Friday, April 26, 2019

Blissful Life ......

20 வயசு வரைக்கும் ஒண்ணும் தெரியல்லே !
20 - 40 ....ஒண்ணுமே புரியல்லே !
40 - 60 ....கொஞ்சம் கொஞ்சமா புரிய, கோபம் வந்தது, சண்டைகள் வந்தன !
60 - 70 ....பழசெல்லாம் மறக்க ஆரம்பித்து.. (நடுவில சில பக்கங்களை காணோம்) !
இப்போ 70 களிலே .... முதல்ல, நடுவில, நிறைய பக்கங்களை காணோம் !!
இன்று.... என்பது தான் ஞாபகம் !!
அதிலேயும் ... இப்போது என்பது தான் தெரிகிறது...
Blissful Life !!கடவுள் ரொம்ப think பண்ணித்தான் மறதியை குடுத்திருக்கிறார் !!!
அதனாலே, வாழ்க்கையை அதன் போக்கில விட்டா, அது பாட்டுக்கும் நம்மளை கரை சேர்க்கும்.!!!

Friday, April 19, 2019

இன்று ஒரு புதிய சிந்தனை ...

இன்று ஒரு புதிய சிந்தனை ...
It is true that Mother suffers the pain of labor; feeds the child; day & night takes care;
Father showers his Love; works hard to give a daughter what ever she needs.
Both struggle to see the girl married well.
But.. take my example - I have lived with my parents for 24 years & with my husband for nearly 52 years.
He has taken care of me all these years; worked hard for me & children; raised our status of living & comfort level;
Accepting a girl from a totally new family & environment - has handled me well at times of depression, crankiness;
At times I have been adamant; thrown tantrums; have been demanding;
Has taken me to places because I like travelling; Gets me eats that I like...
so on.... and so forth....
Under the parents' care I was less demanding; much less sick; very innocent; obedient; no comparison with any one else; so it must have been relatively easy for them to handle me.
They knew that one day I will part with them; after I moved out, they would have missed me ... but got adjusted to the reality.
But from the age of 24, till date, realizing that I have no place to go, missing me even if I am away for a couple of days, constantly in touch with me over the phone, enjoying the evenings sitting with me & watching stupid TV progs.;
taking me to the restaurant I like & remember to order what i want.... ENDLESS CARE !!!
How many of the ladies agree with me ?
WHY NOT CELEBRATE HUSBAND'S DAY !!!

Thursday, April 18, 2019

Madras nalla Madras .......

Madras nalla Madras - 
1959 ஜூன் - காலேஜுக்கு திருச்சி, மதுரை, மெட்ராஸ் எல்லா ஊருக்கும் அப்ளிகேஷன் போட, அப்பாக்கு மெட்றாஸ் தான் பிடித்தது என்பதால், அப்பா முதலில் மெட்ராஸ் வந்து, Q.M.C. அட்மிஷன் லிஸ்ட் பார்க்க அங்கேஇடம்கெடச்சிடுத்து..
உடனேதஞ்சாவூருக்குதந்திவந்தது.. ஒருவெள்ளிக்க்கிழமை.. அம்மாக்கு - "send vasantha immediately"
எனக்குசரியானதுணிமணிகள்இல்லை.. அதுவும்அப்பாசொல்படி - இரண்டுசெட்பாவாடைதாவணி...
அம்மாகடைக்குப்போய், சீட்டிபாவாடைதுணிவாங்கி, தையற் காரனிடம்குடுத்துஒரேநாளில்தைத்துவாங்கினார்...
அப்போடிக்கெட்reservationஎல்லாம்தெரியாது...
பக்கத்தாத்துகாராளிடம்எல்லாம்சொல்லிக்கொள்ள .. எல்லோரும் "நீதிரும்பவும்ஒருடாக்டராகஇந்தவூருக்குவரணும்" என்றஆசிகளுடன்அனுப்பிவைக்க... (அதுதான்என்கனவு... இன்றுவரை...)
ஞாயிற்றுக்கிழமைமாலைநாலுமணிக்குஅம்மாவும், அண்ணாவும்ரயிலடிக்குவந்துஏற்றிவிட, ஜன்னலோரசீட்பிடித்து, ராத்திரிக்கானதயிர்சாதமூட்டயுடனும் , ஐந்துரூபாய்டிகட்டுடனும், அம்மாவைவிட்டுபோகிறேனேஎன்றவேதனையுடனும்என்பிரயாணம்துவங்க, passenger train ...... மறுநாள்காலைஎக்மோர்ரயிலடியில்அப்பாகாத்திருக்க....
1959 ,ஜூனில் , என் வாழ்க்கையின் மெட்ராஸ் அத்தியாயம் தொடங்கியது.
13 ரூபாய் வாடகையுடன் , புரசைவாக்கத்தில் துடங்கிய மெட்ராஸ் வாழ்க்கை, இன்று வரை இன்றைய சென்னையில் தொடருகிறது.
மெட்ராஸ் வாரம் கொண்டாடும் இந்த நேரம், என் மனதில், இந்த 59 வருட சென்னை வாழ்க்கை படமாக ஓடுகிறது.

