த வீடுகள், எங்கள் அண்ணாக்கள் படித்த பள்ளிகள், ஐயன்கடை தெரு, பெரிய, சின்ன மார்க்கெட்கள், தஞ்சை மாரியம்மன் கோவில், பெரிய கோவில், திருவையாறு, அரண்மனை .... இன்னும் நான் பழகிய, விளையாடிய, தெருக்கள் .... என்று நன்றாக சுற்றினேன்.
தியேட்டரில் "கர்ணன்" படம் பார்த்து, கர்ணன் வரும் சீனிலெல்லாம் அழுதேன் !!
ஒரு ஆவலலோடு என் ஊரை பார்க்க வருகையில்... பல பல மாற்றங்கள் தெரிகிறது... ரொம்ப கூட்டம்... too much of traffic... we got town bus for Tanjore only when i was in 9th std. now... everywhere car/bus/autos !!
மாட்டு, குதிரை வண்டி இல்லாத தஞ்சாவூர்; கதம்பம் இல்லாத தஞ்சாவூர்;... இந்த ஊர் கதம்பம் ரொம்ப famous...பூ விற்கும் பெண்ணை கேட்டால்... "அம்மா, நானே கட்டி முழம் ஐந்து ரூபாய்க்கு விற்றிக்கிறேன்... ஒரு முழம் கதம்பம்பத்தில்... முப்பது வகை வாசனை பூக்கள் இருக்கும்... இப்போது... பூ தோட்டத்தை எல்லாம் பிளாட் போட்டு விற்று விட்டதால் பூக்கள் இல்லை" என்கிறாள். வருத்தமாக இருக்கிறது....
சுமார் 58 வருடங்களுக்கு அப்புறம் வந்து - 'ஊர் மாறிவிட்டது' என்று வருத்தப்படுவதா? - இல்லை - வசதிகள் பெருகி இருக்கிறது என்று சந்தோஷப படுவதா?
மாறாதது... அசுத்தமான தெருக்கள், சந்துகள், பழைய வீடுகள், அடுக்கு மாடி கட்டிடம் வராத ஊர்... எங்கும் குப்பை, கூளங்கள், செம்மண் பூமி !!!

உப்புமா......ஒரு பழைய தமிழ் பாட்டு........

ஒரு பழைய தமிழ் பாட்டு !!!!
உப்புமாவை கிண்டி வையடி
உத்தமி பத்தினி சித்தச ரத்தினமே
கண்ணே பெண்ணே மயிலே குயிலே .. நீ
அப்படியே பாணா தன்னை
அடுப்பிலேற்றி தீயைக்
கப்பிய ஜலமும் விட்டு
கொப்பெனக்கொதிக்கவும்
உப்பைப்போட்டு
உடனே ரவயைப்போட்டு
உளுத்தம்பருப்பைப்போட்டு
சிறியதாய் மிளகாய் கிள்ளிப்போட்டு
அறிய கடுகு வெங்காயம் போட்டு
சரியாயதனை கொதிக்கப்போட்டு
கடுகுக்காயம் கூடப்போட்டு
கலைன்த்துப்போட்டு கிளரிப்போட்டு
மிளகாய் கரிக்கப்போட்டு
அப்படி இப்படி திருப்பிப்போட்டு
அனைவருக்கும் சூடாயிருக்கப்போட்டு
தள தள தள பொல பொல பொல
சரி கம பத நிஸ நிஸ

Result......

கணிதத்துடன் போராடும்போது ....
"கொஞ்சம் சமையல் அறையில் உதவி செய்ய கூடாதா ???" - இது அம்மா !

சரித்திரத்தை அலசும்போது
"என் கைக்கடிகாரம், பர்ஸ் எடுத்துக்கொடு..."- இது அப்பா !!

பௌதீகத்தை உள் வாங்கும்போது...
"என் பள்ளி சீர் உடையை பெட்டி போட்டுக்குடு அக்கா .." - இது தம்பி !!!

விலங்கியலை உருப்போடும்போது...
"எனக்கு கொஞ்சம் கல்லூரி நோட்ஸ் காபி செய்து கொடேன்..." - இது அண்ணா !

ரெகார்ட் எழுகையில்...
"எந்நேரமும் என்ன எழுத்து... கொஞ்சம் வீட்டு வேலையும் பழகு..." மறுபடியும் அம்மா !!

செய்தித்தாளில்...
"இந்த வருடமும், நடந்து முடிந்த 12 ம் வகுப்பு தேர்வில், மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்வு" . - இது செய்தி !!!!

Saturday, June 27, 2020

வத்தக் குழம்பு சாதம்......

