Friday, October 21, 2016

OLD TYPE UTENSILS

VESSELS

அந்தநாள்சாமானெல்லாம்நாமதூக்கிப்போட்டதுக்குமுக்கியமான  காரணங்கள்..
பெரிசாஇருக்கும், maintain பண்ணுவதுகஷ்டம், எல்லாம்கனமாகஇருக்கும்...
அவைகளைதேச்சுசுத்தம்பண்ணுவதுஒருபெரியவேலை...

(அப்போஅதுகஷ்டமாதெரியல்லே... ஆனா.. பிளாஸ்டிக்ராணி  நம்மைஆளஆரம்பித்ததும் , அவள்கலரில், பிடியின்சௌகரியத்தில், மெல்லிய , கனமில்லாதஉடலில்மயங்கித்தான்போனோம்.. அதோடுவிலையும்குறைவு, பழையதுணிகுடுத்தால்வாசலுக்கேவந்துபாத்திரக்காரன்குடுப்பான்... குளிக்கும்அறைசுவற்றின்நிறத்துக்கேற்பபக்கெட், மக் ; அதுவும்மெட்ராஸ்ஈவ்னிங்பஜார், சைனாபஜார்போனால் , அள்ளிண்டுவரத்தோணும் !!)


குளிக்ககுழாயடியில்  பெரியபித்தளைஅண்டா, கங்காளம், சொம்பு,பிறையில்சோப்வைக்கபித்தளைடப்பா, மஞ்சள்உரைக்க, சின்னகருங்கல்...
இந்தகருங்கல்கூடவிதவிதமானஷேப்பில்அழகாகசெய்துவிற்றுகாசுபார்த்தார்கள்.. 
இந்தபெண்களுக்கேஅழகுணர்வும், கலைரசனையும்அதிகம். புதுசாகஇப்படிஎதுவந்தாலும்முழுஆதரவு. தான்வாங்குவதுமட்டுமல்ல; பிறத்தியார்எல்லாம்பார்க்கிறார்களஎன்றுஉறுதிசெய்துகொள்வார்கள்.. உடனேமற்றவரும்வாங்க, ("நீமாங்காய்ஷேப்வாங்கினா; நான்ஹார்ட்ஷேப்வாங்குகிறேன்" என்றுபோட்டிவேறு)
ஆண்கள், சிந்தித்து, மூளையைக்கசக்கி, புதுசுபுதுசாகஏதாவதுசெய்துவியாபாரத்தைபெருக்கி, பணக்காரர்ஆவதே, இந்தபெண்களைநம்பித்தான்... 
ஆண்கள் , எவ்வளவுதான்படித்து, technical ஆகச் 
சொன்னாலும், யாராவதுலேடிகொடுக்கும் certificate க்குத்தான்மதிப்புஅதிகம் !! அதைபொறுத்துத்தான்வியாபாரமும் !!

சரி, நம்மவீட்டுசாமான்களுக்குவருவோம்...
சமையல் அறையில்...
சாதம் வடிக்க - வெண்கலப்பானைசிப்பல் தட்டுஓல வட்டி கரண்டி
குழம்பு வைக்க... ஈயம் பூசின அடுக்குகுழிவு கரண்டி...
ரசம் வைக்க ஈயச் சொம்பு 

கூட்டு பண்ண - வெண்கல உருளி,
வத்தக் குழம்புமிளகு குழம்புபுளிக்காச்சல் எல்லாம் மாக்கல் சட்டியில் .

இதைத் தவிர பித்தளை அருக்கஞ்சட்டிகாபி டபராடம்ளர்கள்பறிமாற தாம்பாளங்கள்சாதம் கலக்க பித்தளை பேசின்கள்தண்ணி குடிக்க லோட்டா 
(இப்போ பித்தளை லோட்டா  தேடினேன்.. தேடினேன்.. அப்படித்  தேடினேன்.. கிடைக்க வில்லை) ,
குடிக்கசமைக்கதண்ணீர் ரொப்பி வைக்கும் குடங்கள்தவலைகள்
 இரும்பு இலுப்பச் சட்டி, ஜல்லிக் கரண்டி, இரும்பு தோசைக்கல், தோசைத் திருப்பி, அடைக் கல் (தண்டவாளக் கல்)    
 பாகு வெக்க, வெல்லம் காச்ச, அருக்கஞ்சட்டி , பண்டிகை நாட்களில் சமைக்கும் பலவித கறி களை எடுத்துப் பறிமாற, பித்தளை கொத்துத் தூக்கு, சாம்பார் பரிமாறும் பித்தளை வாளி,

