ஆர்ய சமாஜ் சொற் பொழிவில் சொல்லப்பட்டது. : (D.A.V. is run by Arya Samaj Foundation - where we perform Homam called Haven every Saturday- (scripture taken from Yajur Vedham)
"நம் உடலுக்குள் ஆத்மா... இரண்டும் தனித் தனி.
இறக்கும்போது ஆத்மாவுக்கு இறப்பு இல்லை. உடல் தான் அழிக்கப் படுகிறது - ஆத்மா இல்லாத உடல் தேவையில்லாத ஒன்று
இறக்கும்போது ஆத்மாவுக்கு இறப்பு இல்லை. உடல் தான் அழிக்கப் படுகிறது - ஆத்மா இல்லாத உடல் தேவையில்லாத ஒன்று
அந்த ஆத்மா கண்டிப்பாக, நாம் இந்த பிறவியில் செய்த கர்மங்களுக்கேற்ப, மற்றொரு பெற்றோர் வீட்டில் பிறக்க வைக்கப் படுகிறது.
ரிஷிகள், ஞானிகள் என்று கடவுளுக்கு மட்டுமே மனதாலும் உடலாலும் சேவை செய்யும் ஒரு சிலருக்கு மட்டுமே, ஆத்மா மேல் நிலையை அடைந்து, பிறப்பில்லாமல் போகிறது.
ரிஷிகள், ஞானிகள் என்று கடவுளுக்கு மட்டுமே மனதாலும் உடலாலும் சேவை செய்யும் ஒரு சிலருக்கு மட்டுமே, ஆத்மா மேல் நிலையை அடைந்து, பிறப்பில்லாமல் போகிறது.
ஸ்ரார்தம் என்பது ஷ்ரத்யை - நாம் ஸ்ரார்தம் என்று ஒரு ritual ஆக செய்யும்போது, கண்டிப்பாக, அந்த பிண்டமோ, நீரோ இறந்த வரை போய் சேராது.
பெற்றோர், உற்றார், உறவினர் எல்லாரையும் நாம் அவர்கள் உயிரோடு இருக்கும்போது சிரத்தையாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். அதற்குப் பெயர் தான் சிரார்த்தம்.
பெற்றோர், உற்றார், உறவினர் எல்லாரையும் நாம் அவர்கள் உயிரோடு இருக்கும்போது சிரத்தையாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். அதற்குப் பெயர் தான் சிரார்த்தம்.
இறந்து போன பெற்றோரை, பெரியவர்களை, அவர்கள் நமக்கு செய்த நன்மைகளை நினைத்துப்பார்க்கலாம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள், நல்ல நடத்தைகளை கடை பிடிக்கலாம்.
வேதத்தில் பித்ரு (பெற்றவர், கூடப்பிறந்தவர்கள், உற்றார்) க்களுக்கு இப்படி சிரார்த்தம் செய்ய சொல்லவில்லை.
இதெல்லாம் நாமாக காலப்போக்கில் சேர்த்துக்கொண்டது.
இதெல்லாம் நாமாக காலப்போக்கில் சேர்த்துக்கொண்டது.
நாம் அடுத்தப்பிறவியில் நல்ல அம்மா, அப்பா வுக்குப் பிறக்க, இந்த பிறவியில் மனதாலும், உடலாலும் யாருக்கும் தீமை செய்யாமல், உண்மையாக வாழ வேண்டும்.
இந்த பாவ புண்யங்கள் கணக்கு நம் யாருக்கும் தெரியாது. இந்த ஜென்மாவில் லாபமும் இருக்கலாம்; நஷ்டமும் இருக்கலாம். இது "குப்த்"... அதாவது மறைக்கப்பட்டது. (குப்த் ஞான்) - கேள்விப்பட்டிருப்பீர்கள் (அப்படி ஒரு சினிமா வேற வந்தது !!!!).
இந்த கணக்கை வைத்திருப்பவன் என்று, ஒரு சித்திர குப்தன் என்று சொல்கிறோம். அவனிடம் நம் வாழ்க்கையின் Balance sheet இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல், கடவுள் நம்மை மற்றொரு பெற்றோரிடம் அனுப்புகிறான்.
இந்த கணக்கை வைத்திருப்பவன் என்று, ஒரு சித்திர குப்தன் என்று சொல்கிறோம். அவனிடம் நம் வாழ்க்கையின் Balance sheet இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல், கடவுள் நம்மை மற்றொரு பெற்றோரிடம் அனுப்புகிறான்.
ஆகஸ்ட் 15 - இவருடைய பெரியப்பா மகன் (ஆர்மியில் கர்னலாக இருந்தவர்) இறக்க, அவர்களுக்கு வாரிசு இல்லாததால், SK கடைசி காரியங்கள் பண்ணி, cremate பண்ணினார். அவர் சொல்லிச் சென்றபடி 12 நாளும் காரியம் பண்ணவில்லை. 10 ம் நாள், poor feeding . 13 ம் நாள் ஆர்யசமாஜ் முறைப்படி ஹோமம்.
30 நிமிடங்களில் முடிந்தது. நாங்கள் இருவரும் செய்தோம். அது முடிந்ததும், அதை செய்து வைத்தவர் சொன்னதிலிருந்து.
30 நிமிடங்களில் முடிந்தது. நாங்கள் இருவரும் செய்தோம். அது முடிந்ததும், அதை செய்து வைத்தவர் சொன்னதிலிருந்து.
நான் "ஹிந்து மதம் - 10000 வருஷம் " என்ற ஒரு புத்தகத்தை படிக்கிறேன். அதிலும், "கடந்த 3500 வருடங்களில் நிறைய சடங்குகளும், நம்பிக்கைகளும், rituals ம் எப்படி சேர்க்கப் பட்டிருக்கிறது" என்று விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
ரொம்ப வருஷமாக, என் நான் இதை சொன்னால், என்னை பெரியாரின் சிஷ்யை என்று இவர் கலாட்டா பண்ணுவார். எனக்கு நிறைய rituals இல் நம்பிக்கை கிடையாது. (அப்பாவிடமிருந்து வந்த குணம்) ஆனால் அம்மா செய்வாள், மாமியார் செய்வார்; இவருக்கு நம்பிக்கை; அதனால் கூட நிற்பேன் !!!!
இதையே அமெரிக்காக் காரன் research பண்ணி சொல்லி இருக்கிறான். அதாவது, நாம் உடலை எரிக்கும்போது, ஆன்மா வெளியேறி காற்றோடு காற்றாக கலக்கிறது (அணுக்களாக) இந்த அணுக்களில் சில ஒரு தாயின் கர்பத்தை சேரும்போது, இறந்தவரின் குணாதிசயங்கள், அறிவு, (நல்லதோ, கெட்டதோ ) அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் இருக்கும்.
யார் கண்டது... RAAMAANUJAM, BHAARATHIYAAR, NEWTON, EDISON, EINSTEIN ..... இவர்கள் அணுக்கள் சேர்ந்து, விஞ்ஞானிகள் பிறந்திருப்பார்கள் !!!
No comments:
Post a Comment