வத்தக் குழம்பு சாதம்......
(நாரத கான சபாவில் , கச்சேரி நடுவில் , ஞானாம்பிக்கா கேன்டீனில் சாப்பிட்டு, அவர்களையே பக்குவம் கேட்டு, வீட்டில் செய்தது.)
பச்சை அரிசியை மிக்சியில் போட்டு - ஒரு டிர்ர்ர்ர்ர்ர்ர் .... ஒன்றிரண்டாக உடையும்.
கொஞ்சம் அதிகம் தண்ணீர் வைத்து குக்கரில் குழைவு சாதமாக வடிக்க வேண்டும்.
வத்தக் குழம்புக்கு , நல்லெண்ணெய் கொஞ்சம் தாராளமாக வைத்து , நிறைய மணத்தக்காளி வற்றல் தாளித்து, எப்போதும் போல் வத்தக் குழம்பு செய்ய வேண்டும். (மணத்தக்காளி வற்றல் மட்டும்தான் போட வேண்டும் )
சாதத்தை , பாத்திரத்திலிருந்து குக்கருக்கு டைரெக்ட்டாக மாற்றி, கரண்டியால் நன்றாக மசிக்க வேண்டும்.
வத்தக் குழம்பை அதனுடன் சேர்க்க வேண்டும். நன்றாக கிளற வேண்டும். gas சிம்மில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.
சாதம் தளர இருக்க வேண்டும். அப்புறம் கெட்டியாகிவிடும்.
நெய் தேவையான அளவு, அல்லது சாப்பிடும்போது, தேவையானவர்களுக்கு மட்டும் சேர்க்கலாம்.
செம டேஸ்ட்டாக இருக்கும்.

சாப்பிட கெஸ்ட் வரும்போது, இதுவும், தயிர் சாதமும் செய்து அசத்தலாம்.
-------------------------------------------------------------
தயிர் சாதத்துக்கும் , இதே போல் , அரிசியை உடைத்துக் கொண்டு, பாதி தண்ணீரும், பாதி பாலும் சேர்த்து , சாதம் ஆனதும் , குக்கருக்கு டைரெக்ட்டாக மாற்றி, நன்றாக மசித்து, மேலும் பால் சேர்த்து, கிளறி, கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு , உலர்ந்த திராட்சை - நெய்யில் தாளித்து, கொஞ்சமாக தயிர் சேர்த்து, பிசைய வேண்டும்.
மேற் கொண்டு, மூடுக்கு தகுந்தாற்போல், மாதுளம் பழம், துருவிய காரட் , பொடியாக நறுக்கிய வெள்ளரி பிஞ்சு, மாங்காய்.... இவற்றில் ஏதாவது கலக்கலாம்.
------------------------------------------------------------------------

Friday, June 26, 2020

(என்) வாழ்க்கை 'ரச'த்தை போன்றது .....

(என்) வாழ்க்கை 'ரச'த்தை போன்றது ..
மூன்று அடுக்குகள் கொண்டது...

முதல் அடுக்கு (அடி) வண்டல்...கிளறக்கூடாதது... காரம் அதிகம்...மற்றவருக்கும் பரிமாரக்கூடதது... கிளறினால் ஒரு நாள் ஆகும் தெளிவதற்கு

நடுவில்...இனிமையான நினைவுகள்...அதிகம் குழந்தைகளை பற்றியது..சுவையானது...அப்பப்போ அதை அசை போடலாம்... நாங்கள் இருவரும்...நான் பேச - அவர் கேட்க... அவர் கேட்க - நான் பேச... ரசனை...ரசனை..

மேலே..தெளிவு... அதுதான் என் குழந்தை மனம்... அன்றன்று நடப்பதை ரசிப்பது...சிரிப்பது... நேசிப்பது...முடிந்ததை செய்வது...

சில சமயம் கொஞ்சம் சப்பெண்டிருந்தாலும்... சுவையும் உண்டு... அந்த சுவை பழகி விட்டது....


அரிசி உப்புமா.......