மாவரைக்க கல்லுரல், சட்னி அரைக்க அம்மி, மாவு, மிளகாய் பொடி இடிக்க இரும்பு உலக்கை... 
ஊறுகாய் ஜாடிகள், எண்ணெய் ஜாடிகள், ஜாடிக் கிண்ணங்கள்...
பித்தளை காபி ஃ பில்டர், ...
மேலிருந்து ஹூக் மாட்டி, அவைகளில் தொங்கும் பித்தளை தூக்குகள்...
தயிர் கடையும் மத்து, கீரை கடையும் மத்து - இவைகள் மரத்தில்- இவைகளைத் தவிர மரக் கரண்டிகளும், கரண்டி முட்டைகளும்...
மண் அடுப்பு , இரும்பு அடுப்பு (விறகு அடுப்புகள்), குமுட்டி (கரி அடுப்பு)   
சமையல் அறையில் மட்டும் இத்தனை சாமான்கள் !!
[சமைத்த சாப்பாட்டை, ணித்த அடுப்பின் மேலும் குமுட்டி யின் மேலும் வைத்திருக்க, சூடு ரொம்ப நேரத்துக்கு இருக்கும்.

காலையில் 10 மணிக்கு சாப்பிடும் வழக்கம் உள்ளவருக்கு, நல்ல, சூடான சாப்பாடு. 
சாப்பிட இலைதான்... தட்டு கிடையாது... இலை உடம்புக்கு நல்லது; hygenic ; தூக்கி எரிந்து விடலாம்... நம் தட்டு மாதிரி தேய்த்துத் தேய்த்து use பண்ண வேண்டாம்;
இந்த வாழை இலைகளை ஆடு மாடு கூட சாப்பிடும்... மக்கினாலும் மண்ணுக்கு நல்லதுதான்.. 
சாப்பாடு மிஞ்சினால் பத்திரப் படுத்த fridge கிடையாது; கறிகாய் கள் அன்னன்னிக்கு fresh ஆக வாங்கப்படும்; ]         
சரி, இவைகளை கட்டிக் காப்பாற்ற முடியாமல் என்ன பிரச்சினைகள்
அடுப்பில் வைக்கும் பாத்திரங்களில் கரி ஏறும்... அதனால் அடுப்பில் வைக்கும் முன் அரிசிமாவை எடுத்து, தண்ணீர் தொட்டு, அடியில் பூச வேண்டும்.. அப்படியும் கரி ஏறும்; ஆனால் தேய்த்து எடுப்பது சுலபம். 
சமைக்கும்  பித்தளைப் பாத்திரங்களில், ஈயம் பூச வேண்டும். இல்லாவிட்டால் கச்சிப் போய் விடும் 
ஈயம், அடுப்பில் வைத்தால், தண்ணீர் குறைத்தால் உருகி விடும்..
பித்தளை பாத்திரங்களை தேய்க்க, புளியும், அடுப்புச் சாம்பலும்... சாம்பலை எடுத்து, சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  
தேய்ப்பதற்கு தேங்காய் நார்... இதெல்லாமாக சேர்ந்து பாத்திரம் தேய்க்கும் இடத்தை கொஞ்சம் அசுத்தம்மக்கத் தான் செய்யும் ! அதை அலம்பி சுத்தப் படுத்த ஒரு நாழி !! 
அப்போ எல்லாம் கொல்லைப் பக்கம் வாழை மரங்களை நட்டு வைக்க, இந்த சாம்பல் கலந்த தண்ணி, பத்து பசைகள் வாழை மரத்துக்கு போகும். இப்ப என்ன, சமையல் ரூம் sink  கிட்ட வாழை மரமா வைக்க முடியும் ?
ஜாடிகள் கை தவறினால் உடையும்...
கல்லுரல் வாங்கினால் பழக்க வேண்டும்.. அதாவது, அரைக்கும்போது, கல்லும் மண்ணும் வந்து கொண்டே இருக்கும். அதை போக்க, தினமும் அரசி நொய், தவிடு, உமி போட்டு அரைத்து எடுக்க வேண்டும்... சில நாட்கள் ஆகும் சுத்தமாக.. அம்மியும் இப்படித்தான் பழக்கப் படுத்த வேண்டும்.

