Wednesday, June 12, 2019

நோம்பும் , மாமியாரும்.....




நோம்பு என்று சொல்லும்போது, எனக்கு அம்மாவை விட மாமியார் ஞாபகம் அதிகம் வருகிறது.

கல்யாணம் நிச்சயமாகியதும், மாமியாருக்கு நோம்பு உண்டு என்பது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

கல்யாணம் ஆன வருடம் விமரிசையாக நோம்பு எடுத்து வைத்தார். 
அம்மா எனக்கு சீராக வெள்ளி முகம், பித்தளை மணி, தூபக்கால், தீபக்கால் என்று பூஜை பாத்திரங்களும், வெற்றிலை பாக்கு பழம் என்று கொடுத்தாள். மாமியாருக்கு பரம திருப்தி.

மாமியாரும் காலை மடியாக எல்லாம் செய்து வைப்பார். பூனாவில் இருந்தபோது கூட, மாவு இடித்து தான் கொழக்கட்டை. அங்கே தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருப்போம். சுமார் 30 பேர் வெற்றிலை பாக்குக்கு வருவா. அது 1974 to 1980.
1966 to 1973 & 1980 to 1993 சென்னையில். 
இரண்டு நாத்தனார்களுக்கும் நோம்பு கிடையாது. எங்காத்துக்கு வந்துடுவா. நான் மெயின் சமையல் செய்தாலும், ரொம்ப ஹெல்ப் பண்ணுவா. ரொம்ப ஜாலியாக இருக்கும். 
மாமனார் , கலசம் கட்டி கொடுப்பார். வாழை கன்று மண்டபத்தில் கட்டி கொடுப்பார். சென்டர் டேபிள்  ஐ கவுத்துப்போட்டு, அலங்காரம். இரவு 11 மணியாகும் எல்லாம் முடிய . மடி புடவை எல்லாம் பக்கா வாக இருக்கணும் ! மாமியார் அதில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

நோம்பில் என் மாமியாரின் அம்மன் முகம் கலசத்திலும், கீழே என்னுதும் இருக்கும். பாட்டு பாடி, ஆரத்தி எடுத்து, அம்மன் அழைத்து... குழந்தைகளுக்கு பட்டு பாவாடை போட்டு... அன்று முழுவதும் விரதம் இருந்து, ஒரு வேளை இட்லி, வடை, கொழுக்கட்டை சாப்பிட்டு, இரவு பட்டினி இருந்து.......

நெய்வேதியத்துக்கு கொஞ்சம் பண்ணி விட்டு, பாக்கியை வைத்து விட்டால், மாமியார் அலுக்காமல் கொழக்கட்டை பண்ணி கொடுப்பார்.

சாயந்திரம் கட்டாயம் பாட்டு பாட வேண்டும். மறு நாள் புனர் பூஜை பண்ண வேண்டும். எவ்வளவு பூ....... அமர்க்களமாக இருக்கும்.

என் அம்மா இறந்த பிறகு, என் மாமியார், என் நாத்தனார்களுக்கு குடுப்பது போலவே, எனக்கும் வெத்திலை பாக்கில் பணம் வைத்து கொடுப்பார். (நான் feel பண்ணக்கூடாது என்று) அந்த நாள் என் மீது மிக ஆசையாக இருப்பார். அதை செயலில் காண்பிப்பார்.

என் மாமனார் இறந்ததும், நான் மட்டும் செய்வேன். மனசுக்கு கஷ்டமாக இருக்கும். But she had accepted it boldly.

the day she handed over her "mugam" to me, I was touched & moved.

1997 to 2009 என் பெண்ணுடன் சேர்ந்து செய்தேன். போன வருடம் கூட அம்மன் அலங்காரம் ரொம்ப பிரமாதம். சம்பந்தியை மூன்று வருடங்களாக சாப்பிட கூப்பிட்டேன்.

இப்போது என் அம்மாவை விட மாமியாரை நினைத்து கண் கலங்குகிறேன். எங்கிருந்தாலும் என்னை நாளை வாழ்த்துவார்.

No comments:

Post a Comment