Wednesday, June 12, 2019

உலகமே ஒரு நாடக மேடை.......

"உலகமே ஒரு நாடக மேடை; அதில் நாம் எல்லோரும் நடிகர்கள்" என்று ஷேக்ஸ்பியர் சொன்னாலும் சொன்னார்...
எல்லாரும் நடிக்க ஆரம்பிச்சிட்டானாக்...
நெஜம்மாதான்... என் பழைய students களை பார்க்கும்போது, அவர்கள், "நமஸ்தே மேடம்" ன்னு காலை தொடும்போது, நான் பெருமையாக பார்ப்பேன்.
ஆனால், அவர்களும் நடிக்கிறாங்க என்று தெரிய வரும்போது...
"அட முட்டாளே, (என்னையே திட்டிக்கிறேன்), நீ சில நல்ல பாடங்களை கற்றுத்தராமல் விட்டு விட்டாயே. உன் Maths , Physics , கம்ப்யூட்டர் science எல்லாத்தையும் உடைப்பிலே போடு "
"பகவானே கேளடா, பச்சோந்தி உலகிலே
பணமே தான் ஜீவா நாடி"
"பணம் பணம் பணம் பணம் பணம் பந்தியிலே...
குணம் குணம்... குணம் குணம் குப்பையிலே"
"காசேதான் கடவுளடா, அந்த கடவுளுக்கும்
அந்த கடவுளுக்கும் அது தெரியுமாடா "
"ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு மேல கண் வையடா தாண்டவக்கோனே..."
இதை எல்லாம் யோசித்து விட்டு, நேற்று ஒரு old ஸ்டுடென்ட் ஐ மீட் பண்ணும் சந்தர்ப்பம். Jain
He was narrating how his g.father, lived at home; but as sanyaasi for 60 yrs. under a Guru & due to constant meditation could even sense that his end is nearing; with instructions to the family not to disturb him, sat at a place in meditation, with closed eyes... 100% fasting - not even water... 5th day... he died.
His father, also has a Guru, not always with Guru, but following his principle etc. etc.
I was awe struck with all the narration and really impressed to the extent why not meet the same Guru & take Sanyaasam ??
(aanaa aagaliye. athaan kaalangaatthaale FB !!)
Now this boy also, doing very well in his field , talks so much spiritually. amazing... so much knowledge ?
[இவன் என்கிட்டே 8,9,10 கிளாஸ் ல physics படிச்சான்... படிச்சான்னு சொல்றது தப்பு. கிளாஸ் ல இருந்தான்; பாடாய் படுத்தினான். மற்றப் படி நல்ல பையன் .
அவன் 10 th முடித்து போகும்போது, என்கிட்டே சொல்லிண்டு போக வந்தான். நான் "அப்பாடா, காமர்ஸ் க்ரூப் சேரப்போற ... என்ன இனிமே தொல்லை பண்ண மாட்டே " என்று வாழ்த்தி அனுப்பினேன்.
ஸ்கூல் திறந்தது. கிளாஸ் 11 க்குள் நுழைகிறேன்; முதல் டெஸ்கில் அவனே அவனே !! (Computer Sc . க்கு )
ஷாக் ஆயிட்டேன். அவன் சிரித்துக் கொண்டே "மேடம், நான் வந்துட்டேனே; உங்களாலே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாதே" ன்னு சிரிச்சான்.!!!
இன்னும் இரண்டு வருஷம்... நன்றாகவே படித்தான்... இது flash back
இவன் இப்போது, ஜம்மென்று, தன் chosen career இல், நன்றாக முன்னுக்கு வந்து விட்டான்]
அவன் நேற்று பேசிய விஷயங்கள், என்னை பிரமிக்க வைத்தது...
ஆனால் "இவனும் நடிக்கிறானோ? பணம் என்று வந்தால் சுய புத்தியை காமிப்பானோ" என்று இரவு தோன்றியது.
ச்சே ச்சே.. இருக்காது. இப்படியே நல்லவனாகத்தான் இருப்பான் என்று மனம் இப்போது மனம் சொல்கிறது.!!

No comments:

Post a Comment