Thursday, June 13, 2019

அம்மாவின் ஓய்வு நேர வேலைகள்.....



அந்த நாள் ல எல்லாம் எங்கம்மா அப்பளாம், வடாம் என்று எல்லாம் ஆத்திலேயே செய்வாள். கடையில் வாங்கியதே கிடையாது.

அப்பளாம், வடாம் மட்டும் அல்ல. முழு கருப்பு உளுந்து மொத்தமாக வாங்கி , பலகையை சாய்த்து வைத்துக் கொண்டு உருட்டுவார். கல் எல்லாம் நின்று விடும்.
துவரம் பருப்பை சுத்தம் செய்து எடுத்து வைப்பாள்.
உளுந்தை இயந்திரத்தில் போட்டு உடைத்து வைத்துக் கொள்வாள்.
வருடத்திற்கு வாங்கிய புளியை கொட்டை, கோது எடுத்து . உருட்டி, கொஞ்சம் உப்பு கல் போட்டு பானையில் சேமிப்பாள்
அரிசி உப்புமாவிற்கு இயந்திரத்தில் உடைப்பாள். அரிசி மாவு அரைத்து சலிப்பாள்.
இட்லி மிளகாய் பொடி உரலில் இடிப்பாள்.
சாம்பார் பொடிக்கு இடிப்பாள்.
காபி கொட்டை வறுத்து வைப்பாள்
கல்லுரலில் இட்லி , தோசைக்கு அரைத்து வைப்பாள்.

கண் மை கூட்டுவது; சாந்து குழைப்பது ; இப்படி குழந்தைகளின் தேவைகள்.
இப்படி 9 மணிக்கு சாப்பாடு ஆனதும், கொஞ்சம் படுத்து எழுந்து, இவ்வளவு வேலை.
இவைகளை தவிர நிறைய கை வேலைகள்.
போன் கிடையாது; டி. வி. கிடையாது; யாராவது வந்து பேசிக்கொண்டிருந்தாலும் கை வேலை செய்யும்.






No comments:

Post a Comment