Sunday, October 22, 2017

நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட படலம் ...

நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட படலம் ... (என் வசந்தாயனத்தின் - "வசந்தஸ்ய + அயனம் = வசந்தாயனம் - பால காண்டம்)
எங்காத்தில ஒரு பொண்ண்ணுக்கும் சைக்கிள் ஓட்ட சொல்லித் தரல்ல... தெரு பசங்க கிட்ட கத்துக்கவும் தடை..
ஸ்கூல் ல நான் ஒம்பதாவது படிக்கும்போது, சைக்கிள் சொல்லித்தர ஆரம்பிச்சா... ஆனா எங்கம்மா தடை.. கீழே விழுந்துடுவேணாம். !!
எங்கம்மா இப்படித்தான் எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லுவா...அப்பாக்கு எல்லாம் இஷ்டம்.. ஆனா.. எங்கயாவது சில இடத்தில அம்மாக்கு பயப்பட வேண்டி இருக்கே !!
இப்படித்தான்...
"அப்பா, நான் N.C.C. ல சேர்றேன்.."
அப்பா "சேந்துக்கோயேன்"
அம்மா உள்ளேர்ந்து... "அங்கல்லாம் ஹா ஃ ப் trouser ! அதெல்லாம் போடக்கூடாது... அதனாலே சேரக்கூடாது" உல் குரல் ஜெயித்தது...
(இப்படி அசரீரி அடிக்கடி கேக்கும்... முகம் தெரியாமலே அதட்டு போட்டு, அடக்க அம்மாக்குத் தான் தெரியும் !!)
மெட்ராசில, போராடி, புல் pants ஐ காண்பித்து, ஜெயித்து, N.C.C. ல சேந்துட்டேன்... !!
சாயந்திரம் கிளாஸ் முடிந்து லேட் ஆகும்போதெல்லாம்.. ஆத்துல முணு முணுப்பு ஆரம்பிச்சிடும் !!
ஒரு வருஷம், என்.சி.சி. cadets க்கு, ப்ரீ யா ஸ்விம்மிங் கிளாஸ் S.I.E.T. pool ல ஆரம்பிச்சா... ஒரே ஒரு நாள் போனேன்.. அங்கே புடவையில நீச்சல் கத்துக்க வந்த ஒரே பெண் நான்தான்... !! அதனாலே வேடிக்கை பாத்துட்டு வந்துட்டேன்.
வீட்டில சொன்னேன்... மறு நாள்... அம்மா...
"நீச்சல் ட்ரெஸ் எல்லாம் போடக்கூடாது ; [என்ன டூ பீஸ், பிகினி யா போடப்போறோம் (ரெண்டும் ஒண்ணு தானோ ?)]
"மார்கழி மாசம்.. தண்ணி ஜில்லுன்னு இருக்கும்.. உடம்புக்கு வந்துடும்.."
"அங்கேயே ஈர ட்ரெஸ் மாத்தனும்னா- அது கூடாது.. "
இப்படி காரணங்கள் சொல்லப்பட்டு... அதுவும் நின்றது...
கேம்ப் போகணும்னாலே, வீட்டிலே ரகளை... ஆனா அப்பா அம்மாவை சரி கட்டி எல்லா காம்புக்கும் அனுப்பிச்சா..
ஒரு தடவை என்.சி.சி. ("லஸ்கர்" ன்னு ஒரு ஆள் இருப்பான்.. என்.சி.சி. ஆபீஸ் ல. அது பேர் இல்ல. அது ஒரு போஸ்ட். ) லஸ்கர், சூப்பர் ஆ கஞ்சி போட்டு, டிரஸ் அயர்ன் பண்ணி, வீட்டுக்கு வந்து Dehradun camp .. நாளன்னிக்கு கெளம்பி ஸ்டேஷனுக்கு வந்துடுங்கோ ன்னு சொல்லிட்டு போனான்..
எங்கம்மா என்ன சொல்லி இருப்பா ? "அந்த இடம் எங்கே இருக்குன்னே எனக்கு தெரியாது... ரொம்ப குளிருமாம். இமய மலையில இருக்காம்...அங்கெல்லாம் போகக் கூடாது.."
அம்மாக்கு எது ஒலகத்தில பாக்கி இடம் எல்லாம் எங்கே இருக்குன்னு தெரிஞ்ச மாதிரியும், இது ஒண்ணு தான் தெரியாத மாறியும் !
ஆச்சு... போகல்லே... (பிடிவாதம் பிடிக்கத் தெரியாது !! அப்பாவும் கை விட்டுட்டா... !!)
அய்யய்யோ ... சைக்கில் கதைக்கு வருவோம்...
சைக்கில் கத்துக்காததிலே எனக்கு வருத்தம்...
அண்ணா நகர்ல இருந்தேன்... 42 வயசு... 55 கிலோ வெய்ட்டு !!
என் நாத்தனார் பிள்ளை வந்தான்... (சுமார் 16 வயசு) .. அவன்கிட்ட கெஞ்சினேன்...
அவனும் மாமி ஆசப்படராளேன்னு ஆழம் தெரியாம கால விட்டான்...
காலம்பர அஞ்சு மணிக்கு வந்துடுவான்.. சைக்கிள எடுத்துண்டு ஆவடி ரோட் ல என்ன வெச்சு தள்ளி, எனக்கு balance பண்ண வராம.. நொந்து போயிட்டான்..
ஆத்துக்கு வந்து ஹார்லிக்ஸ் எல்லாம் போட்டுக்குடுத்தேன்..
"நாளைக்கும் வந்துடுவியோன்னோ " ன்னு சந்தேகமா கேட்டேன்.. அவனும் ஒரு தாக்ஷன்யத்துக்கு கட்டுப் பட்டு, சரின்னுட்டான்..
மறு நாளும்.. இதே இதே... ரொம்ப களச்சு போயிட்டான்..
மூணாம் நாள் லேர்ந்து .. நான் சந்தேஹப்பட்டது சரியா போயிடுத்து...
அதுக்கப்புறம், ஒரு வருஷம், (இத்தனைக்கும் அவா வீடு ரொம்ப கிட்ட) என் கண்ணிலேயே பாடல்ல...
நான் அந்த ஆசைய மொத்தமா விட்டுட்டேன்னு தெரிஞ்சிண்டுதான் வந்தான்..
(யாராவது எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுங்களேன்.. 65 கிலோ தான் இருக்கேன்... ஹார்லிக்ஸ் போட்டு தரேன் !!)

No comments:

Post a Comment