அரிசி உப்புமாவுக்கு ஒரு குறிப்பு.
அரிசியுடன் ஒரு பிடி துவரம் பருப்பு, கொஞ்சம் மிளகு, சீரகம் போட்டு மெஷினில் ரவையாக உடைக்கவேண்டும்
(அதான் எனக்கு தெரியுமே !!!!)
(அப்புறம் என்ன ? அதாங்க எனக்கு தெரியாது !!!)
அதை மாவு சல்லடையில் சலித்தால், மாவு கீழே கொட்டி, ரவை மட்டும் தங்கும்.
(அதான் எனக்கு தெரியுமே !!!!)
(அப்புறம் என்ன ? அதாங்க எனக்கு தெரியாது !!!)
ந. எண்ணையில் (கொஞ்சம் தாரளமாக எண்ணை விடவும்) , கடுகு, உ.பருப்பு, கட்டி பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து
(அதான் எனக்கு தெரியுமே !!!!)
(அப்புறம் என்ன ? அதாங்க எனக்கு தெரியாது !!!)
1 கப் க்கு 2 1/2 கப் விகிதத்தில் தண்ணீர் வேண்டும்.
add all the ingredients into the electric rice cooker, add water, grated coconut, salt, mix well ; switch on
or .. put in a vessel- pressure cook.

or - the most testy is ... put in a venkalappaanai, keep the flame in sim, cover it with a plate, pour water on the plate, keep stirring till done

வெண்கலப் பானையில தான் அடியில அடையா வரும். அதை சுரண்டி எடுத்து சாப்பிட்டால் , உப்புமாவை விட டேஸ்ட் அதிகம்.


ஏன் சினிமாவில் மட்டும்.........

"ஏன் சினிமாவில் மட்டும், கதாநாயகி
தற்கொலை என்று முடிவெடுத்ததும்,
டேபிள் draw வில், ரெடியாக  பாட்டில்ல விஷம்
இருக்கும்; இல்லேன்னா தூக்க மாத்திரை இருக்கும்
அந்த லேபில் நமக்கு தெரியற மாதிரி காமிச்சுட்டு
லேசில சாப்பிடாம, யாரு வந்து தட்டி விடுவா ன்னு
பாத்திண்டிருப்பா ...
(தாமரை நெஞ்சம் சரோஜா தேவி ... ஒவ்வொரு மாத்திரையாய்
சாப்பிடறதை பார்த்திருக்கேளா ??)

ஏன் சினிமாவில் மட்டும், கதாநாயகி கோச்சுண்டு
கிளம்பும்போது, ஒரு சூட் கேஸ் ரெடியா இருக்கும் 
அதுல 4 புடவைய திணிச்சிண்டு கிளம்பிடுவாள்  "

ஏன் சினிமாவில மட்டும் எல்லா ஆண்களுக்கும்
சண்டை, குஸ்தி நன்றாக போட  வருகிறது S K க்கு வரலியே ??

ஏன் சினிமாவில மட்டும், கட்டிப்புரண்டு சண்டை போட்டப்புரமும்,
ஹீரோ சட்டை கசங்காமல், வேஷ்டி அழுக்காகாமல் இருக்கு ?

ஏன் சினிமாவில மட்டும், ஹீரோ ஆஸ்பத்திரியிலிருந்து
tube எல்லாம் பிடுங்கி எரிந்து விட்டு, ஓடி, வில்லனை
சண்டை போட்டு கொல்ல  முடிகிறது ??

ஏன் சினிமாவில மட்டும், பெரிய accident க்கு அப்புறம், உடனே
நெற்றியில் ஒரு சின்ன பிளாஸ்திரி ஒட்டி அனுப்பி விடுகிறார்கள் ??

Vijay, with a katthi kutthu in stomach, bleeding to death, carries  Simran

 drives to hospital for her delivery !!!


in Idatatthai thirudaathe... Girija after a by pass heart surgery, pulls all her

tubes, oxygen mask, immly. after surgery ; runs to the station !!!

கம்ப ராமாயணத்தில்.........

கம்ப ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு செய்யுள்
-----------------------------------------
எண் இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல்
மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால்
என செவியில் புகுதலோடும்
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த
ஆர் உயிர் நின்று ஊசல் ஆட
'கண் இலான் பெற்று இழந்தான்' என உழந்தான்
கடும் துயரம் -கால வேலான்
-------------------------------------------
விசுவாமித்திரர் ராமரை காட்டுக்கு வேள்வி காக்க அழைக்கும்போது....
அவர் சொற்கள் "வேல் பாய்ந்தது போல்" என்று மட்டும் சொல்லாமல்,
"ஏற்கெனவே இருக்கும் புண்ணில்"
"எரிகின்ற வேல்" ..... வேல் எறிந்தாலே துன்பம்.. அதில் எரிகின்ற வேல்... ஏற்கெனவே புண் இருக்கும் இடம்...
இந்த வார்த்தைகளில், துன்பத்தின் அளவு மூன்று மடங்காக உணரப்படுகிறது !!
------------------------------------------
'கண் இலான் பெற்று இழந்தான்' ....
கண் இழந்தாலே துயரம்....
அதில்... பிறவிக்குருடன், கண் பார்வை பெற்று, அதை இழக்கும்போது அதன் துயரம் மிகப்பெரியது...
(தசரதரும் பிள்ளை இல்லாமல், பிறகு பெற்று, இப்போது முனிவருடன் அனுப்பும் துயரம் பல மடங்காக இந்த உதாரணத்தில் சொல்லப்படுகிறது !!!
-------------------------------------------

அனுபவம் ஒரு கமா தான்.......

