ஆவணி அவிட்டம் அன்று (August 16) என் "வரப்போகும்" .. மாமியார், தன பெண்ணுடனும், தன் ஒன்று விட்ட நாத்தனாருடனும் , என் மாமனாருடனும், திடீரென்று, சொல்லாமல் கொள்ளாமல் வந்து பார்த்தார்.
நான் college லிருந்து (வேலை பார்த்தேன்) வந்து, செமையாக சாப்பிட்டு, கொண்டையை அவிழ்த்து, தலை முடி விரிந்து கிடக்க (கண்ணாம்பா முடி !!),
காதில், கழுத்தில் போட்டிருந்த பிளாஸ்டிக் நகைகளை கழற்றி விட்டு, என்றும் இல்லாதபடிக்கு தூங்கி விட்டேன் !!
அம்மா அப்பா வீட்டில் இல்லை. நானும் என் அத்தையும் !!
திடீரென்று, கதவு தட்டப்பட (calling bell எல்லாம் கிடையாதே !!) கதவை திறந்தால்... !!
யாரென்றே தெரிய வில்லை ! என் மாமியார், "நீதான் வசந்தாவா"... உன்னை பார்க்கத்தான் வந்திருக்கிறோம் " என்று சொல்ல, "அம்மா அப்பா வெளியில் போயிருக்கிறார்கள். நீங்கள் வந்து உட்காருங்கள்" என்று சொல்லி, பாய் போட்டு, இருந்த ஒரு நாற்காலியில் மாமனாரை உட்கார சொல்லி,
குளியல் அறை உள்ளே ஓடி, முகம் கழுவி, தலையை வரி, பின்னலிட்டு , அத்தை காப்பி போடா சொல்லி விட்டு, வெளியில் வந்தேன்.
சமயோசிதமாக போளி, வடை கொடுத்து, காப்பி கொடுத்தேன்...
சந்தோஷமாக போனார்கள். இவரோட ஒரே கண்டிஷன், "நான் ஒரே பெண்தான் பார்ப்பேன்." என்று.
August 25 (சொல்லி விட்டுதான் !!) எல்லோரும் வந்தார்கள்....
பட்டு புடவை கட்டி, மல்லிகை பூ வைத்து, (அப்ப எல்லாம் no make up !! not even face powder as my father was dead against all these---thanks to him !!) ..மை இட்டு , குங்கும போட்டு வைத்து, (அந்த ஸ்டிக்கர் போட்டு இல்லாத நாட்கள்... ஆசீர்வதிக்கப்பட்ட நாட்கள்) .. வீணை வாசித்து, பாட்டு பாடி... (தனியாக பேசுவதெல்லாம் கிடையாது !!) -- உடனேயே இவர் பிடித்திருக்கிறது என்று ரிசல்ட் சொல்லி...
வீடே மகிழ்ச்சியில் அன்று கொண்டாட்டம் தான்......
அம்மா உடனே தன் favourite தெருக்கோடி மாரியம்மன் கோவிலுக்கு ஓடி... ஒரு thanks சொல்லி விட்டு வந்தாள் !!!
No comments:
Post a Comment