Sunday, October 22, 2017

ஓடுகிறோம்...ஓடுகிறோம்...

ஓடுகிறோம்...ஓடுகிறோம்... என்று பன்மையில் சொல்லும் குழந்தைகளே....
"ஓடுகிறேன்...ஓடுகிறேன்.." என்று ஒருமையில் சொல்லுங்கள்.
"எதை நோக்கி ஓடுகிறேன்" என்று கேட்கும்போதே... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்....
உங்களுக்காக ஓடவில்லை... யாரோடையாவது போட்டிப் போட்டி ஓடுகிறீர்கள்... யாரையெல்லாமோ ஓட்டத்தில் ஜெயிக்கப் பார்க்கிறீர்கள்... ஏன் இந்தப் போட்டி.
உங்களுக்கு என்று கொடுக்கப் பட்டதை அனுபவிக்க  முடியாமல், ஒரு வட்டத்துக்குள்ளேயே ஓடி, புறப்பட்ட இடத்திற்கே வந்து, திக்கு திசை புரியாமல், மறுபடி ஓட்டம்.
கடவுள் படைக்கும்போது மனிதனை மட்டும் ஆறறிவுடன் படைத்தான். பகுத்து அறிந்து, நல்லது கெட்டது புரிந்து, பிறப்பு, இறப்பில் சிக்கி, உழன்று, ஏதோ ஒரு பிறப்பில் முழுவதுமாக அவனை உணர்ந்து , அவன் பாதம் அடைய...
பறவையைப் பார்த்து, அதன் மாடல் செய்து, அதில் பறக்கலாம்... பறவையைப் போல் பறக்க ஆசைப் பட்டால் முடியுமா?
பஞ்ச பூதங்களால் ஆனது நம் உடம்பு. அந்த பஞ்ச பூதங்களுக்கு அடிமையாகிப் போனோம்.
மண்ணில் வாழ்கிறோம், மண்ணில் விளைந்ததை உண்ணுகிறோம்; நீரை குடிக்கிறோம்; காற்றை சுவாசிக்கிறோம்; வயிற்றில் அக்னியை எரிய விடுகிறோம்; மனதை மட்டும் வெற்று வெளி ஆக்கி, இறவன் நினைவைத் தவிர வேறேதுவுமில்லாமல் வெற்றிடமாக வைக்க முடியவில்லை.
வாழ்க்கையை உணர, ஆண்டவனை தரிசிக்க, நம் முனிவர்கள்... முதலில் உணவைத் தவிர்த்தார்கள்; பிறகு நீரை; சுவாசத்தை நிறுத்தி தியானம் செய்தார்கள்; ஆண்டாண்டு காலமாக இந்த தவத்தை செய்து, தன்னையே கட்டுப் பாட்டுக்குள் வைத்தார்கள். அப்போது கூட அவர்கள் வைகுண்டம் ஏக யுக யுகாந்திரம் ஆச்சு.
ஆனால், கலி உகத்தில் நாம் இந்த பஞ்ச பூதங்களுக்கு அடிமை ஆகிப் போனோம். அவைகளை நமக்கு அடிமை ஆக்க நம்மால் முடிய வில்லை.
த்ரௌபதிக்கே கண்ணன் உதவியது, தான் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தைக் கை விட்டு, கைகளை உயர்த்தி யாசித்த போது தான். திரௌபதிக்கு அண்ணனாக கண்ணன் புடவை குடுக்கிறான், அவள் மானத்தைக் காப்பாற்ற.
இந்த சரணாகதி தத்துவத்தைத் தானே ஆண்டாள் பாடினாள்... நெய்யுண்ணோம், பாலுண்ணோம், என்று !!
சரி, இதையெல்லாம் நம்மால் இப்போது பண்ண முடியுமா.? என்று கேட்டால்... கண்டிப்பாக முழுவதும் முடியாது. ஆண்டவன், அவரவர்க்கு ஏற்றாற்போல், limitation வைத்துத் தான் படைத்திருக்கிறான். இல்லாவிட்டால், ஏன் ஏற்றத் தாழ்வு.? ஏற்றத் தாழ்வு என்னும் சொல்லும்போதே.. நாம் materialistic ஆகிவிடுகிறோம்... அழகு, ஆஸ்தி, நல்ல குழந்தைகள் என்று முடிவில்லாமல் போகிறது நம் ஆசைகள்.
உங்களை ஒடச்சொன்னது யார்? அது உங்கள் ஆசை, வழி.
கலி முடியும் வரை, மறுபடி மறுபடி பிறந்து, இறந்து... ஏதோ ஒரு பிறப்பில் அவனை உணர்ந்து.. ஒரு முடிவு கிடைக்கும்.
நின்று நிதானமாக உங்களைச் சுற்றி பாருங்கள். அனுபவியுங்கள். அப்படி ஓடினாலும் அது கிருஷ்ணனின் செயல். உங்களுக்கு கிடைத்தது, கிடைக்கவில்லை என்று நினைப்பது, நிலைத்திருப்பது, நிலைக்காதது எல்லா இயக்கமுமே கிருஷ்ணனால் ஆனது.
நாள் முழுவதும் "எல்லாமே கிருஷ்ணனுக்கு அர்ப்பணம்; நான் எதுவும் செய்யவில்லை" என்று நான் சொன்னது போல் "ஸ்ரீ ராம ராமேதி..." சொல்லுங்கள்.
உங்கள் குழப்பம், தெளிவு, சந்தோஷம், சந்தேஹம் எல்லாம் கண்ணன் தான்.
அதனால் எதற்கும் மூலக்கூறு ஆராயாமல், அன்றன்று கிடைத்ததை சந்தோஷத்துடன் ஏற்கப் பழகினால் , வாழ்க்கை எளிதாகும். எல்லாரையும் ஆட்டுவிக்கும் அந்த கண்ணன், உங்கள் உடலின் பஞ்ச பூதத்தை அடக்கும் வழி வேணுமானால் காட்டுவான்; செய்ய வேண்டியது நீங்கள் தான்...
அதனால் no குழப்பம்; no waste of time... கடமை, கண்ணியம், கட்டுப்பாடு...
இனி சந்தோஷம், திருப்தி எல்லாம் உங்கள் கையில், கிருஷ்ணன் ஆசிகளுடன், மூதாதையர் ஆசிகளுடன்.

No comments:

Post a Comment