அனுபவம் ஒரு கமா தான்...... முற்றுப்புள்ளி இல்லை...
பேசுகிறார்கள் .. நம்புகிறேன்....
பேசுவதில்லை ... ஒதுங்குகிறேன்...
சிரிக்கிறார்கள்... சந்தோஷப்படுகிறேன்...
முகம் திருப்புகிறார்கள்... வழி விட்டு விலகுகிறேன்..
மனிதரில் எத்தனை வகை !!!
அனுபவம் ஒரு கமா தான்.. முற்றுப்புள்ளி இல்லை...
மனம் என்பது ஒரு ஊஞ்சல்...
நிறுத்த முடியாது...
அது ஆடி ஆடி, தானே நிற்கும்
மனம் அமைதியுறும் !!

Thursday, June 25, 2020

Recipes........


பருப்புப் பொடி .

தேவையான சாமான்கள்
துவரம் பருப்பு - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு கப்
பயத்தம் பருப்பு - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
மிளகு, மிளகாய் வற்றல் - காரத்திற்கேற்ப.
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் தூள் - சிறிதளவு 
முந்திரி பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்

பருப்பு வகைகளை dry roast செய்யவும்
அரை ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மிளகையும், மிளகாய் வற்றலையும் வறுத்துக் கொள்ளவும் .
நெய்யில் முந்திரி பருப்பை பொறித்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையையும் கடாயில் வறுத்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு சுற்றி, ரவை சல்லடையால் சலித்துக் கொள்ளவும். கடைசியில் சிறிதளவு அரை படாமல் இருப்பதை, இரண்டு சுற்று சுற்றி கலந்து விடவும்.
மிகவும் சுவையான பருப்புப் பொடி தயார்.
சாதத்தில் நெய் விட்டு , பொடி போட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
------------------------------------------------------------

