தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க சோம்பல்...
beauty parlour போய், style ஆ oil massage ன்னு சொல்லி, லேசாக சூடு செய்யப்பட எண்ணையை (ஆயுர் வேதிக் என்று சொல்லியே நம்மை கவுத்து ) தலையில் வைத்து, தலை முடி நடுவில் விரலால் கோதி மசாஜ் செய்து, ஷாம்பூ போட்டு அலசி, drier சூடாக வைத்து (கெடுதல் ன்னு தெரிஞ்சும்) காய வைத்து, விரித்துப் போட்டு, காசை பிடுங்கி அனுப்பும் போது அம்மாவின் ஞாபகம்.
இந்த மாதிரி விடுவாளா அம்மா...
ஞாயத்திக் கிழமை க்கு என்று ஒரு படுத்தல் ...
ஒரு டபரா எண்ணையை எடுத்து, தாராளமாக உச்சந்தலையில் கொட்டி , 'டொப், டொப் என்று பத்து தட்டு தட்டி, உச்சியில் சூடு பறக்க அழுத்தி அழுத்தி தேச்சு "ஒடம்பு சூடு கண்டு போச்சு" ங்கற கமென்ட் சொல்லாம இருந்ததில்ல...
தலை முழுதும் முடிந்ததும், நுனி முடி வரை எண்ணெய் வைத்து உருவி, தூக்கி கட்டி விட்டு, டபராவை வழித்து, முகத்தில் இரண்டு கன்னத்திலும் தடவுவாள் (முகம் மறக்காமல் இருக்கவாம் !!)
பிறகு ஒரு கிண்ணத்தில் எண்ணெய் குடுத்து, உடம்பு முழுதும் தாராளமாக பூசிக்கச் சொல்லி, பாத் ரூமில் 1/2 மணி தேவுடு காத்தப்புரம் சீயக்காய் படலம்.
ஆத்தில் அரைத்த பொடி. சீயக்காய், அரப்புக் கட்டி, முழு உளுந்து, வெந்தயம், காய்ந்த எலுமிச்சை தோலி எல்லாம் போட்டு அரைத்து, கப்பி இல்லாமல் சலித்து வைத்திருப்பாள் . அதை தாராளமாக ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்து வந்து, அத்துடன் சாதம் வடித்த காஞ்சி சேர்த்து கரைத்து, உச்சந்தலையில் ஆரம்பீத்தால், கர கர என்று எண்ணெய் போக தேய்த்து, நிறைய தண்ணீர் விட்டு அலசி.....
உடம்புக்கும் அந்த சீயக்காயை தேய்த்துத் தான் குளிக்க வேண்டும்.
பிறகு, 1/2 மணி டவல் வைத்து துடைத்து, சாம்பிராணி போட்டு, (கூடை மேல் கவுத்து) ... விட்டு விடுவாள். அன்று முழுவதும் எண்ணெய் தடவ கூடாது. சீப்பு போடக் கூடாது. சின்ன பின்னல் போட்டு, விரித்து விட்டு விடுவாள்.
சாயந்திரம், பொறுமையாக, ஒவ்வொரு முடியை விலக்கி, சிடுக்கு எடுத்து, கையாலேயே வாரி, தளர பின்னி விடுவாள்.
மறு நாள்தான், கொஞ்சம் எண்ணெய் தடவி, சீப்பால் வலிக்க வலிக்க வாரி, இழுத்துப் பின்னுவாள்...
சண்டே வந்தாலே night mare !!
இப்போ ஏதோ ஒரு குட்டிப் பெண்ணிடம் தலையை குடுத்து விட்டு, டிப்ஸ் வேறு !!

நல்லவேளையா இந்த பார்லர் போறதெல்லாம் பழக்கப்படுத்திக்கலை. இன்னமும் எண்ணெய்க் குளியல் தான். ஆனால் சீயக்காய் அரைப்பதில்லை. மீரா சீயக்காய் இல்லைனா பதஞ்சலியோட சீயக்காய் ஷாம்பூ! அது மட்டும் மாறி இருக்கு வேறே வழியில்லாமல்.
ReplyDelete