Friday, April 12, 2019

VK's life .. before and after marriage......

VK's life .. before and after marriage......
after marriage what all have increased for me ... secured feeling, more relatives, good children, husband who takes care at my present age, earning பத்தி கவலை இல்லாத வாழ்க்கை , நிறைய படிப்பு, maturity, acceptance & better மரியாதை in society, ஏதோ நாமும் achieve பண்ணி இருக்கோங்கற satisfaction, variety of entertainment ....இன்று வரை நிலைத்திருக்கும் உறவுகள், மூத்த மாட்டுப்பெண் என்ற மரியாதை, பேரக்குழந்தைகள், வயதான காலத்தில் நிம்மதியும் , நிறைவும் இன்னும் நிறைய....... இதெல்லாம் PLUS.
Loss of freedom, artificial life (கொஞ்ச வருஷங்கள் ), நிறைய உரிமைகளை இழந்தது, adjusting to totally new environment, getting cut of from sis & bro... கற்ற கலைகளை ஒதுக்கியது , தனக்கென நேரம் ஒதுக்காதது - இதெல்லாம் MINUS
Before marriage... true, கலப்படம் இல்லாத பாசம் , sisters, brothers கூட inhibition இல்லாத life, nothing artificial, nothing demanding, கவலை இல்லை , அனாவசியமாக யாருக்கும் பயப்பட தேவை இல்லை...... basic education over which i could build, சாப்பிட்டாயா என்று concern ஓட கேக்கற உறவுகள் ..... simple ஆ இருந்தாலும் புது ட்ரெஸ் ம் , festivals ம் குடுத்த மகிழ்ச்சி எப்பவும் விளையாட்டும் சிரிப்பும் , இன்னொருவர் mood & reaction பார்த்து பேச வேண்டிய அவசியமில்லாத innocent life, limited but good entertainment, Music (carnatic & Veenai)..... இதெல்லாம் Plus தான் .
நீ சின்னவள், உனக்கு ஒன்றும் தெரியாது ன்னு சொல்ற parents , bros., ஒரு தனித்துவம் develop ஆகாத சூழல் , sisters எல்லோரும் marriage ஆகி போனதும் உண்டான தனிமை,, aging parents who could not possibly give attention or pamper me .....இதெல்லாம் MINUS.
கூட்டி கழிச்சு பார்த்தா..... 24 வருஷ , கல்யாணத்துக்கு முன்னான வாழ்க்கையை விட, 53 வருஷ திருமண வாழ்க்கையில் PLUS அதிகம் தான்.
So, I think I have gained by marriage. (totally based on my life... not general)

Thursday, April 11, 2019

நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள், சம்பவங்கள் ..........

நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள், சம்பவங்கள் !
ஒரு நாள், பார்த்த சாரதி கோவிலுக்கு போனேன். (பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க)
கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள். அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் கல் சட்டி வியாபாரம்.
அந்த தெருவிற்கு போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு. அந்த திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி - உட்கார்ந்த வாக்கில் கை பம்ப் அடிக்கிறார். அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.
கல் சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீன மாக அந்த திண்ணையில் போய் உக்கார்ந்தேன். பேச்சுக் கொடுத்தேன். இனி எங்கள் உரையாடல் :-
நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"
பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்!!"
நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"
பாட்டி - "அவள் என் சின்ன ஒர்ப்பிடி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"
நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"
பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன். ஏன் ஆத்துக்காரர், பெருமாளுக்கு சேவை செய்த குருக்கள். இந்த வீடு அப்போ, வாடகை இல்லாமல் கொடுத்தார்கள். எனக்கு குழந்தை பிறக்க வில்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை. இவருக்கு கீழ் கடையில் மூன்று தம்பி, மூன்று தங்கைகள். எல்லாரும் என் குழந்தைகளாக வளர்த்தேன். நிறைய கஷ்டம் தான். ஆனால், அந்த பெருமாள் கோவில் கோபுரத்தை பார்த்தால் எதுவுமே கஷ்டமாக தெரியாது. எல்லாரும் கல்யாணம் பண்ணி, விட்டுச் சென்றார்கள். என் கணவரும் சீக்கிரமே இறக்க, நான் தனித்து விடப்பட்டேன்... இல்லை இல்லை... நாராயணன் துணை என்னிக்கும் உண்டு.
"எனக்கு இப்போது 87 வயது. ஒருவருமே என்னை வைத்துக்கொள்ளத பொது, என் கடைசி ஓர்ப்படி, என்னை பார்த்துக் கொள்கிறாள். அவளுக்கு ஒரே பெண். காலில் ஊனம். கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து வருகிறாள்; கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறாள். என் ஒர்ப்படிக்கு (சுமார் 20 குடம் உள்ளே கொண்டு கொட்டியவருக்கு) 77 வயது. நான் திண்ணையிலே தான் வாசம். என்னால் முடிந்தது, பகவான் தெம்பு கொடுத்திருக்கும் கையால் தண்ணி அடிப்பது. சமையல் எல்லாம் ஒர்ப்படிதான். எனக்கு ஒரே வேளை, 12 மணிக்கு கொஞ்சம் மோர் சாதம். அவ்வளவு தான் என்னால் சாப்பிட முடியும். ராத்திரி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்"
"எனக்கு என்ன குடுப்பினை பாரும்மா... நாள் முழுதும், கோவில் தரிசனம். அவன் வந்து அழைத்துப் போவான். அது வரை இப்படியே என் காலம் ஓடும்"
நான் ... "பாட்டி, உங்களுக்கு ஒருத்தரும் செய்ய வில்லை என்ற வருத்தம் இல்லையா ?"
பாட்டி... "கண்ணம்மா.. யார் செய்தா, யார் செய்யாட்டா என்ன. பெருமாள் என்னை இங்கு அனுப்பிய காரணம் , இந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது. எல்லாம் செய்து விட்டேன். திருப்தி தான்; குறை இல்லை. அதே பெருமாள், என்னை பாத்துக்க ஒரு ஒர்ப்படியையும், ஒரு பெண்ணையும் கொடுத்திருக்கான். நீயும், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குறை, கவலை படாதே. எல்லாம் பெருமாள் பாத்துப்பான். நீ செய்யும் செயல் அத்தனையும் நீ செய்ய வில்லை. கோவிந்தன் செய்ய வைக்கிறான். இதில் பிற மனுஷாளை எப்படி குத்தம் சொல்ல முடியும்?" நிம்மதியாக இரு.
பாட்டி இன்னும் ஏதேதோ... பாசிடிவாக பேசினாள் - இத்தனைக்கும் பள்ளிக்குப் போய் படித்தவள் இல்லை. அனுபவப்பாடம்; புரிந்து கொண்ட வாழ்க்கை தத்துவம்.
கடைசியாக நான், "பாட்டி பணம் தரேன்; வாங்கிக்கறேளா" என்றேன்... பாட்டி சிரித்தாள். அர்த்தம் பொதிந்த சிரிப்பு. "பணமா, எனக்கா, எதுக்கு; நான் என்ன பண்ணப் போறேன்"
"பாட்டி, உங்களுக்கு வேண்டியது ஏதாவது, அல்லது சாப்பிட... " என்று இழுத்தேன். அதற்கும் சிரிப்பு.
"கோவிந்தன் என் பெண் மூலமாக என்னை பார்த்துப்பான். இதே திண்ணையில், அவனை பார்த்துக்கொண்டே ஒரு நாள் போய் சேருவேன். அந்த நாளைக்காக நான் நொந்து போய் காத்திருக்க வில்லை. அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன. எனக்கு பணமெல்லாம் வேண்டாம்"
என் புத்தி...உள்ளே போய், (ரொம்ப சிறிய போர்ஷன்) ... ஒரே ரூம்; கொஞ்சம் தடுத்து சமையல் அறை.
"மாமி, உங்க கிட்ட பழைய நாள் பாத்திரம் எல்லாம் இருக்கா ? எனக்கு ஆசை " என்றேன்.
மாமி சிரித்துக் கொண்டே, "நானே பாத்திரம் தேய்ப்பதால், அதெல்லாம் கட்டி ஆளமுடியாமல் எல்லா வற்றையும் போட்டு விட்டேன். தேவைக்கு வேண்டியது மட்டும் இருக்கு"
பாட்டியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்; கிளம்ப மனமே வரல்ல;
"பாட்டி, உங்க கிட்ட பேசினா, மனது லேசாகிறது !!"
"முடிந்தால் வாயேன்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு" என்று வழி அனுப்பினாள்.
ஒரு சலிப்பு, அலுப்பு கிடையாது; ஆசைகள் கிடையாது; அந்த திண்ணையில் ஒரு தவம் மாதிரி இருக்கிறாள்.
எனக்கு எப்போவாவது தோன்றினால், டல்லாக இருந்தால், அந்த பாட்டியை தேடிப்போய், எனெர்ஜி பூஸ்ட் எடுத்துக்கறேன்.
கடைசியாக இரண்டு மாதங்கள் முன்பு; மனதில் எப்போதும்.... இப்போது இருப்பாளா ?? போய் பார்க்க வேண்டும்.