Wednesday, June 12, 2019

கச்சேரிகள் .......


கச்சேரிகள் :
கச்சேரிகள் :

மின்ன நாள்ல எல்லாம் பாகவதர்கள் இசையை குருகுலத்தில் இருந்து கற்றார்கள்.
குரு, சீக்கிரத்தில் சிஷ்யனை மேடை ஏற்ற மாட்டார்.
ஆனால் தனக்கு பின்னால் உட்கார்ந்து பாட அனுமதிப்பார் - ஆனால் ஒருத்தர் ரெண்டு பேர்தான்
கச்சேரிக்கு நேரக் கட்டுப்பாடு அவ்வளவாக கிடையாது.
தஞ்சை சுற்றி நடக்கும் கச்சேரிகள் சுமார் எட்டு மணிக்குத்தான் ஆரம்பிக்கும்
நேரம் பற்றிய discipline கிடையாது - ஏற்பாடு செய்பவர்களும் கட்டுப்படுத்த மாட்டார்கள்.
அதனால் கச்சேரிகள் மடை திறந்த வெள்ளம்.
பாகவதாள், தன்னையும் மறந்து, ரசிகர்களையும் மறந்து, இசை என்ற உயரமான platform இல் இருந்து ஒன்றி பார்ப்பார்கள்

புகழை தேடுவதில்லை - தானாக வரும்

பணமும் நிறைய கொடுக்கப் படும். அப்போது பணத்திற்கு மதிப்பு அதிகம். 1000 கிடைத்தால் ரொம்ப ஒஸ்தி.
பக்க வாத்யா காராளும் நன்றாக கவனித்துக் கொள்ளப் பட்டார்கள்
கச்சேரி முடிய  நடு  இரவு தாண்டி விடும். விடிய விடிய பாடுவார்கள். அது ஆத்ம திருப்தி.

இசை விழாக்கள் மெட்ராசில் மட்டும் - மியூசிக் அகாடமி, தமிழிசைச் சங்கம் என்று சில சபாக்கள் தான். அவர்களும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கச்சேரிதான். அதனால் மூன்றரை மணி நேரம் நடக்கும். நேரடி ஒலி பரப்பை ரேடியோவில் கேட்போம். அந்த கைதட்டல் கூட கேட்டு ரசிப்போம்.
முன்னணி பாடகர்களுக்கு, சிலபேருக்கு, ஒரு சிறிய 'கர்வம்' இருக்கும். அந்த கர்வமும் மதிக்கப் பட்டது - அவர்களின் வித்தையினால்.
செம்பை ரொம்ப எல்லாருக்கும் உதவுவாராம். அவரைப் பற்றிய ஒரு lecture இல் கேட்டேன்.
எம்.எஸ்.எஸ். செய்யாத உதவிகளா ? 
செம்மங்குடி, ஆலத்தூர் சகோதரர்கள், திருவாடுதுறை ராஜரத்தினம்.... சொல்லிக் கொண்டே போகலாம். காலத்தால் அழியாத ம்யூசிக் . 

எங்கப்பாவுக்கு கர்நாடக சங்கீதம் ரொம்ப பிடிக்கும். ரேடியோவை போட்டுவிட்டு , ராகம் சொல்லும்போது, சத்தத்தை குறைத்து விட்டு, எங்களை கண்டுபிடிக்க சொல்லுவார். பாட்டும் சொல்லிக் கொண்டோம். தஞ்சாவூரில் வளர்ந்து பாட்டு தெரியவில்லை என்றால் எப்படி !!!

இப்போது......
நிறைய சபா; நிறைய பாடகர்கள்; நிறைய youngsters . இது நல்ல விஷயம் 

ஆனால்  15 வருஷம் கற்றுக்கொண்டு, சாதகம் பண்ணி பாடுவது போல், இந்த சிரியவர்களால் முடியுமா. ? ஆனால் பல சிறியவர்கள் பாடுகிறார்கள். 
அவசர அரங்கேற்றம். நடனத்திலும்.


நாரத கான சபாவில் .. நாலரை மணிக்கு கறாராக ஆரம்பிக்கும் கச்சேரி, ஏழு மணிக்கு முடிக்கப்பட வேண்டும். எக்ஸாம் டைமிங் மாதிரி. இது, கண்டிப்பாக அவர்கள் rendering இல் ஒரு pressure ஐ ஏற்றுகிறது. வித்தை கை வரப் பெற்றவர்கள் கூட இந்த டைம் ப்ரெஷர் ருக்கு ஆளாகிறார்கள்.
கரகரப்ரியாவும், மோகனமும், சங்கராபரணமும் அமுக்கப்படும்போது, வருத்தமாக இருக்கிறது; காதுக்கு போதவில்லை.

இப்போது  பணத்திற்கு மதிப்புகுறைய, விலை வாசி ஏற்றம் போல், பாடகாளுக்கும் கட்டுப்படி ஆவதில்லை. ஆகவே, நிறைய கச்சேரிகள், நிறைய சிஷ்யர்கள் என்று...

இப்படி அமுக்கினால், சஞ்சாரங்களை குறைத்தால், பாடகாளின் learning உம், சாதகமும் குறைய வாய்ப்பிருப்பதால், இனி வரும் காலங்களில், அவர்களால் நான்கு மணி நேரம் சமாளிக்க முடியுமா என்று தெரிய வில்லை. ஒரு ஆதங்கம் தான்.
இதில், ஜன ரஞ்சகம் என்று gimmicks  வேறு !!!

அவர்களுக்கு இன்னும் நேரமும் , freedom மும் குடுக்க , தரம் உயர யாராவது ஏதாவது செய்தால் தேவலை.

No comments:

Post a Comment