Wednesday, October 18, 2017

ராமாயணம் ......சகோதர பாசம்

ராமாயணம் கதையை தற்கால குழந்தைகளுக்கு சொன்னால் அத உணர்வுகள் அவர்களுக்கு புரியுமா ?
ஒரே குழந்தை என்று போகும் எதிர் காலத்தில் சகோதர பாசம் என்னவென்று உணர்வார்களா?
ராமாயணத்தில்... நான்கு பேரும் ஒரே தாய் மக்கள் இல்லை...ஒரே சொத்துக்கு பகைமை பாராட்ட கூடிய உறவுதான்..
அப்படியும் அவர்களுக்குள் எத்தனை சகோதர பாசம் !!
ராமன் அரசை பரதனிடம் ஒப்படைக்கையில்
"வானில் உந்தை சொல் மரபினால் உடைத்
தாரணி நின்னது என்று இயைந்த தன்மையால்
உறநின் நீ பிறந்து உரிமை ஆதலால்
அரசு நின்னதே ஆள்க - எனவே
என்று சொல்கிறான்.
பரதனோ, பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் ராமன் வரவை காணாததால் சத்ருக்னனை அழைத்து
"சொன்ன நாளில் இராகவன் தொன்றிலன்
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது என்றான்"
சத்ருகனோ...
"
யானோ இவ்வரசாள்வேன்" என்று கூறிவிட்டு போகிறான்.
ஒரு ஆறுதல்...
சகோதர பாசத்தை ஈடு காட்டுகின்றது நட்பு... இந்நாளில்
நிறைய பேர் நட்பை உறவு சொல்லி அழைக்கிறார்கள் !!
இதையும் கம்பன் அன்றே சொல்லி சென்றிருக்கிறான்...
குஹன் நண்பன்தான் .. அந்த குஹனுக்கு "கொழுந்தி" என்று சீதையை உறவு வைத்து சொல்கிறான்.

"ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி என் தம்பி நீ
தோழன் மங்கை கொழுந்தி எனச்சொன்ன
வாழி நண்பு"

No comments:

Post a Comment