 உப்பு சீடை செய்யும் முறை. (வசந்தா ஸ்பெஷல்)
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, மெஷின் இல் அரைத்து வாங்கி, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
(
இப்போதெல்லாம் processed maavu என்று கிடைக்கிறது)
அரிசி மாவு 8 டம்ளர்
மைதா மாவு 6 டம்ளர்
உப்பு, பெருங்காயம், ஊற வைத்த இரு பிடி கடலை பருப்பு, துருவிய தேங்காய் (ஒரு மூடி மித்தல் காய்)
வெண்ணை - 200 gm
(
தேவையானால் எள். இது எண்ணையில் தங்கும் அதனால் விட்டு விடலாம். )
[
வருத்த உளுந்து மாவெல்லாம் போடாதீங்க]
இப்போ செய் முறை - கவனமா படிங்க.
எல்லா சாமானையும் போட்டு நன்றாக கலக்க வேண்டும். (தண்ணீர் கண்டிப்பாக விடக்கூடாது. )
வேஷ்டியை விரித்து போட்டு வைத்து விட்டு, பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு
நன்கு கலந்த மாவில், நடுவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து, (மாவில் மைதா, வெண்ணை கொஞ்ச பிசுக்கு கொடுக்கும்) , அந்த மாவை மட்டும் இடது கையில் வைத்துக்கொண்டு, வலது கட்டை விரல், ஆட்காட்டி விரலால் ரொம்ப கொஞ்சமாக கிள்ளி , சட்டென்று ஒரு உருட்டு உருட்டி வேஷ்டியில் போட வேண்டும்...
கை மாவு தீர்ந்து விட்டால், மறுபடியும் அதே போல், நடுவில் தண்ணி... பிசிறல்.. இடது கையில் வைத்துக்கொண்டு உருட்டல் ...
கணிசமாக உருட்டியதும் ... அடுப்பில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், தட்டில் சீடைகளை எடுத்து, எண்ணையில் மெல்ல போட வேண்டும்.
அடுப்பை கொஞ்சம் சிறியதாக வைத்து, பிரவுன் நிறம் வந்ததும், ஜல்லி கரண்டியால் வரித்து எடுத்து டப்பாவில் போட வேண்டும்.
சூடு ஆறும் வரை டப்பாவை மூடக்கூடாது...
 --------------------------------------------------------------------------------
 Karadayam nombu adai (vellam and uppu):
1.அரிசியை நன்கு களைந்து, வடி கட்டி, துணியில் லேசாக உலர்த்தவும்
2.
வாணலியில் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, சிம் இல் வைத்து, இளம் பிரவுன் ஆக வறுக்கவும்
3.
மஷினில் குடுத்து சன்ன ரவை என்று சொல்லி உடைக்கவும்
4.
அரிசி ரவை - 4 கப்; தண்ணீர் - 10 கப்; வெல்லம் 4 -6 கப்
5.
தேங்காய் ஒரு மூடி.. மெல்லிய துண்டுகளாக நறுக்க வேண்டும்
6.
காராமணி தனியாக வேக வைக்க வேண்டும்
7.
ஏலக்காய் பொடி செய்ய வேண்டும்
8.
அடி கெட்டியான பாத்திரத்தில் (பழைய குக்கர் !!!), தண்ணீர் விட்டு, அடுப்பில் ஏற்றி, கொதித்ததும், வெல்லம் போட்டு, தள தள என்று கொதிக்கும்போது, தேங்காய், காராமணி, ஏலக்காய் போட்டு, அரிசி ரவையை மெல்ல, இடது கையால் சரித்துக்கொண்டே, வலது கையால் கிளறவும்
9.
சீக்கிரம் கெட்டியாகி விடும்
10.
பெரிய தட்டில் பரவலாக போட்டு, கொஞ்சம் ஆறியதும் நன்றாக சேர்த்து பிசையவும்
வட்டமாக தட்டி, நடுவில் ஓட்டை போட்டு வேட்டில் வைத்து எடுக்கவும்
உப்பு அடைக்கு :-
கடாயில் நல்ல எண்ணெய் விட்டு , கடுகு, .பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி தாளிக்கவும்
2
கப் ரவைக்கு, 4 கப் தண்ணீர்...
தாளித்ததும், தண்ணீர், காராமணி, தேங்காய் துண்டுகள், உப்பு சேர்த்து கொதித்ததும் அரிசி ரவை போட்டு கிளறவும்
இறக்கி வைத்து, ஆறியதும், சேர்த்து பிசைந்து, வட்டமாகவோ, நீள பிடி குழக்கட்டையாகவோ செய்து வேட்டில் வைத்து எடுக்கவும்
வெண்ணை தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும்.
மாவை வறுத்து செய்வதை விட அரிசியை வறுத்து, சன்ன ரவையாக உடைத்து செய்வது டேஸ்ட் பிரமாதமாக இருக்கும், ஒட்டாது.
---------------------------------------------------------------------------------------- 

 திருவாதிரை களி..
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, அதனுடன் 1 பிடி பயத்தம் பருப்பு சேர்த்து ,கடாயில் போட்டு, பொரிய வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதை மெஷினில் குடுத்து சன்னமான ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
அடி கெட்டியான பாத்திரத்தில், (குக்கரில் ,அல்லது வெண்கல பானையில்) ஒரு பங்கு ரவைக்கு 2 1/2 பங்கு என்ற விகிதத்தில் (நல்ல அரிசியாக இருந்தால் மூன்று பங்கு தாங்கும்) தண்ணீர் வைத்து, ஒரு பங்குக்கு 2 1/2 பங்கு விகிதத்தில் வெல்லத்தை உடைத்து போட வேண்டும்.(நான் 3 பங்கு வைப்பேன்.. இப்போதெல்லாம் வெல்லத்தில் தித்திப்பு குறைச்சலாக இருக்கிறது)
நீர் கொதித்து வரும்போது, ஒரு மூடி தேங்காய் துருவலையும் சேர்த்து, தள தள வென்று கொதிக்கும்போது, அடுப்பை சின்னதாக வைத்து, அரிசி நொய்யை சீராக கொட்டிக்கொண்டே கிளற வேண்டும்.
அப்பப்ப அடி பிடிக்காமல் கிளறிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
களி வெந்ததும் அதி ஏலக்காய் பொடி, வருத்த முந்திரி பருப்பு, நெய் சேர்த்து கிளற வேண்டும்.
அப்படியே மூடி வைத்தால், கொஞ்ச நேரத்தில் களி பொல பொல வென்று உதிர்ந்து கொள்ளும்.
நான் இப்போதெல்லாம் களி க்கான எல்லா சாமான்களையும் போட்டு, கிளறி, electric rice cooker க்கு மாற்றி விடுகிறேன். ஈசியாக இருக்கிறது.