நேற்று கோடை நாடக விழா நடக்கும் சபாவுக்கு விஜயம். coaching class லிருந்து நேராக, சீக்கிரமே போக.. கையில் புத்தகம் படிக்க, காத்து, அங்கு நடக்கும் சத்தமான சம்பாஷணைகளில்.
வந்தவர்களின் average age 65 ! ஆண்கள் வேஷ்டியில். பெண்மணிகள் (மாமிகள்) சாதாரண புடவை கட்டு, தலைப்பைக் கொசுவி மேலே போட்டு, பலர், ஒரு நுனியை இடுப்பில் இழுத்துச் சொருகி... அநேகமாக முழுதும் வெள்ளையான முடியில் சின்ன கோடாலி முடிச்சு.. அதில் ஒரு கணு மல்லிகைப் பூ; நெற்றியில் அழகாக குங்குமம்..
அவர்கள் ஹாலில் நுழையும் போதே, சத்தமாக வும், சந்தொஷமாகவம், சிநேகிதர்களை, தினமும் சபாவில் meet பண்றவாளை greet பண்ணிக் கொண்டு. !!
ஒரு பக்கம் மாவடு, ஆவக்காய் போட்டு விட்டதைப் பற்றி பேச்சு... ஒரு பக்கம் அப்பளாம் இடும் கல்யாணம் ஆரம்பித்து விட்டதைப் பற்றி டிஸ்கஷன். எல்லாம் சத்தமாக.. ஒரு inhibition ம் இல்லாமல்... மச்சினர், ஓர்ப்படி, நாத்தனார் என்று செய்திகள்... எதுவுமே வம்பு தும்பு இல்லை.. சகஜமான தகவல்கள். நடு நடுவில் கையில் கொண்டு வந்திருக்கும் சுலோகப் புத்தகங்கள் படித்து...
பக்கத்தில் இருக்கும் மாமிகள் இருவரும், திங்கட் கிழமை கிளம்பப் போகும் அமேரிக்கா பயணம் பற்றி...
இப்போது நடுத்தர குடும்பங்களில் இது ரொம்ப சகஜமாக போய் விட்டது... பெண்கள் அசால்ட் டாக அமேரிக்கா போய் 6 மாதம் இருக்கிறார்கள்.. பெண்ணுக்கு பிரசவம், பிள்ளையின் குழந்தைகள் என்று அவர்களுக்கு ஏதோ காரணம் கிடைக்கும். ஆனால், கொஞ்சமும் மாறாமல், போன படியே திரும்பி வந்து, அதே யதார்த்த வாழ்க்கை வாழும் அவர்களைப் பற்றி appreciate பண்ணியே ஆகா வேண்டும்.
அந்த ஹாலில் நான் மட்டும் , odd one out.
இப்போது நடுத்தர குடும்பங்களில் இது ரொம்ப சகஜமாக போய் விட்டது... பெண்கள் அசால்ட் டாக அமேரிக்கா போய் 6 மாதம் இருக்கிறார்கள்.. பெண்ணுக்கு பிரசவம், பிள்ளையின் குழந்தைகள் என்று அவர்களுக்கு ஏதோ காரணம் கிடைக்கும். ஆனால், கொஞ்சமும் மாறாமல், போன படியே திரும்பி வந்து, அதே யதார்த்த வாழ்க்கை வாழும் அவர்களைப் பற்றி appreciate பண்ணியே ஆகா வேண்டும்.
அந்த ஹாலில் நான் மட்டும் , odd one out.
நான் மட்டும் வித்தியாசமாக ! ஒற்றையாக விட்ட பின் பண்ணிய தலைப்பு, (fashion parade மாதிரி) ; matching "jing-bing) ; கையில் ஜெயகாந்தன் புக் .. ரீடிங் cum listening ! ரொம்ப அன்னியமாக உணர்ந்தேன்...
ஏன் இப்படி கலந்து பேசத்தெரியாமல் ? மனம் பின்னோக்கி போக... அப்பாவின் attitude... அம்மா யாருடனும், அண்டை அசலில் அரட்டைக் கூடாது... அம்மாவுக்கு வழக்கமே இல்லாமல் போகி, பேச மறந்தே போனாள்....
யாரோ சிநேகிதனுடன் தெரு மூலையில் நின்று பேசிய அண்ணா வாங்கிய 'பளார்' , எங்களுக்கு கூறாமல் கூறப் பட்ட கண்டிஷன்.
அப்படியே பழகி விட்டதோ? எப்பவும் உம்மணா மூஞ்சியாக... என் மாமியார் வீட்டிலும் முதலில் பயந்து பயந்து.. ஆனால்.. பின்னாளில் நிறைய பேசக் கற்றுக் கொண்டேன்.. நிறைய பேச சந்தர்ப்பம் அளித்தது .. இந்தத் "திண்ணை தான்"
சரி, சபாவுக்கு வருவோம்... எல்லாரையும் ஒரு ரவுண்டு, பார்த்து, கேட்டு, மற்றவரைப் பற்றி கவலை இல்லாமல், அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்... நான் ஏன் இப்படி மாறு பட்டு இருக்கிறேன் ? என்று சிந்திக்க வைத்தது...
normal family போல்.. காலையில் ஸ்நானம் பண்ணி, கோடாலி முடிச்சு போட்டு, சுலோகம் சொல்லிக் கொண்டே சுவாமி விளக் கேற்றி, பில்டரில் தட்டி கொட்டி டிகாக்ஷன் இறக்கி, இரண்டு டம்ளர் கலந்து, பேசிக்கொண்டே சாப்பிட்டு... மறுபடியும் சமையல் அறையில் தஞ்சம் புகுந்து.. சமைத்து..உட்கார்ந்து சுலோகங்கள் சொல்லி.. . 9.30 மணிக்கு சுடச் சுட இவருக்கு இலையில் பரிமாறி, நானே பாத்திரங்களை ஒழித்துப் போட்டு, மிச்ச மீதிகளை, மேடை ஓரத்தில் அடுக்கி மூடி, அலுப்பு தீர கொஞ்சம் தலையை சாய்த்து, விகடனும், கல்கியும் படித்து... பின்னர் ராமாயணம் மகா பாரதம் இப்படி படித்து... ஒரு மணிக்கு காபி போட்டு... 3 மணிக்கு டிபன் பண்ணி... என் கற்பனை விரிந்தது... எதையோ மிஸ் பண்ணுகிற மாதிரி...
ஆனால் எல்லாம் அந்த அரை மணிதான்... வீட்டுக்கு வந்ததுமே, என் self ஆகி... ஓ... நான் இருப்பதுதான் எனக்கு natural. புலியை பாத்து பூனை சூடு போட்டுக் கொண்டால் அது செயற்கை என்று தெளிவு பெற்று, இதோ, FB இல் உக்காந்து, 'திண்ணை' அரட்டை செய்வது தான் என் நியதி. அதை மாற்ற முடியாது. மாறினால், அது செயற்கை.. நிறைய அன்னியங்கள் இருக்கும்.. சொச்ச நாட்களை (வருடங்கள்? மாதங்கள்?) இப்படியோ தள்ளுவோம்... இல்லை இல்லை - வாழ்வோம் என்ற யதார்த்தக்கு வந்தேன்.
No comments:
Post a Comment