இந்த பழைய நாவல்கள் படிக்கறதே ஒரு சுகம்...
அக்ரஹாரம்; 10/12 வயசுல 4 நாள் கல்யாணம்; அதோட விதரணை....
4000 ரூ. எதிர் ஜாமீன் குடுத்து, அக்ரஹாரட்தை அடைத்து பந்தல் போட்டு, 6 நாள் அங்கே ஒரு வீட்டிலேயும் அடுப்பு மூட்ட மாட்டா... ஒரு வேளைக்கு 500 பேர் போல் சாப்பாடு .... பண்ணை ஆட்களை சேர்த்து... துணி மணி , பட்சணம் பாடி... வெத்திலை சீவல் எல்லாம் சேர்த்து, 6000 ரூ. ல அமர்க்களமான கல்யாணம். மொத்தம் 10000 ரூ. எல்லாம் அப்பா, நிலத்தை வித்து, செய்வார். அதுவும் எப்படி- பத்துக்கு அஞ்சு பழுதில்லாம...
4000 ரூ. எதிர் ஜாமீன் குடுத்து, அக்ரஹாரட்தை அடைத்து பந்தல் போட்டு, 6 நாள் அங்கே ஒரு வீட்டிலேயும் அடுப்பு மூட்ட மாட்டா... ஒரு வேளைக்கு 500 பேர் போல் சாப்பாடு .... பண்ணை ஆட்களை சேர்த்து... துணி மணி , பட்சணம் பாடி... வெத்திலை சீவல் எல்லாம் சேர்த்து, 6000 ரூ. ல அமர்க்களமான கல்யாணம். மொத்தம் 10000 ரூ. எல்லாம் அப்பா, நிலத்தை வித்து, செய்வார். அதுவும் எப்படி- பத்துக்கு அஞ்சு பழுதில்லாம...
சினிமாவா.. 2 அணா குடுத்து பாத்துட்டு வருவா.. இது நானே பண்ணி இருக்கேன். 2 அணா டிக்கட், 1 அணா பாட்டு புஸ்தகம், காலணா கடலை, காலணா கமர்கட்டு... அம்மா குடுத்த 4 அணாவில பாக்கி அரை அணா திருப்பிக் குடுத்திருக்கேன் !!
கல்கி நாவல் ன்னா.. 500 ரூ. க்கு 50 பவுன் நகை; கையில 10/20 ரூ வெச்சுண்டு கல்காத்துக்கு பயணம். அன்னிக்கு தீர்மானிச்சு, அன்னிக்கே ரயில் ஏறுவா... "ஏண்டி அம்மா, இங்கே வறயாடி சித்த..." இது, பெண் அம்மாவை கூப்பிடுவது...
எங்கம்மாவே தன்னோட சித்திய (step mother) வாடி போடின்னு பேசுவா !! வேடிகையா இருக்கும் !!
கல்கிக்கு வருவோம்... தியாக பூமில, ஒண்ணுமே தெரியாத பட்டிக்காட்டுப் பொண்ணு, கல்கத்தாவில போய், மாமியார்ட்ட கஷ்டப்பட்டு, 8 மாசம் pregnant ஆ இருக்கச்சே , தனியா ரயில் ஏறி கிராமத்துக்கு (கும்பகோணம் பக்கம்) வருவா.. கையில் சில்லறை.. அங்கே அப்பாவை காணாம , பட்டணத்துக்கு போவா.. பட்டணத்துல சுத்தி "சம்பு சாஸ்திரி வீடு எதுன்னு தெரியுமா.. " ன்னு கேட்டுண்டே சுத்தி, மயக்கம் போட்டு, பிரசவம் ஆகி (செலவில்லாம ஆஸ்பத்திரில), ஒரு பெஞ்சியில தூங்கிண்டிருக்கற அப்பாவ பாத்து, குழந்தைய அவர் பக்கத்துல விட்டுட்டு, பம்பாய்க்கு ரயில் ஏறி , 6 வருஷம் கழித்து, 5 லக்ஷம் சொத்து இருக்கிற, ரொம்ப பணக்காரியா (!) நாகரீகமா திரும்பி வருவா...
இந்த நாவல் எல்லாம் லேசில் முடியாது... நம்ம மெகா சீரியல் மாதிரி இழுத்திண்டு போகும்.. coincidence ன்னா , அப்படி ஒரு coincidence.. 1000 சம்பவங்கள்...
பேரெல்லாம் இப்படித்தான்... அம்மாளு, அம்புலு, அம்பி, பட்டாம்பி, பாச்சா, சம்புவய்யர், பாப்பா, சீதா... இப்படித்தான் ... நிறைய சொல்லிண்டே போகலாம்.
இதே சிவசங்கரி பழைய வாழ்க்கை பற்றி கதை களம் அமைச்சால், பாண்டி ஆடற 8 வயசு பெண்ணுக்கு, 16 வயசு பையனோட கல்யாணம்.. அந்த கல்யாணத்துக்கு அப்பளம் இடுவதிலிருந்து வர்ணனை... அந்தோ பரிதாபம்... 10 வயசுல அந்த பெண்ணோட ஆம்படையான் செத்துப் போயிடுவான்... 14 வயசுல நார்மடி புடவை கட்டிண்டு... அடுக்களையில் பூந்தா.... ஆயுசு பரியந்தம் சமையல் அறை வேலை தான்... அந்த ஆயுசு ங்கறது 40/45.
தமிழ் ரொம்ப அழகு. எங்கப்பாவே எண்பதுக்கு , எம்ப்ளது ன்னு சொல்லுவா. 980 க்கு தொளாயிரத்து எம்ப்ளது ம்பா ... அது ஒரு வழக்கு தஞ்சாவூர் பக்கம்.
தஞ்சாவூர் அக்ரஹாரம் தமிழ் அப்படி ஒரு அழகு. அதில வளந்த நான்தான், போன "வேலைக்காரி லீவு" கதையில "கலீஜ்" ன்னு எழுதினேன் !!
இன்னும் சொல்லிண்டே போகலாம்... அவ்வளவு எண்ணங்கள்
No comments:
Post a Comment