Friday, October 27, 2017

விரதங்கள்......

எங்காத்தில இருந்த அத்தை சில பல விரதங்கள் எடுத்துண்டா ..
அதில ஒண்ணு - அரச மரம் சுத்தறது...
அதாவது... திங்கள் கிழமை அமாவாசை வந்தா ரொம்ப விசேஷம்.. அன்னிக்கு அரசப் பிரதட்சிணம் பண்றது ன்னு ஒரு ஐதீகம்... அதை விரதமா எடுத்துண்டு, அத்தை பண்ணுவா... 108 பிரதட்சிணம் பண்ணனும்...
எண்ணிக்கை தவறாம இருக்க, ஏதாவது எடுத்துண்டு போவா ..
வேர்க் கடலை, போட்டுக் கடலை உருண்டைகள், பூவம்பழம் என்று சில சௌகரியமான சாப்பிடும் ஐடங்கள் ...108 எண்ணி. 
அரச மரத்தடியில் அந்த தூக்க வெச்சிட்டு, பக்கத்தில ஒரு காலி பாத்திரம்... (நான் காவல் இருப்பேன் - நான் நிச்சயம் பூனை இல்லை !!)
ஒவ்வொரு பிரதக்ஷினத்துக்கும், ஒவ்வொண்ணா எடுத்து காலி பாத்திரத்தில் போடுவா...
108 முடிஞ்சதும், கோவில்ல எல்லாருக்கும் குடுப்பா... நான் எடுத்துக் குடுக்கறச்சே எனக்கு ரொம்ப பெருமையோ பெருமையா இருக்கும்.. (அதாங்க.. எனக்கு குடுக்கப் பிடிக்கும் !!)
(சில பேர், மஞ்சள் ,ரோஜாப்பூ என்று எடுத்துண்டு போவா) எங்கத்தை அதெல்லாம் avoid பண்ணிய காரணம்... புரிந்திருக்கும் !!
இன்னொரு விரதம் "ரிஷி பஞ்சமி" ... ஆத்துலேயே ஹோமம் .. அன்னி பூரா "கொலை" பட்டினி
இந்த விரதத்தை எல்லாம் "முகிக்கறது" (முடிக்கறதைத் தான் அப்படி சொல்லுவா !!) ன்னு பண்ணுவா...
அதாவது... விரதம் எடுத்துக்கொண்டவர்கள், தாங்கள் சிவலோகம் செல்வதற்குள் முடிக்க வேண்டும்... அது எப்போ என்று தெரியாததால்... சில வருடங்கள் செய்த பிறகு, முடிக்கும் பூஜையை முடித்து விடுவா... ஆனால் விரதம் தொடரும் கடைசி வரை...
பூஜை என்பது... சாஸ்திரிகளை கூப்பிட்டு, ஹோமம் பண்ணி, தம்பதி பூஜை பண்ண வேண்டும்... அந்த தம்பதி, அன்று, பார்வதி, பரமேஸ்வரன் மாதிரி.
எங்காத்தில வேற யாரு... அம்மா, அப்பா தான்...
புதுப்புடவை குடுத்து, மாங்கல்ய தாரணம் உண்டு...
இப்படியே எங்கம்மா கழுத்துல... wedding - 2; shashtiapthapoortthi - 1; sadhaabishekam - 1 ; virathangalilvandhathu - 3 ... என்று மஞ்சள் கயிற்றில் 7 திருமங்கல்யங்கள்...
அதுக்கான சமையல், ஏற்பாடுகள் எல்லாம் அம்மா அலுக்காம பண்ணி இருக்கா, அவ்வளவு வருஷம் ... சுமார் 25 years !!

1 comment: