Wednesday, June 12, 2019

திருவையாறு ஆராதனை.......



திருவையாறு ஆராதனை ஒரு நல்ல அனுபவம்.
முதலில் சொல்ல வேண்டியது... மாயவரம் ஸ்டேஷனில் இறங்கியதும் கேட்ட சிட்டுக் குருவிகளின் இனிமையான கீச் கீச் சத்தம்! அப்பா.... அந்த அரச மரத்தில் எவ்வளவு குருவிகள் ? குழந்தைகளை அழைத்துப்போய் காண்பிக்க வேண்டும் என்று தோன்றியது. ராஜ கோபால சாமி கோவில் பிரகாரத்தில், அரச மரத்தில் கிளிகளோ கிளிகள்... அழகு... அழகு... கொள்ளை அழகு. சென்னை ஏன் இப்படி வரண்டிருக்கிறது?
சரி... சப்ஜெக்டுக்கு வருவோம்.
திருவையாறு கச்சேரியில் பாடினவர்களை விமரிசனம் பண்ணக்கூடாது. அது ஒரு சென்டிமெண்டுக்காக  பாடுவது.
ஆனால் இரண்டு விஷயங்கள் சொல்ல ஆசைப் படுகிறேன்.
1. பாடினவர்களில் அநேகம் பேரிடம் அந்த பக்தி, சிரத்தை தெரிய வில்லை. என் வயதில் எவ்வளவு ஆராதனை கேட்டிருப்பேன்? இப்போது ஷோ அதிகம். எல்லாருக்கும் வீடியோ, போட்டோ வில் தான் கவனம்.
2. ஆராதனை அன்னிக்கு, முதல் நாள் கச்சேரி செய்த பெரிய வித்வான்களில் நிறைய ஆப்சென்ட் !! மற்றபடியும் சீனியர் ஆர்டிஸ்ட்ஸ் ரொம்ப குறைவு. என்ன politics ? இது ஒரு தவம் இல்லையோ? யார் பெரியவர் என்ற போட்டிக்கு அங்கே இடமேது? பஞ்சரத்ன கிருதிகளில் பாட்டிலும் பக்தி, லயிப்பு ஆப்சென்ட். எனக்கு ரொம்ப குறைதான்.
மற்றபடி ஏற்பாடுகள் நன்றாக இருந்தன.
ஒரு யோசனை சொல்ல ஆசைப் படுகிறேன்.
தியாகராஜர் சரிதை படித்தால், அவர் எந்த situation இல், எந்த கீர்த்தனை பாடினார் என்று சுவாரசியமாக , கதைகளாக சொல்லப் பட்டிருக்கும்.
திருப்பதியில் திரை விலக, "தெரதீ யெகராதா" ; சரபோஜி ராஜா அரண்மனைக்கு வரச்சொல்லி, செல்வம் தருவதாக கூறும்போது, "நிதி சால சுகமா" ; தன் தாயிடம் ஆசி வாங்கும்போது "சீதம்மா மாயம்மா" .... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அவருக்காக நடத்தப் படும் விழாவில், ஒவ்வொருவரும்... at least சீனியர் பாடகர்கள், ஒரு 2 நிமிடங்களுக்கு situation சொல்லி, 2 நிமிடங்களுக்கு பாட்டின் அர்த்தத்தை சொல்லி விட்டு பாடினால், அவர்களுக்கும் பக்தி ரசம் அதிகம் இருக்கும்; நமக்கும் enjoyable ஆகவும் இருக்கும்; அர்த்தத்தை அணிபவிக்கலாம்... லிரிக்ஸ் முக்கியம்.
இதை சென்னை கச்சேரிகளின் போது கூட செய்யலாம். பாடகர்களும் தெலுங்கை புரிந்து, சரியாக உச்சரித்து பாடுவார்கள். நிறைய பேர் பாடும்போது வார்த்தையே புரிவதில்லை.
இதற்கு யாராவது, ஏதாவது செய்வார்களா??

No comments:

Post a Comment