அது மட்டும் இல்லாமல், ஒன்றிரண்டு வருடத்தில் கல்லுரலும், அம்மியும், சுர சுரப்பு குறைய.. "அம்மி பொளியலியோ" ன்னு கத்திண்டு போறவனை கூப்பிட்டு, பொளிய சொல்லி, மறுபடியும், உமி, தவிடு ன்னு அரைத்து சுத்தம் பண்ணனும்... அதுக்கெல்லாம் இப்போ நேரமோ, பொறுமையோ இல்லை என்பது தான் நிஜம்...
கல் சட்டியை பழக்க, 10நாட்கள் ஆகும் ! தினமும் சாதம் வடிக்கும் கஞ்சியை சூடாக ஊற்றி வைக்க வேண்டும்; அப்புறம் சமைக்கும் குழம்பு, கூட்டு எல்லாம் இதில் போட்டு வைக்க வேண்டும்...அப்புறம் "உடைந்து விடுமோ"  பயந்துகொண்டேஅடுப்பில்வைக்கவேண்டும்.  .
இப்போ எல்லாம் husband ஐ பழக்க, குழந்தைகளை பழக்க, வேலைக்காரியை பழக்க, நாயை பழக்க.. 
எவ்வளவு பேரை பழக்க வேண்டி இருக்கிறது ? இதில் கல்லுரல், அம்மியையும், கல் சட்டியையும் வேற பழக்கணுமா ?  
ஆனால் ஒன்று.. ஈயமும் பித்தளையும் அப்படியே காசு.. விற்றால்... எவர் சில்வருக் குத் தான் மதிப்புக் கிடையாது... 
(பின்னே  ஏன் "ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்" ன்னு கூவறாங்க ?)
இப்போ நாம் உபயோகிக்கும் பாத்திரங்கள்... 
இடத்தை அடைக்காது - flat இல், சின்ன சமையல் அறையில், அலமாரியில் வைக்கலாம்..  
சோப் போட்டு தேய்ப்பது  சுலபம்
கல்லுரலில் அரைத்தால் கை வலிக்கும். அம்மிக்கு பதில் மிக்சியில் சீக்கிரமாக வேலை முடிந்து விடும்...(அப்போ தானே T.V. சீரியல் பாக்கலாம் !!)
(ஆனால், கை வலியும், spondulaities ம், முதுகு வலியும்  இப்போ கொஞ்சம்அதிகமாகஇருக்கிறதோ? கனம் தூக்க தெம்பு இல்லையோ ? )  
சமையல் அறை sink லேயே தேய்க்கலாம்.. குந்தி உட்கார வேண்டாம்...   
கண்ணாடி பாத்திரங்கள் பள பள வென்று இருக்கும்.. (ஸ்டைல்  தான் !)
எல்லாமே தூக்கி போட்டு விட்டு வேறு வாங்கிக் கொள்ளலாம்   
அதான் ரெண்டு பெரும் சம்பாதிக்கரோமே !! (நெறைய வீடுகளில்) 
எல்லாவற்றையும் விட வீட்டு வேலை செய்பவள் , பித்தளை பாத்திரம் போட்டால் ஓடி விடுவாள்  !! 
வர வர வாஷிங் மெஷினும் , டிஷ் வாஷரும் இருக்கா ; குனியாமல் பெருக்க நீளதுடைப்பமும், துடைக்க Mop ம் இருக்கா " ன்னு கேட்டுண்டு தான் வேலைக்குவரா  
அவாளாலையும் வர வர முடியல்ல... நேரம் இல்ல... !! 
ஆனால் எனெக்கென்னவோ இப்போ பழைய பாத்திரங்கள் மேல் ஒரு ஆசை வருகிறது. எல்லாத்தையும்தூக்கிப் போட்டேன் ! இப்போ வாங்குகிறேன் ! 
இன்னும் விறகு அடுப்பு தான் பாக்கி !!
gas விற்கும் விலையில், சமைக்காமல், பச்சையாக எதை எதை சாப்பிடலாம் என்று தோன்றுகிறது.
இதில் பாத்திரமாவது, பண்டமாவது?
விளையாட்டு.....

