Saturday, October 14, 2017

நம் மூளையில்........

நம் மூளையில் ஆயிரக்கணக்கான கெமிகல்ஸ் இருக்கின்றன.. மில்லியன்ஸ் நரம்புகளும் நெட் வொர்க் ஆக தொடுக்கப் பட்டுள்ளது... சிக்கு கோலம் மாதிரி.
இந்த கெமிகல்ஸ் ஒரு பாலன்ஸ் இல் இருக்க வேண்டும்.. மிக துல்லிய கணக்கு ... கடவுளின் அற்புதமான ஏற்பாடு... மனிதனால் காபி அடிக்க முடியாதது.
இந்த பாலன்ஸ் ஐ சரியான லெவலுக்கு வைக்க, இன்னும் பல பல சுரப்பிகள் துணை செய்கின்றன. இவை எல்லாமே, குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருந்தே ஆகவேண்டும்.. இயற்கையில் இருக்கும். அதை கெடுப்பது நம் மனமென்னும் குரங்கு. அதை சமன் செய்வதற்கு நம் பெரியவர்கள் அநேக வழி முறைகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்...
[மனம் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்; கோபமோ, வெறுப்போ, சலிப்போ, பொறாமையோ.... இந்த சமன் பாட்டை கெடுக்கும்.. அதுதான் எல்லா வியாதிகளுக்கும் (உடல், மனம் சார்ந்த ) மூல காரணம்... இது எப்படி சாத்தியம்... வழி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் ஞானிகள், மூத்தவர்கள்... நம்மால் அதை கடை பிடிக்க முடிவதில்லை...
இந்த பாலன்ஸ் ஐ சரியான லெவலுக்கு வைக்க, இன்னும் பல பல சுரப்பிகள் துணை செய்கின்றன. இவை எல்லாமே, குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருந்தே ஆகவேண்டும்.. இயற்கையில் இருக்கும். அதை கெடுப்பது நம் 
மனமென்னும் குரங்கு. அதை சமன் செய்வதற்கு நம் பெரியவர்கள் அநேக வழி முறைகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்...
நம் மூளையில் உள்ள நரம்புகள், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு ஆர்கனுக்கு கனெக்ட் செய்யப்பட்டு, டெடிகேட் பண்ணப் பட்டுள்ளது. அவைகள் தான், அந்த உடல் பாகத்திலிருந்து செய்திகளை அனுப்பி, பதில் பெற்று, வேலை செய்கிறது. அதனால் நம் மூளை தான் மாஸ்டர்.
உதாரணமாக, அட்ரீனலின் என்ற ஒரு சுரப்பி. நாம் கோபப் படும்போதோ, கோபப் பட்டு கத்தும் போதோ, இது அதிகமாக சுரக்கிறது. இதயத்தின் பாலன்ஸ் ஐ சரியாக வைத்திருக்கும் இது, அதிக மாகும்போது, ஹைபர் டென்ஷன், மார் வலி, தலை வலி உண்டாகிறது. இதயத்தை பாதிக்கும்போது, மூச்சு விடுவதும் சிரமமாக, மூச்சு வாங்குகிறது. இது ரொம்ப கெடுதல்.
இதே போல், ஜீரண உறுப்புகள் மற்றும் லிவர், spleen என்று, ஒவ்வொன்றும் மூளையுடன் கோர்க்கப் பட்டு, இந்த நெட் வொர்க் சரியாக வேலை செய்ய வேண்டும். அப்படி செய்யாத போது, இயற்கையிலேயே, நம் உடலில் சில வீக் பாகங்கள் இருக்கலாம் . அவை பாதிக்கப் படுகின்றன.. அதனால் தான், துக்கம், வெறுப்பு, கோபம் ஏன் பொறாமை , பேராசை உணர்வுகள் கூட, இவ்வுருப்புகளை பாதிக்க, சிலருக்கு வாயிற்று ப்ராப்ளம், தலை வலி, கால், கை வலி, ஜுரம் என்று வருகிறது... சிலருக்கு அதீதமாக பயந்தால் கூட ஜுரம் வரும். இந்த பாதிப்புகள் அதோடு போகாது... நாம் எடுக்கும் மருந்துகள், ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் உட் பகுதிகள் பாதிக்கப் படும்.
