அதில் தினமும் ஏதாவது அரைக்கணும் .. இட்லி, தோசை (இட்லி மாவுல தோசை வாக்கர வழக்கம்மேல்லாம் கிடையாது !!), அடை, வடை, சட்னி.. இப்படி ஏதாவது....
அதில் அரச்சு, அரச்சு தான் என் கை எலும்பே தேஞ்சு போயிடுத்து ன்னு நெனக்கிறேன் !! (மிக்சி எல்லாம் கிடையாது)
நான் இவரோட குடித்தனம் பண்ணினத விட, அந்த கல்லுரலோடதான் அதிக நேரம் செலவழிச்சிருப்பேன் !!
இப்படியாக, சுமார் 25 வருட friend அது !
இப்படியாக, சுமார் 25 வருட friend அது !
என் கடைசி மச்சினன் கல்யாணம் பண்ணி, ஒர்ப்படியோட அம்மாவாத்துக்கு பக்கத்திலேயே தனிக்குடித்தனம் போனான்.
அப்போ - எதுக்கோ தெரியல்லே - என் மாமியார் அந்த கல்லுரலை, தன் கடைசி மாட்டுப்பொண்ணுக்கு 'சீரா' குடுத்து அனுப்பிச்சுட்டா !!
அப்போ - எதுக்கோ தெரியல்லே - என் மாமியார் அந்த கல்லுரலை, தன் கடைசி மாட்டுப்பொண்ணுக்கு 'சீரா' குடுத்து அனுப்பிச்சுட்டா !!
'விட்டது' தொல்லை ன்னு நானும் பேசாம இருந்துட்டேன்.
ஆனா, கொஞ்ச நாள் லையே அதை மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் !!
ஆனா, கொஞ்ச நாள் லையே அதை மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் !!
அதற்குள், பாவம், மச்சினனுக்கு divorce ஆயிடுத்து !! மச்சினன் பொறந்தாத்துக்கு திரும்பி வந்துட்டான். சாமான் செட்டெல்லாம் ஒர்ப்பிடி ஆத்துல எடுத்துண்டுட்டா !!
அதுக்கப்புறம் இவர்கிட்ட, "போய் அந்த கல்லுறல்ல எடுத்துண்டு வாங்கோ" ன்னு சொன்னேன்.
ஆனா, இவர் "இப்ப போய் நான் அதை கேட்டா, அந்த குழவியாலேயே என் மண்டையில அடிப்பா " ன்னுட்டார். ஏன்னா, அவாளுக்கு, இவர் மேலதான் அதிக கோவம் ! ஏன்னா, இவர்தான் பெரிய அண்ணாவா பொறுப்பா இல்லையாம் !!
ஆனா, இவர் "இப்ப போய் நான் அதை கேட்டா, அந்த குழவியாலேயே என் மண்டையில அடிப்பா " ன்னுட்டார். ஏன்னா, அவாளுக்கு, இவர் மேலதான் அதிக கோவம் ! ஏன்னா, இவர்தான் பெரிய அண்ணாவா பொறுப்பா இல்லையாம் !!
இன்னி வரைக்கும் அந்த கல்லுரலை மறக்க முடியல்லே !! (மச்சினன் ஒர்ப்பிடிய கூட மறந்துட்டேன் !!!)
திரும்பி வாங்கவும் முடியல்லே !!
திரும்பி வாங்கவும் முடியல்லே !!
No comments:
Post a Comment