கம்ப்யூட்டர் திரையை மைதானமாக்கி
எலியை விளையாட்டுத் தோழனாக்கி
கீ போர்டேபந்தாகவும், சிப்ஸ் ஏ தீனியாகவும்
விளையாடும் சிறுவர்களுக்குத்தெரியுமா

 எட்டிப்பறிக்கும் மாங்காயின் ருசி
 
பொறுக்கி எடுத்துச்சேர்க்கும் பவழ மல்லி வாசனை
ஓடை நீரின் சில்லிப்பு
 
சாட் பூட் த்ரீயின் தாள நயம்
 
பச்சைக் குதிரை தாண்டும் லாவகம்

 
துடைத்து தள்ளும்முழங்கால் சிராய்ப்பு
 சண்டையிட்ட பின் சேரும்மகிழ்ச்சி
 வீட்டுக்குள் புத்தகப்  பையை வீசி
 
வெளியே ஓடும் கால்களின்வேகம்
 காக்காய் கடி கடித்துக்கொடுக்கும்
கமர்கட்டின் அழியாருசி

கூட்டாஞ்சோறு ஆக்கும்
குழந்தைகளின் உணர்ச்சி
 கண்ணா மூச்சிஆட்டத்தில் மாட்டும்
நண்பனின் சிணுங்கல் குரல்

 பாண்டி ஆட்டத்தில் கண்மூடி தாண்டும்
சிறுமியின் தவிப்பு .....

முடிவில்லாமகிழ்ச்சி
முடிந்து போன கால கட்டம் !!!

Monday, October 3, 2016

VAIDEESWARAN KOVIL......

வைதீஸ்வரன் கோவில்....... 


வைதீஸ்வரன் கோவில் எங்கள் குல தெய்வம்...
நான் முதல் முதல் போனது கல்யாணம் ஆனவுடன்...

(எங்கப்பாவாத்துக்கு  திருப்பதி... ஆனால் போனதே இல்லை.. அப்பா அதெல்லாம் particular இல்லை. ஆண் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கப் போனதோடு சரி. (அப்போ நான் பிறந்திருக்காத காரணத்தால்... நான் போனதில்லை.. சிம்பிள் !!)
புரட்டாசி சனிக்கிழமைஎள் சாதத்துடன்சமாராதனை செய்வதோடு, குல தெய்வ கொண்டாட்டம் முடிந்து விடும். )

புக்காத்திலிருந்து வைதீஸ்வரன் கோவில் பயணம்.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் விடியற்காலை 4  மணிக்கு அங்கு 2 நிமிடம் நிற்கும்.  அதற்கு பயந்து, தூங்காமல் கழியும் இரவு !!
இறங்கினதும், ஒரு மாட்டு வண்டி வைத்துக்கொண்டு, குருக்கள் ஆத்துக்குப்போனோம்.

family doctor maadhiri family gurukkal ! அவருக்கு கார்டு போட்டாகிவிட்டது எங்கள் வருகை பற்றி.
குருக்கள் ஆத்துக்கு போனதும், பல் தேய்த்து, காபி.
துணி மணிகளை எடுத்துக்கொண்டு... கோவில் குளம்..
அந்த குளத்தில் குளித்தால் வியாதி எல்லாம் தீரும் என்ற நம்பிக்கை...
நான் ரொம்ப பவ்யமாக, மகா த்ரில்லுடுடன், என் மாமியார் அடி ஒற்றி, S.K. பக்கத்தில் வர, மனமெல்லாம் பூரிப்புடன் கோவில் என்ட்ரி !
மாமியாருக்கும், முதல் மாட்டுப்பொண்ணை அழைத்து வரும் பெருமை..முகமெல்லாம்... !!
 அந்த குளத்தில் பாசி நெறைய.... அந்த வயதில் பயமில்லை...
எல்லோரும், தடுக்கி விழுந்து, குளிரில் அலறி, முங்கி எழுந்து (மஞ்சள் இழைத்து கண்டிப்பாக பூசிக்கொள்ள வேண்டும் !!), கரை ஏறி, அங்கேயே டிரஸ் மாத்தி - மடிசார் (அது ஒரு லாவகம்... கற்றுக்கொண்டேன் !!)...கோவில் குளம் 
வெல்லம் கரைத்து, உப்பு மிளகு போட்டு, அதையே பிரசாதமாக ஒன்றிரண்டு சாப்பிட்டு,முடிந்து வைத்த காசுகள், வேண்டிக்கொண்ட உருவங்கள் எல்லாம் உண்டியலில்  செலுத்தி...