சரி... மனதை எப்படி அமைதியாக வைத்துக் கொள்வது... பலர் தியானம் என்று சொல்வார்கள் (இதை பற்றி ஒரு psychiatrist இடம் டிஸ்கஸ் செய்து வைத்திருக்கிறேன்... அது பிறகு...)
மனம் கடவுளிடம் ஒருமை பட்டு நிற்கும்போது, கேட்ட எண்ணங்கள் வருவது குறையும்; நிற்கும். அதாவது, சாமியிடம் (சாமி நமக்கெல்லாம் சுமை தாங்கி !!) உட்கார்ந்து பிரார்த்திக்கும் போது, மனம் வேறு எதையும் சிந்திக்காது; சிந்திக்கக் கூடாது. சாமியிடம் டீல் போடக் கூடாது; நமக்கு என்ன தேவை என்பது கடவுளுக்குத் தெரியும். அப்படியே மன நிம்மதிக்காக வேண்டினாலும், "லஞ்சம் தருவதாக (சம்திங்) " வேண்ட வேண்டாம். அந்த சில நாழிகையாவது மனம் கெடுதலை நினைக்காது (வேண்டுதலே, பிறர் கஷ்டப்பட வேண்டும், தண்டிக்கப் பட வேண்டும் என்று இருந்தால் கடவுளே ஒன்று செய்ய முடியாது). யாரையும் தண்டிக்கும் உரிமை நமக்கு கிடையாது... மனதளவில் கூட. அம்மாக்கள் மட்டும் தான், கோபம் வந்தால் "நாசம் அற்றுப் போக" என்பாள் !!!
இப்படி கொஞ்ச நேரமாவது மனம் நல்ல சிந்தனை அல்லது blank ஆக இருந்தால் , மூளையின் நரம்புகளும், கெமிகல்சும் பாலன்ஸ் உடன் இருக்கும். அல்லது சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கலாம். நிறைய பெண்கள் சமைக்கும் போது சுலோகம் சொல்லுவார்கள். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். மன அமைதி; சமையலில் ருசி.. பாசிடிவ் வைப்ரஷன் - இவைகள், அந்த சாப்பாட்டை சாப்பிடுவர்களுக்கும் போய் சேரும். அதனால் தான் வீட்டு சாப்பாடு நல்லது. ஹோட்டலில் சமயத்தவரின் மன என்ன ஓட்டங்கள் நன்றாக இல்லாமல் போகலாம்.
இதே காரணத்துக்காக கோவில்....
கோவிலுக்குள் நிறைய பாசிடிவ் எனெர்ஜி இருக்கு... லைட் எனேஜி, சவுண்ட் எனெர்ஜி என்று. இவைகளைத் தவிர உச்சரிக் கப்பட்ட மந்திரங்கள் அலைகளாக காற்றில் இருக்கும்.
நம் சம்ஸ்க்ருதத்தில், உச்சரிப்பு, ஒலி வடிவமைப்பு ரொம்ப முக்கியம். அவைகள் நம் உடலில் ஒரு வைப்ரேஷனை ஏற்படுத்தும். அந்த வைப்ரஷன் சரியாக இருக்க வேண்டும். அது ரொம்ப பவர்புல் வைப்ரஷன். நமக்கு சொல்ல தெரிய வில்லை என்றால், தெரிந்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்... அதனால் தான் காலையில் நாம் நல்ல சுலோகங்கள், சஹஸ்ரநாமம் இவைகளை பாட்டாக ஓட விட்டு கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
கோவிலுக்குள் போகும் போது, மனம் முழுதும் கடவுளிடம் ஈடு பட்டிருக்க வேண்டும். இறைவன் நாமத்தை தவிர, பிற வார்த்தைகள் பேசக்கூடாது... சில கோவில்களில் இந்த வாசகத்தை எழுதி வைத்திருப்பார்கள். வீட்டுக் கதை, கஷ்டங்கள் இவைகளை தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள கோவிலை ஒரு இடமாக எடுக்கக் கூடாது.
கோவிலின் காற்றில் இருக்கும் வைப்ரஷனை உட்கொள்ள வேண்டும். நம் உடல் good conductor of electricity... so also earth... all signals are converted as electrical pulses & sent to brain. When we absorb the positive vibration, the negative gets drained through feet to the earth & the body, retains the positive.

No comments:

Post a Comment