Wednesday, June 12, 2019

தமிழ் சினிமா ......

தமிழ் சினிமா ஆரம்பித்த புதிதில், அதில் பாட்டு சேர்க்க வேண்டும் என்று யாருக்கு முதலில் ஐடியா தோன்றியது என்று தெரிய வில்லை.
அநேகமாக புராணக் கதைகள் தான். 40 பாட்டுக்களாவது இருக்கும் படத்தில்.
கதாநாயகி, கதாநாயகன் தான் பாடுவார்கள் ! (இன்னிவரைக்கும் அப்படித்தான்)
படங்கள் பாட்டுக்காகவே ஓடும். எல்லாம் கர்நாடக ராகங்கள். கச்சேரி மாதிரி, நிறைய சங்கதிகள், ஆலாபனை, ஸ்வரம் எல்லாம் சேர்த்து.
P.U.Chinnappa, M.K.T., S.G.Kittappa இவர்கள் குரல் ரொம்ப பிரபலம். G.N.B., M.S.S., N.C.V. கூட பாடி நடித்திருக்கிறார்கள்.
K.B.S. இன் "ஒளவையாரை" மறக்க முடியுமா?
எல்லோரும் செந்தமிழில், மெதுவாக பேசுவார்கள். "நாதா" , "பிரபோ" , "ப்ரியசகி" இதெல்லாம் கணவன் மனைவி அழைத்துக்கொள்ளும் வார்த்தைகள்.
பெண் என்பவள் அடங்கித்தான் இருப்பாள்.
சமூக கதைகள் எழுத ஆரம்பித்தார்கள். "பாவம் செய்பவன் அதன் பலனை அனுபவித்தே ஆகணும்" என்பது தான் கதைகளின் கருவாக இருக்கும்.
அப்போதெல்லாம் டப்பிங் தெரியாது. வசனம், பாட்டு எல்லாம் அப்படியே நேரிடையாக படமாக்கப் படும்.
ஒரு லக்ஷம் செலவழித்து படமெடுத்தால் ரொம்ப காஸ்ட்லி production .
அப்போ சினிமா ஸ்டூடியோ தேவையான ஒன்று என்பதால், பணமிருப்பவர்கள் சொந்த ஸ்டூடியோ கட்டினார்கள். அப்படி கட்டியவை தான், Gemini, A.V.M. , Bharani, Selem Modern Theater etc.
வடபழனியில் ஸ்டூடியோ அதிகம் என்பதால், கோடம்பாக்கம் ஏரியா , சினிமா நடிகர்கள் குடியிருக்கும் பகுதியாக ஆயிற்று.
நின்றால், உட்கார்ந்தால் பாடல். மந்திரி குமாரியில் "உலவும் தென்றல் காற்றினிலே" என்று ஓடத்தில் பாடிவிட்டு, உடனே, மலை ஏறும்போது "வாராய், நீ வாராய்..." என்ற இரண்டு பாடல்கள்.
பாடல்களின் நடுவில் வசனம் வருவதும் சகஜம்.
"கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன்... " .."இல்லை, கண்ணே சரிதானா என்று கேட்டேன்"
"அதிகாரமாக கேட்கக்கூடாது. குழந்தை கேக்குமே, 'அம்மா, லட்டு தா, மிட்டாய் தா ' என்று, அப்படி. எங்கே பாடு"
"பேபி சரோஜா, நான் 'வார்' ருக்கு போறேன்; நீ வருத்தப்படாதே "
"சுவாமி... கண்ணே"
இப்படி !
1950 க்கு மேல் கொஞ்சம் புரட்சிகரமான படங்கள் வர ஆரம்பித்தன. என்ன புரட்சி. பெண் கொஞ்சம் தைர்ய சாலியாக காண்பிக்கப் பட்டாள்.
"குதிரை ஏறி சவாரி செய்வாள்; ஆற்றிலே விழுந்து நீச்சலடிப்பாள் வைஜயந்தி மாலா" என்று, பெண் நீச்சலை, விளம்பரமாகவே செய்தது ஏ. வி. எம். தன் "பெண்" படத்துக்காக.

சுதந்திரத்துக்கு முன், சில தேச பக்தி படங்கள் வந்தன. சில தடைகளும் செய்யப்பட்டன.
Maathru boomi, nam naadu, naam iruvar… etc.
1945 க்கு மேல், ரஞ்சன், எம்.கே.ராதா, சஹஸ்ரநாமம் இவர்கள் அதிகம் பேசப்பட்டவர்கள். நாகையா, சஹஸ்ரநாமம் இவர்கள், அப்பா, அண்ணா ரோலுக்கு மாறி, கொஞ்சம் நிலைத்து இருந்தார்கள்.
அப்போ மேக் அப் ரொம்ப கிடையாது. பெண்கள், ரவிக்கை , குட்டை கையோடு, பஃப் வைத்திருக்கும். புடவை கட்டும், கண்டாங்கி சேலை, காட்டன் புடவை, நீள தலைப்பு, இழுத்து சொருகப்பட்டு...
ஆண்கள், வேஷ்டி - ரஞ்சன் போன்றவர்கள் pants போடுவார்கள் - நெற்றியில் விபூதி, குங்குமம் - ஜாதி அடையாளங்களுடன்...
அந்த தமிழ் படங்களை இப்போ பார்த்தால், இந்தக் கால தமிழ் தெரிந்த குழந்தைகளுக்குக் கூட புரியாது ! (ஏன்னா, அது நல்ல தமிழ் !)
கதா நாயகி களுக்கு நீள தலை முடி கண்டிப்பாக உண்டு (சவுரியாகத்தான் இருக்கும் - கண்ணாம்பா தவிர). நீளமாக பின்னி, ஒரு பக்கமாக, பின்னலை முன்னால் போட்டுக்கொண்டால் கதா நாயகி ரொம்ப fashion . அதே சோகமான, கோபமான சீனில், சட்டென்று எப்படி பின்னல் அவிழும் என்று தெரியாது.. ஆனால் தலை முடி முதுகு நிறைய பறந்து, விரிந்து கிடக்கும்.
கதைப்படி கல்யாணம் ஆன, குழந்தை இருக்கிற பெண்கள் - பிச்சோடா, அதை சுற்றி மல்லிகைப் பூ !
1950 க்கு மேல் கொஞ்சம் புரட்சிகரமான படங்கள் வர ஆரம்பித்தன. என்ன புரட்சி. பெண் கொஞ்சம் தைர்ய சாலியாக காண்பிக்கப் பட்டாள்.
"குதிரை ஏறி சவாரி செய்வாள்; ஆற்றிலே விழுந்து நீச்சலடிப்பாள் வைஜயந்தி மாலா" என்று, பெண் நீச்சலை, விளம்பரமாகவே செய்தது ஏ. வி. எம். தன் "பெண்" படத்துக்காக.
ரஞ்சனைப் போல் கத்தி சண்டை போட இன்னொருவர் பிறக்க வேண்டும். அவ்வளவு லாவகம், ஸ்டைல். அந்த costume மே அவ்வளவு நன்னா இருக்கும்.
அவருக்குப் பிறகு எம்.ஜி .ஆர் ஐ சொல்லலாம்.
நான் பார்த்த முதல் இரட்டையர் படம் "அப்போர்வ சகோதரர்கள்" எம்.கே. ராதா இரட்டை வேஷத்தில். அப்போ காமெரா technique எல்லாம் ரொம்ப கிடையாது. எப்படி எடுத்திருப்பார்கள் என்று ஒரே ஆச்சரியமாக இருக்கும். லென்சை அரை பாகம் மூடி, ஒரு ராதாவை எடுத்து விட்டு, மற்றொரு பக்கம் நிக்க வைத்து எடுப்பார்கள் என்று எங்கண்ணா சொன்னதை நம்புகிறேன் !
அந்த படம் போடு போடென்று போட்டது.
நடனம் என்றால், classical தான். குமாரி கமலா, வைஜயந்தி, லலிதா, பத்மினி, ராகினி, சாய்-சுப்புலட்சுமி இப்படி. அவர்களுக்கு நடிப்பு கிடையாது. வேறு டான்ஸ் மட்டுமே. அப்புறமாக கமலா, லலிதா & சிஸ்டர்ஸ் , வைஜயந்தி நடிக்கவும் ஆரம்பித்தார்கள்.
நடனம் தெரியாத நடிகைகள், வெறும் கையை பாட்டின் வரிகளுக்கேற்ப அசைப்பார்கள். கண்ணை சுயட்டுவார்கள் அந்த வகையில், டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி பரவா இல்லை.
"செந்தாமரை மலரினை நீ கண்டதுண்டோடி.சிறிதேனும் என் முகத்திற்கு அது பொருத்தம் உண்டோடி" என்றால், தாமரை முத்திரை, முகம் என்றால், தன முகத்தை சுற்றி ஒரு வட்டம், கண்டதுண்டோ என்றால், இரு விரல்களால் கண்களுக்கிட்ட அபிநயம் - நாம கூட ஈசியா ஆடலாம்.
பானுமதி சொந்த குரலில் பாடினார். அந்த குரல் ஒரு தனித்தன்மை. ஈசியா கண்டு பிடிக்கலாம்.
அப்போதே பாட்டு டப்பிங் ஆரம்பித்து விட்டது.

No comments:

Post a Comment