மாமியார் மாவிளக்கு போட்டார்... (கல்யாணத்துக்கு பிறகு முதல் ட்ரிப், முடி இறக்கும்போது - மாவிளக்கு..)அதற்குள் குருக்கள் ஐந்து அர்ச்சனைக்கு சாமான்கள் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் ஒரு அர்ச்சனைக்கு 2 அணா. அர்ச்சனை டிக்கட் 1 அணா.

பிள்ளையார், அங்காரகன், சுவாமி (சிவ லிங்கம் , முத்து குமாரசுவாமி(முருகன்), அம்மன்... அர்ச்சனை... முடிந்து பிரசாதம்...

அங்கு வீபுதியுடன் சேர்த்து மருந்து உருண்டைகள் தருவார்கள்... ஆத்தில் எப்போதும் அது இருக்கும்... யாருக்காவது உடம்பு சரி இல்லைன்னா, மாமனார் இந்த்ராக்ஷி ஜபம் சொல்லி, விபூதி இட்டு, மாத்திரை தருவார். இன்றும் தொடருகிறது, இவர் மூலமாக !!

இந்த முதல் ட்ரிப் மறக்க முடியாதது... எனக்குதான் என்ன பெருமை; என்ன சந்தோஷம்...
ஒரே நாளில் மாறிப்போனேன்... வைதீஸ்வரனுக்கு அடிமையாக! "எங்காத்துக்கு வைதீஸ்வரன் கோவில் குல தெய்வம்" என்று சொல்வதில், அன்றிலிருந்து, இன்று வரை பெருமை... அப்படித்தான் நாம் எல்லோரும் புக்காத்தில் ஒன்றி போகிறோம் !! (பெண்கள் பெண்கள் தான் !)

இங்கு மட்டும் நவக்ரகங்கள் ஒரே திசை நோக்கி இருக்கும்.

ஜடாயு மோட்சம் குண்டத்தை பார்த்து, (ஜாடாயுவும், ராமரும், ஜடாயு சொன்ன செய்தியும்.. அப்படியே படமாக மனதில் ஓட).. அதிலிருந்து விபூதி இட்டுக்கொண்டு...

யானையிடம் பயந்து நடுங்கி, ஆசி வாங்கிக்கொண்டு... (அந்த யானை இப்போது இல்லை... மதம் பிடித்ததால் காட்டில் விட்டு விட்டார்களாம்)


அங்காரகன் - (செவ்வாய் ஸ்தலம்)அவசரமே படாமல், நிதானமாக... எல்லாம் முடித்து, பசியோடு வந்தால், குருக்கள் ஆத்தில் சாப்பாடு. அந்த சிம்பிள் சாப்பாடு அமிர்தமாக இருக்கும் . என்ன.. தண்ணீர் ஜோடு தவலையில் கொஞ்சம் மோர் விட்டு கலக்கி, சாதத்திற்கு மோர் விடுவார்கள் !!

பிரியா விடை பெற்று, அடுத்த ஒரு வருஷத்துக்கு, மாத அர்ச்சனைக்கு மொத்தமாக பணம் கட்டிவிட்டு, 3 மணி ரயில் ஏறி வருவோம்...

