Saturday, October 14, 2017

மோக முள்......


இன்று காலையில் மோக முள் படம்.... டிவி யில் ...
என் ஞாபகங்களை கிளறி விட்டது....
10/11 வயதிலேயே தொடர் கதைகள் படிக்க ஆரம்பித்து, அம்மா எல்லாத்தையும் கிழித்து பத்திரப்படுத்த, அப்பா அதை தானே அட்டை வைத்து, கோணி ஊசி வைத்து தைக்க... எவ்வளவு நாவல்கள் ?
பெண் கல்யாணமும் முடிந்ததும்... நிறைய நேரம் கிடைக்க, பழைய நாவல்கள் எல்லாம் வாங்கி, படித்து, சேர்க்க ஆரம்பித்தேன் retirement .க்கு அப்புறம் மறுபடியும் படிக்க !! full retirement இல்லாமலே போனது... கோச்சிங் சென்டர் ஆரம்பித்ததால்... ஆனாலும் நிறைய படித்தேன்...
புராணங்கள், இதிகாசங்கள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், வேதங்கள்.... எத்தனையோ...
இப்போது எழுத ஆரம்பித்திருக்கிறேன்... அதற்கு தூண்டுகோல் .. நீங்க எல்லாரும் !
தி. ஜானகிராமனின் எல்லா நாவல்களும் வைத்திருக்கிறேன்... அதில் மோக முள் ஸ்பெஷல்...
அதை படிக்கும்போது... பாபு , யமுனா ... இரண்டு பேரையும் மறக்க முடியுமா..?
கடைசியில், பாபு சென்னையில் நல்ல சந்கீதத்துக்காக தவித்து, யமுனாவுக்காக உருகி, பூனா போய் சங்கீதம் கற்று, அதற்காக யமுனாவை பிரிந்து...
கதையை படிக்கும்போதே, கண்களில் நீர் வருவது...
யமுனா அம்மா செத்து, அவள் தனியாளாக ஆகும்போது...
பாபுக்காக தன்னையே கொடுக்கும்போது...
பாபுவின் அப்பா அம்மாவை நினைத்து.... அவர்கள் பிள்ளையை பிரிந்து, என்ன செய்வது என்று தெரியாமல், தனியாக கிராமத்தில் இருப்பதை நினைக்க அழுகையே வரும் எனக்கு...
பாபு யமுனாவையும், குடும்பத்தயும் பிரிந்து பூனா போய் இரண்டு வருடம் இருக்கும் போது....
சினிமா ஓரளவிற்கு  நன்றாகவே இருந்தது... ஆனால் முழு கதையையும் கொடுக்க முடியுமா ?
தி. ஜானகி ராமனின், "செம்பருத்தி", ரொம்ப பிடிக்கும்...
அவரை மாதிரி தஞ்சாவூர் வாழ்க்கையை விவரித்து, உயிர் கொடுத்தவர் யாருமில்லை !!
இப்போது எனக்கு வேண்டுவதெல்லாம்... ஒரு கம்ப்யூட்டர், இருக்கிற புக்ஸ் எல்லாம் மறுபடியும் படிக்கணும்...
அதுக்கு... கொஞ்சம் அதிக நேரம் கிடைக்க, "லக்ஷ்மி", "சிவசங்கரி" நாவல்களில் வருகிறமாதிரி, ஒரு மாமி, கூடவே இருந்து சமைத்துப்போட்டு, வீட்டை பார்த்துக்கொண்டு, வாரத்தில் ஒரு நாள் தலையில் சூடு பறக்க எண்ணெய் தேய்த்து விட்டு, அன்று மிளகு ரசம் வைத்து.... ஆஅஹாஆ...
"ஆனாலும் உனக்கு ஆசை அதிகம் அத்தை " .... கர்ணன் படத்தில், கிருஷ்ணர், குந்தியிடம் சொல்வது போல் !!!
சில மாதங்கள் முன் வரை... "வாழ்ந்தது போதும்... I want my life to end now.... enough" என்று சொல்லிக்கொண்டிருந்தேன்....
இப்போது....
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ... எங்கள்... இறைவா...என்று
அதிகமில்லை... சில வருஷங்களாவது வாழ ஆசைப் படுகிறேன்... !!

No comments:

Post a Comment