Monday, October 30, 2017

அப்பாவோட மாமா ..

மாயவரத்தில் அப்பாவோட மாமா .. காவிரி கரையில ஆக்ராஹாரத்தில பெரிய வீடு... என்ன அப்பா ஒரு தரம் அழைச்சிண்டு போயிருக்கா..
அப்பா, ஹை ஸ்கூல் படிச்சது மாமாவாத்துல தங்கி...
அப்போல்லாம் இது ரொம்ப சகஜம்... உறவுக்காராத்துல தங்கி படிக்கிறது...
சாப்பாட்டுக்கு காசு குடுக்கறது, அவா திட்டராளா, அடிக்கராளான்னு பாக்கறது, சாப்பாடு சரியா போடராளா ன்னு கவலைப் படறது... ஒண்ணும் கிடையாது...
அவாத்து வழக்கம் என்னவோ அதத்தான் தங்கி படிக்கிற குழந்தையும் follow பண்ணும்... எதிலும் வித்தியாசம் பாராட்ட மாட்டா..
அம்மா அப்பாவ விட்டு இருக்கானே ன்னு கொஞ்சறதும் இல்ல... நமக்கு பாரமா இருக்கானே ன்னு மனசால கூட நேனைக்கறதும் இல்ல.
அப்பா, குத்தமாகவோ, சோகமாகவோ அல்லது ஸ்பெஷல் ஆகவோ தன் மாயவரம் life பத்தி சொன்னது இல்ல. ஏன்னா.. எல்லாமே நார்மலா தான் உணர்ந்திருக்கா !!
காவிரியில் தினமும் மணிக்கணக்கில் நீச்ச்சலடித்தது பத்தி நெறைய சொல்லி இருக்கா.

No comments:

Post a Comment