இந்த 45 வருடங்களாக, வருஷத்துக்கு ஒரு முறை தொடருகிறது இந்த விசிட்... (சில அசந்தர்ப்பமான வருஷங்கள் தவிர்த்து....)
சில வருஷங்களுக்கு பிறகு, நேராக அங்கே போகாமல், கும்பகோணம் அல்லது சிதம்பரம் என்று தங்கி... சுற்றுவட்டு கோவில்களெல்லாம் விசிட் அடித்து, இந்த கோவிலையும் முடித்து வர ஆரம்பித்தோம்..
டிபன்- அங்கே இருக்கும் தைலாம்பாள் மெஸ்... ரொம்ப சின்னது.. ஆனால், இலை போட்டு (இப்போது  மாதிரி ஒரு plate இல் இரண்டு இட்லி, ஒரு தோசை என்று குடுக்க மாட்டார்கள்...வீடு மாதிரி, அடுக்கில், நிறைய கொண்டு வந்து, பரிமாறுவார்கள்...
சாப்பாடு, மாயவரம் காளியாகுடி மெஸ்...
அப்புறம் காரில் போக ஆரம்பித்தோம்...
இதெல்லாம் சின்ன விஷயம்... நான் சொல்ல வந்தது வேறே...
கோவிலில் குருக்கள் முதல் அர்ச்சனையின் போது பேர்நட்சத்திரம் கேட்பாரா..?
அப்போ ஆரம்பிக்கும் S.K. க்கு வயிற்றில் கடுபடு ! தனக்கும், எனக்கும் சொல்லி விட்டு, என்னை சொல்லச் சொல்லி விடுவார்.
நான் பரீட்சையில் பாடம் ஒப்பிக்கும் மாணவன் போல்... வரிசையாக..
பிள்ளைகளுக்கு அவர்கள் சர்மன் நாமம் சொல்லி, நட்சத்திரம், கோத்ரம் சொல்லி, மாட்டுப் பெண்கள், பேரன் அதே..அதே..
பெண் பேரை முழுமையாக சொல்லி, மாப்பிள்ளை, கோத்திரம், பேரக்குழந்தைகள், நட்சத்திரம்.. எல்லாம் ஒப்பித்து விடுவேன்..
நான் சொல்ல சொல்ல... இவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச self confidence உம் போய் விட்டது...
இப்போதெல்லாம்தன் பெயரை சொல்லிவிட்டு, என் பெயரை சொல்ல கூட உளறுகிறார் !!
(டீச்சர் பக்கத்தில் நின்றால் குழந்தைகளுக்கு பதில் தப்பாக போகும்.. அது ஒரு வித
நாடி - ஓலை

 வைத்தீஸ்வரன் கோவிலை பற்றி சொன்னால், நாடி ஜோசியம் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. 
ஊருக்குள் நுழையும்போதே ஆரம்பித்து விடும் நாடி ஜோசியம் போர்டுகள். ஊர் முழுவதும் பரவிக்கிடக்கும். 
நாடி என்பதெல்லாம் உண்மையா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், நான் இரண்டு தரம், என்னதான் சொகிறார்கள் என்ற ஆவலால் பார்த்தேன். சொல்லப்பட்ட விதம், நம்பிக்கை தருவதாக இல்லை. 
ஒரு தரம், ஒரு இடத்தில் பார்த்து விட்டு, இன்னொரு ட்ரிப் இல் வேறு இடத்தில் பார்த்தேன். 
அவர்கள், நம் பெயரை கேட்டுவிட்டு, "உங்க நாடி ஓலை இங்கே இருக்கான்னு பாத்துட்டு சொல்றேன், இருந்தா, பணம் குடுத்தா போரும்" ன்னு சொல்லிட்டு, அரை மணி தேடிவிட்டு, "இருக்கு" ன்னு பணம் வாங்கிக் கொள்கிறார்கள். 
இரண்டாம் தடவை, வேறு இடத்தில் பார்க்கும்போது, என் ஓலை இருப்பதாக சொல்லி, படித்து முடித்த பின், நான் கேட்டேன் "எப்படி ஒருத்தர் ஓலை ரெண்டு இடத்தில் இருக்க முடியும்?" என்று.. பட்டென்று வந்தது பதில். "நீங்க முதலில் பார்த்தது 'அகத்தியர் நாடி' ; இது 'மகா அகத்தியர் நாடி' .
எனக்கு கல்யாண பரிசு தங்கவேல், ஜெமினி வசனம் தான் ஞாபகம் வந்தது
"அந்த மன்னார் அண்ட் கம்பெனில நான்தானே மனேஜர்?" 
"எங்களது ராஜ மன்னார்" !!!!