இவர்கள் எல்லோரும் இராமாயணத்தில் இருக்கிறார்கள் !
அகம்பனன் - ராவணனிடம் ராமனைப் பற்றிக் கோள் சொன்னவன். (போட்டுக் கொடுத்தவன்). ராமனின் அம்புக்குத் தப்பிப் பிழைத்த அதிசய ராட்சஸன்.
அத்திரி - பத்தினி அனுசூயாவின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.
கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள்; ராமன் கையால் அழிந்தவர்கள்.
கும்பன் - கும்பகர்ணன் மகன்.
குசத்வஜன் - ஜனகரின் தம்பி; மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத - சத்ருக்கனரின் மாமனார்.
சுநைனா - ஜனகரின் மனைவி; சீதையின் தாய்.
சதானந்தர் - அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
சதபலி - வடக்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.
சுஷேணன் - வாலியின் மாமனார்; வானர மருத்துவன், மேற்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.
தான்யமாலினி - ராவணனின் இளைய மனைவி.
நிகும்பன் - கும்பகர்ணன் மகன்.
மால்யவான் - ராவணனின் தாய்வழிப் பாட்டன்
யுதாஜித் - கைகேயியின் தம்பி; பரதனின் தாய்மாமன்.
வினதன் – கிழக்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.
மாண்டவி - பரதன் மனைவி.
சுருதகீர்த்தி - சத்ருக்கனன் மனைவி.
ருமை - சுக்ரீவன் மனைவி.
விராதன் - தாண்டகவனத்தில் வசித்த அரக்கன்; ராமனால் சாபம் தீர்ந்தவன்.
No comments:
Post a Comment