வெற்றிலையை அனுபவித்து போடுவது எப்படி?
வீட்டில் ஊஞ்சல் இருந்தால் ரொம்ப அழகு. அதில் கணவனும், மனைவியும் சேர்ந்து உட்கார்ந்து வெற்றிலை பாக்கு போடலாம்; இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சோபா செட். அதில் உட்கார்ந்து போடலாம்
மனைவி செய்ய வேண்டியது...
1. வெற்றிலையை அலம்பி எடுத்து, பாக்கு, சுண்ணாம்புடன் உட்கார்ந்து கொள்ளவும்.
2.முதலில் கணவருக்கு கொஞ்சம் பாக்கு குடுத்து, நீங்களும் எடுத்துக் கொண்டு வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.
3. இரண்டு வெற்றிலைகளை எடுத்து, ஈரம் போக துடைக்கவும்.
4. இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும்
5. நுனியை கிள்ளி விடுங்கள்.
6. வெற்றிலை காம்பிற்கு இரு புறமும் திட்டமாக வாசனை சுண்ணாம்பு தடவுங்கள்.
7. நீள வாட்டில் மடிக்க வேண்டும்.
8. வெற்றிலைகளின் மேல் காம்பை பிடித்து, மெள்ள இழுத்தால் நரம்பு வந்து விடும் .
9. இப்போது வெற்றிலையை நான்காக மடித்து கணவர் கையில் கொடுத்து விடுங்கள்.
10. இதே போல் இரண்டு வெற்றிலைகளை, சுண்ணாம்பு தடவி, நுனி, நரம்பு எடுத்து, நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள் .
11. மற்றொரு செட் வெற்றிலை இரண்டு பேருக்கும்.

கொஞ்சம் மென்று விட்டு, வாய் எவ்வளவு சிவந்திருக்கு என்று பார்த்து சந்தோஷப்படலாம்.
இப்படி தினமும் ஒரு வேளையாவது ஒன்றாக உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொள்ளும் நேரம் மகிழ்ச்சியானது. அன்னியோன்னியமானது.
போட்டுத்தான் பாருங்களேன்.