தஞ்சாவூரில் மேல வீதியில் எங்க மாமா வீடு... ரொம்ப கிட்டக்கதான்... ஆனால் அப்பாவுக்கு, நாங்கள் எங்கும் போக கூடாது... !! அப்போது புரிய வில்லை... கேள்வியும் கேட்டதில்லை.. அதை பற்றி அலசி ஆராய்ந்து பேசியதும் இல்லை.
ஒரே ஒரு முறை அம்மா அனுப்பினாள்.
அம்மாமி (அப்போதெல்லாம் மாமியை அம்மாமி ன்னுதான் சொல்லுவோம்) அடைக்கு அரைத்து வைத்திருந்தாள். ஒரு பங்கு அரிசிக்கு, சமமாக ஒரு பங்கு பருப்புகள் ; கல்லுரலில், ஒன்றிரண்டாக, கெட்டியாக அரைத்து, தேங்காய் நிறைய துருவி போட்டு..
நான் போனதும்.. விறகடுப்பில், அடை கல்லை போட்டு (அடைக்கு என்று தனி கல்.. தண்டவாளக்கல்.. கனமாக இருக்கும்)..
அடை வார்க்க மாட்டார்கள்.. தட்டுவார்கள்.. கெட்டி மாவை கையால் எடுத்து, அடை கல்லில் வைத்து, கையை தண்ணீரில் தோய்த்து, அடையை கையால் வட்டமாக, கனமாக தட்டுவார்கள்... இரண்டு குழி செய்து , தாராளமாக எண்ணெய் விட்டு ...
அடுப்பை நிதானமாக எரிய விட்டு, நன்றாக வேகவைத்து,
சமையல் அறையில் கீழே உட்கார்ந்துதான் அப்போதெல்லாம் சாப்பிட வேண்டும்... எல்லார் வீட்டிலும் சமையல் அறை பெரியதாகவும் முக்கியம் வாய்ந்ததாகவும் இருக்கும்...
இலை கிழிசல் (சின்ன துண்டு இலைக்கு அதான் பெயர்) போட்டு, அடை, வெல்லம், வெண்ணை போட, சாப்பிட்டதின் ருசி இன்று வரையில் என் நாவு மறக்க வில்லை !!
(ஒரே ஒரு அடை தான் ... வயிறு ரொம்பி விடும் ... fanஏ இல்லாத காலத்தில், 9 கஜ புடவையுடன், சிவப்பு மாமி, அடுப்படியில் வேர்த்து, தீயில் இன்னும் சிவந்து... ஒரு complaint ... முக்கல்... முனகல்...!! ஊஹும் !!)
எப்போதோ வந்தாலும், மாமிக்கு ஒரு நாத்தனாரின் பெண் மேல் இவ்வளவு ஆத்மார்த்தமான பாசம் காட்ட தெரியுமா ??
அன்று சாதாரணமான விஷயம்.. இன்று ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது …..

No comments:
Post a Comment