என் சுய அனுபவத்திலும், நான் கடைப் பிடிப்பதையும் வைத்து எழுதுவது. இதுதான் முறை என்று generalise பண்ண முடியாது.
ஒரு பெண் பிறக்கும்போதே, "இவள் வளர்ந்து வேறு வீட்டுக்கு போகப் போகிறவள்" என்ற எண்ணம் எல்லார் மனதிலும் தோன்றி, பதிந்து விடுகிறது.
-> அதனாலேயே... அவள் மீது கொஞ்சம் பாசமும் அதிகமாக; சில சமயம் கண்டிப்பும் அதிகமாக... "உன் மாமியார் வீட்டில் என்னைத்தான் குத்தம் சொல்வார்கள், வளர்த்த முறை சரி இல்லை என்று" என்ற கமென்டோடு
-> படிப்பிலும் இந்த வித்தியாசம் - பையனுக்கும், பெண்ணுக்கும் - இப்போது கொஞ்சம் மாறி இருந்தாலும், முழுவதும் மறையவில்லை.
-> எப்போதும், "நான் அந்த நாளில் கஷ்டப்பட்டேன்; அதனால், குழந்தைகளுக்கு வேண்டியதெல்லாம் கொடுக்க வேண்டும்" என்று நினைக்க வில்லை - சொன்னதும் இல்லை.
-> கண்டிப்பாக, படிப்பதற்கு குறைந்த பட்ச வசதிகள் உண்டு.
-> நிறைய புக்ஸ் வாங்கிக் கொடுப்பேன்.
-> எங்கள் சௌகரியத்தை தள்ளி வைத்து, குழந்தைகளுக்கு செய்தது உண்மை.
-> என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்தவர்கள் அவர்கள்; கடவுள் நல்ல குழந்தைகளைத்தான் எனக்காக அனுப்பினார்.
-> குழந்தைகள் வளர வளர - "இவர்கள் பதினெட்டு வயது வரை தான் எனக்கே எனக்கு உரியவர்கள் - பிறகு, அவர்கள் society இன் குழந்தைகள்" என்ற எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டேன்.
-> பையன்கள் படிப்பிற்காக ஹாஸ்டல் போன போது, கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நான் அதைத்தான் விரும்பினேன். - அவர்கள், அம்மாவின் செக்யூரிட்டி இல்லாமல் பழக வேண்டும். ஆனால், நானாக ஹாஸ்டலுக்கு போகச் சொல்ல வில்லை. அதுவாகவே அமைந்தது. ஒன்று மட்டும் புரிந்தது - அவர்கள் எங்கள் கட்டுப் பாட்டிலிருந்து விலக ஆசைப்படுகிறார்கள். இது இயற்கை.---- புரிந்து கொண்டேன்.
-> பெண்தான் சிக்கிக் கொண்டாள் !! அது அவளுக்கு அமைந்தது.
-> ஒரு தாய் தன் பையனுக்கு திருமணம் செய்ய பாடாய் படுவாள் - ஆனால் பையனின் கவனம் திரும்புவதை அவளால் தாங்க முடிவதில்லை. அதனால் தான் மருமகள் மீது ஒரு 'கடுப்பு' வருகிறது. இது நான் அனுபவித்தது.
இதை புரிந்து கொண்டேன்; பதில் பேசாமல் இருந்தேன்; கஷ்டப்பட்டேன்; (மனதாலும், உடலாலும்).
இந்த அனுபவங்கள் தான் என்னை நிச்சயம் பக்குவப் படுத்தியது; ஒரு maturity ஐ கொடுத்தது. இது positive side of my experience.
நான் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று நிதர்சனமான உண்மைகளை எனக்கு காட்டிக் கொடுத்த அனுபவங்கள்; என் பொறுமையை வளர்த்த அனுபவங்கள். வயதான பிறகு கிடைத்திருக்கும் நிம்மதிக்கு அஸ்திவாரங்கள்.
-> ஆணோ, பெண்ணோ, கல்யாணத்திற்குப் பிறகு வாழ வேண்டிய வாழ்க் கையை பற்றி ஒரு கனவு வைத்திருப்பார்கள்; அதை கலைக்க நான் விரும்ப வில்லை.
-> பெரிய பையனுக்கு கல்யாணம் ஆனதும், "குடித்தனம் வைக்க" என்று நான் போகவில்லை. (அப்படியே அவன் என்னை கேட்டிருந்தாலும், அது என்னை திருப்தி படுத்தத்தான் இருக்கும்). புதிய ஆரம்பம் அவர்களுக்கு; தேவையானவற்றை சேர்ந்து வாங்கி, வீட்டை அமைத்து... கண்டிப்பாக சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.
-> பெண்ணுக்கு கல்யாணம் ஆனதும், கடைசி பையன் அமெரிக்காவில் இருக்க, என் மாமனார் காலமும் முடிந்திருக்க, மாமியார் இருந்தாலும், அவருக்கான தேவைகளை கவனித்து விட்டு, என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ ஆரம்பித்தேன்.
-> பெண்ணுக்கும் தனிக் குடித்தனம் அமைந்தது. இல்லை என்றாலும் அவள் சமாளித்திருப்பாள்; நான் தலையிட்டிருக்க மாட்டேன்.
