Wednesday, June 12, 2019

எனக்குள் சில கேள்விகள்........

பெண்ணோ , ஆணோ , ஒரு வயதுக்கு மேல், துணை தேடுவது இயற்கை.

ஆனால் எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன....

1. பெண் தான் தன் பிறந்த வீட்டை விட்டு, மற்றொரு புதிய சூழ்நிலைக்குப் போய் அவர்களுடன், அவர்கள் தினசரி வாழ்க்கை முறையுடன் இயைந்து போக வேண்டும் என்று ஏன் ஏற்பட்டது?

2. அப்படியே இருந்தாலும், அந்த உறவுகளின் இடையே, "naturalness" இல்லை எனபது என் எண்ணம். ரத்த சம்பந்தமில்லாத அந்த உறவுகளுடன் , மனம் ஒத்துப் போவது, கஷ்டமான ஒன்று. வெகு காலம் சேர்ந்து வாழும்போது, கொஞ்சம் அன்பும், அபிமானமும் ஏற்படலாம். ஆனால் அந்த உறவுகள் 'கண்ணாடி' போல் தான். விரிசல் விட தயாராய் இருக்கும். இதில் , பெண் என்பவள் மட்டும் ஏன் தள்ளப் படுகிறாள். ?

3. அந்த பெண்ணை, தன் குழந்தையாக எண்ணும் மாமியார், மாமனார் அமைந்தாலும், அது ஒரு சான்ஸ் தான். அதற்காக விட்டுக் கொடுத்துப் போகும் இருவருமே பெண்கள் தான்.

4. அவள் இயற்கையாக ஒன்றி, எல்லோரும் ஒன்றாக இருந்தால் தான் அது குடும்பம்; ஒரே இடத்தில் வசித்து, மனதளவில் வேறு பட்டு வாழ்ந்தால் அது குடும்பம் ஆகுமா?

5. இந்த சோதனைக்கு, பெண் மட்டும் ஏன் உடன் படுத்தப் படுகிறாள்?

6. அதிகம் பேசாத, அமைதியாக இருந்த நான், படிப்பதில் (ஏதாவது) ஆர்வமுள்ள நான், சங்கீதத்தில் ரொம்ப ஆர்வமான நான், ஏன் என்  தனித்தன்மை ஐ இழந்தேன். "எல்லோரோடும் சகஜமாக பேசு, பேசு "என்று ஏன் husband ஆல் ஊக்குவிக்கப் பட்டேன்? ஏன்னா, அவர்கள் வீட்டில் எல்லோரும் ரொம்ப கலகலப்பு. இதில், நான் என் சுயத்தை ஏன் இழந்தேன்? பிறகு, அதே பேச்சே, குற்றம் கண்டு பிடிக்கவும் ஏதுவாகிப் போன போது, அந்த கணவன் எங்கே போனான்?

6. வீணை கிடையாது, பாட்டுக் கிடையாது, படிக்கக் கூடாது... என்று, ஏன் இயற்கைக்கு மாறாக அழுத்தப்பட்டேன்.

(நான் என்னை ஒரு உதாரணமாகக் காட்டுகிறேன்; சுய சரிதை அல்ல)

இதை ஒத்துக் கொள்ளாமல், "எங்கள் வீட்டில், என் மாமியார் நன்றாகப் பார்த்துக்கொண்டார்" என்று சொல்லும் பெண், அதற்காக கொடுக்கும் விலை என்ன? இதற்கு என்ன தீர்வு?

7. கொஞ்சம் வயதாகி, தன் குழந்தைகள் வாழ்வுக்குப் பொறுப்பு ஏற்கையில்   "மனதில் வெறும் சந்தோஷம்தான் நிற்கிறது" என்று சொல்ல முடியுமா?

8. ஏன் அந்த ஆணும் பெண்ணும் தன் குடும்பம், தன் வீடு என்று ஏற்படுத்தி வாழக் கூடாது?

9. ஏன் இரு பக்கப் பெற்றோர்களையும், இருவரும் சொந்தமாக்கிப் பார்க்கக் கூடாது?

10. ஏன் பெண்களிடம் மட்டும் எதிர் பார்ப்பு? ஆண் எந்த விதத்தில் உயர்ந்து விடுகிறான். "என்  கணவன் நன்றாக என்னை பார்த்துக் கொள்கிறான்" என்ற சுய பெருமை?

11. அதிகம் பேசி, உறவாட தள்ளப்பட்ட நான், இன்று வயதான நிலையில், அவ்வளவாக பேசுவதற்கு ஒன்றுமில்லாமல், எங்கள் interests எல்லாம் மாறு பட்டிருக்க, பேச்சைக் குறைத்துத்தான் விட்டேன். "நீ பேசு; நான் கேட்கிறேன்; நான் கேட்கிறேன், நீ பேசு" என்ற வாதத்தில் எனக்கு உடன் பாடில்லை. "நான் எப்போதுமே கேட்கும் சைட்தான் " என்ற கூற்று சரியாகப் படவில்லை. மனதில் ஒரு அழுத்தம் ஏற்பட, நான் பேச்சைக் குறைத்துத்தான் விட்டேன். "நீ மட்டும் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும்" என்ற எதிர்பார்ப்பு மன அழுததைத்தான் ஏற்படுத்துகிறது.

12. அதனால் தான் ஹிந்து பேப்பரில் , என்னை பேட்டி எடுத்த போது, "but for my husband's support, I could not have achieved all these " என்ற statement நான் சொல்ல மாட்டேன் என்று சொன்னேன். இதற்கு இவருடைய friends எல்லாம், நெகடிவ் கமென்ட் . "மாமியாரே, மாமியாரே" என்று மங்கையர் மலரில் எழுத, public readers" ஆதரவு; சொந்த குடும்பம் எதிர்ப்பு. உண்மை எப்போதும் சுடும்.

13. in a nutshell, "கல்யாணம் எனபது, இருவர் சம்பந்தப்பட்டது, இரு குடும்பங்களின் சங்கமம் " என்று வசனம் பேசுபவர்கள், அங்கு பெண் மட்டுமே விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். இதை மாற்ற வேண்டியதும் ஒரு பெண்தான். (மாமியார் என்ற பெண்). "என்ன வளர்ப்பு இது" என்று கேள்வி கேட்காதீர்கள்

14. இந்த நிலைக்கு காரணமே, ஆண் என்பவன் சம்பாதித்து , மனைவிக்கு "roti, kapadaa & makaan" கொடுப்பதால் தான் என்றால், அந்த ஈகோ வை விட்டொழியுங்கள்.

14. பெண்ணும் அதை விட இரண்டு மடங்கு குடும்பத்துக்காக செய்கிறாள். அதனால், "நான் உயர்ந்தவன்; நான்தான் கடைசி முடிவு எடுக்க வேண்டும்" என்ற உணர்வை, ஆண்களே, மாற்றிக்கொள்ளுங்கள்.

சரியா தப்பா?... சரியா தப்பா...??

No comments:

Post a Comment