Wednesday, October 18, 2017

த.ந. குமார சாமியின் "அன்பின் எல்லை" ..

த.ந. குமார சாமியின் "அன்பின் எல்லை" ..
பழைய நாவல்... 
வெல்லூர் தாண்டி அரும்பாக்கம் என்ற கிராமமும், காஞ்சியும் கதை களங்கள்
"வீட்டை இடித்து, கல்யாண கூடம், சொக்கட்டான் தாவாரம், போஜன சாலை, இரண்டு சமையல் கட்டு, வராந்தா, மாடி,.....
15000 ரூபாய் செலவு !! செலவை பார்த்தால் கடைசி காலத்தில் சௌகரியமாக இருக்க முடியுமா ?"
13 வயது சீதாவின்(கதை நாயகி) கல்யாணத்திற்கு (கதை நாயகி) 5000 ரூபாய் வேண்டுமே என்று அவள் அப்பா கவலை.
15 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து, 6000 பணம் புரட்டி அமோக கல்யாணம் !
இதில் ராக்குடி, புல்லாக்கு, புஷ்பா ராக தோடு, மாட்டல், அட்டிகை, நாக வோத்து, வங்கி, ஒட்டியாணம், நெளி மோதிரம், கொலுசு !!!
க்ருஹப்ரவேசம் முடிந்து எல்லோரும் வண்டி கட்டி (ஆக்ராஹாரமே போகிறது) .. காலை கிளம்பி, ஸ்டேஷன் போய், passenger பிடித்து, அரக்கோணம்.. அங்கே 3 மணி நேரம்.. மறு paasanger.. திருத்தணி போய் சேர மாலை 4 . 30 ஆகிறது. கூடை இட்லி, கூஜாவில் காப்பி...!!!
பசும் பால், வாசலில் கறந்து, படி எட்டணா !!
சுந்தரின் (கதை நாயகன்) அக்கா.. Jamshedpur போக, சுந்தர் துணை.. (டிக்கெட் ரிசெர்வ் எல்லாம் கிடையாது !!) அதற்க்கு.. சுந்தருக்கு அவன் அப்பா.. இரண்டு மாத செலவுக்கு தாராளமாக 100 ரூபாய் தருகிறார். சுந்தர் கெஞ்சி 200 ரூ. வாங்கிக்கொள்கிறான் !!
அந்த அக்கா மெட்ராசில் 500 ரூ. க்கு ஏக்க சக்க சாமான் வாங்கி போகிறாள்.
மெட்ராசில் டீச்சர் வேலை பார்ப்பவள், (60 ..பிறகு 80 ரூ.சம்பளம்) .. நடந்து பள்ளிக்கு போகிறாள்.. ரிக்ஷாவுக்கு மாதம் 7 ரூ. செலவென்று !!
சீதாவின் அம்மா 30 பவுன் ஒட்டியாணத்தை 550 ரூ. க்கு அடகு வைத்து, தலை தீபாவளிக்கு, பட்டு புடவை, வேஷ்டி, குழந்தைகளுக்கு பட்டு சட்டை, மாப்பிள்ளைக்கு அரை பவுனில் மோதிரம் (நடுவில் தன புல்லாக்கிலிருந்து வைரம்) , பக்ஷணம் எல்லாம் செய்து, பணம் மீறுகிறது !!
சுந்தர் இங்கிலாந்து சென்று இரண்டு வருடம் படிக்க அப்பாவிடம் "மொத்தம் 7000 செலவாகும்" என்று கேட்கிறான் (கப்பலில் பயணம்) !!
லண்டனில் paying guest ஆகா வாரத்திற்கு 2 பவுண்டு கொடுக்கிறான்..
200 ரூ. க்கு லண்டனில் சூட் தைக்கிறான்... !!!!"
படிக்க படிக்க சுவாரசியம். என்ன.. தஞ்சாவூர் பாணி மிஸ்ஸிங் !!!
(தமிழ் நாவல் பிடித்தவர்கள், தஞ்சாவூர் வாழ்க்கை முறை பிடித்தவர்கள், படிக்க வேண்டிய நாவல்கள் சிவ சங்கரியின் "பாலங்கள்" , தி.ஜானகிராமனின் எல்லா நாவல்களும்... :அன்பின் எல்லை" உம் !!!!

No comments:

Post a Comment