-> நிறைய படித்து, பரீட்சைகள் எழுதினேன்; வேலை பார்த்தேன்; கடமைகள் முடிந்தது என்று... பத்ரி, கேதார் என்று ஹிமாலயன் ட்ரிப்ஸ் போனோம். (கொஞ்சம் ரிஸ்க் என்பதால் வெயிட் பண்ணினோம்)
-> அன்றும், இன்றும் குழந்தைகளுக்காக சொத்து சேர்த்து வைக்க விரும்ப வில்லை. படிப்பு கொடுத்து விட்டோம்; இனி அவர்கள் சாமர்த்தியம்.
-> எங்கள் வாழ்க்கையை எங்கள் இஷடப்படி வாழ ஆரம்பித்தோம்.
-> பேரக்குழந்தைகள் பிறந்ததும், அவர்கள் பொறுப்பை ஏற்க வில்லை. - அவர்களும் எதிர் பார்க்க வில்லை - இதை சொல்லித்தான் அவர்களை வளர்த்தேன். எனக்கு தோணும்போது, போய் பார்ப்பேன்; ஆனால் அதீத பாசத்தை வைக்கவில்லை.
-> அட்வைஸ் செய்தால் அவர்களுக்குப் பிடிக்காது; குறைத்தேன்... நிறுத்தினேன்.
-> யோசனைகள் சொல்வதை குறைத்தேன் .... நிறுத்தினேன்.
-> பேசுவதை குறைத்தேன்.... போன் செய்வதை நிறுத்தினேன்.
-> அவர்களும் அனுபவத்தினால் புரிந்து கொள்வார்கள்; என் அனுபவத்தை அவர்கள் மீது திணிக்க எனக்கு இஷ்டமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை, கொள்கை, இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற முடிவு எல்லாம் இருக்கும். நான் யார் அவர்களை என் வழியில் நடக்கச் சொல்ல ?
-> நானும், என் அம்மாவைப் போல் இல்லையே. காலத்திற்குத் தகுந்தாற்போல் மாரினேனே.
-> பெண் கல்யாணத்திற்கு அப்புறம், என் கவனம் கொஞ்சம் spiritual சைட் திரும்பியது. பாகவதத்தில் ஆரம்பித்து, நிறைய, நிறைய படித்தேன்; மறுபடி மறுபடி படித்தேன்; lectures க்கு போனேன். மனம் அமைதி ஆனது.
-> பிறரை பற்றி வம்பு பேசுவது, குற்றம் சொல்வது, இவரோடு அடுத்தவரைப் பற்றி டிஸ்கஸ் செய்வது, கோபப் படுவது என்று எல்லாவற்றையும் நிறுத்தினேன். முடிந்தவரை எல்லாரையும் நேசிப்பேன்; சரியாக வரவில்லை என்றால் ஒதுங்கி விடுவேன்.
-> அதற்குப் பிறகும் நான் சமாளிக்க வேண்டி இருந்தது S.K. ... "தனக்குத்தான் எல்லாம் தெரியும் " என்ற EGO . எடுத்துச் சொன்னால் புரியவில்லை. நான் புரிந்து கொண்டேன்; அவரை மாற்ற முடியாது; அது என் வேலையும் இல்லை. அதனால், argument வரும் போல் தோன்றினால், ஒதுங்கினேன்; பேசுவதை லிமிட் ஆக்கினேன்; எல்லாவற்றையும் சொல்லும் என் பழக்கத்தை மாற்றினேன்.
-> இப்போது..... இருவரும்... நிறைய படிக்கிறோம்; பிடித்ததை செய்கிறோம்; தேவைகள் குறைந்து விட்டன. நிம்மதியாக இருக்கிறோம்.
-> குழந்தைகளுக்கு மெயில் அனுப்பினேன்... "உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்; என்னை என் இஷ்டப்படி வாழ விடுங்கள்; எதையும் கட்டாயப் படுத்தாதீர்கள்; இது கோபம் அல்ல; எனக்கு சுதந்திரம் வேண்டும்; நீங்கள் என் மீது கொண்டிருக்கும் பாசத்தை வெளிப்படுத்த நான் கட்டாயப் படுத்த மாட்டேன்"
-> எப்போது பத்ரி, கேதார் போனோமோ, அப்போதே, இருக்கும் பணம், நகை, சாமான் எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று எழுதி, சீல் வைத்து, பெரிய பையனை authorise பண்ணி எழுதி வைத்தோம்.
-> இன்று வரை, அப்பப்போ, அதை modify பண்ணி எழுதி வைக்கிறோம்.
-> "எங்கள் முடிவுக்குப் பிறகு, ஒரு காரியமும் செய்ய வேண்டாம்; அதை பற்றி guilty ஆக feel பண்ண வேண்டாம். ஒரு ஸ்நானத்தோடு, முடிந்தால் ஒவ்வொரு வருடமும், அந்த நாளில், ஏழைகளுக்கு சாப்பாடு போடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று எழுதி, சொல்லி, பையனுக்கு கம்ப்யூட்டர் இல் காண்பித்து வைத்திருக்கோம்.
-> இதில் ஒரு பெரிய லாபம் !!! .... மூன்று பேரும் இன்றைய வரைக்கும் ஒற்றுமையாக, தங்களுக்குள், எதிர்பார்ப்பும், மனக்கசப்பும், பொறாமையும், கொடுக்கல் வாங்கலில் கணக்கு இல்லாமல் casual ஆகவும், இருக்கிறார்கள் ... ஏன்னா சொத்து சண்டை இல்லை !!!
இப்போது senior citizen home ல் , நிம்மதியாக இருக்கிறோம்.

No comments:
Post a Comment