"ஆண்டு" என்ற சொல் ஆண்டவன் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. ஆளுமையுடனும், அதிகாரத்துடனும், வேகத்துடனும் நெருங்குபவன் ஆண்டவன்.
ஆண்டு என்பது ஆண்டவனின் "ஆட்சியையும்", புத்தாண்டு என்பது "புதிய ஆட்சியையும்" குறிக்கிறது.
பண்டய தமிழகத்தில் அறுவகை சமயங்கள் இருந்தன. விவசாயிகள் "சௌர்யம்" - அதாவது சூரியனை வழி படுபவர்கள்- என்ற சமயத்தில் இருந்தனர்.
குறிப்பாக, "பாலை", "குறிஞ்சி"
பண்டய தமிழகத்தில் அறுவகை சமயங்கள் இருந்தன. விவசாயிகள் "சௌர்யம்" - அதாவது சூரியனை வழி படுபவர்கள்- என்ற சமயத்தில் இருந்தனர்.
குறிப்பாக, "பாலை", "குறிஞ்சி"
(தமிழகம் அப்போது இடத்தை பொறுத்து பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம் என்று பிரிக்கப்பட்டிருந்தது)
தமிழர்கள் சூரியனை தொழுதவர்கள்.
இவர்கள் உழவுக்காக மருதம், முல்லை பகுதிகளுக்கு குடி பெயரும் மாதம் "சித்திரை"
இவர்கள் உழவுக்காக மருதம், முல்லை பகுதிகளுக்கு குடி பெயரும் மாதம் "சித்திரை"
(1 ) சூரியன் மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு பெயரும் முதல் நாள் - முக்கியமான, இறை அருளை நாடும் நாள் "சித்திரை" (முதல் நாள்)
மேஷ ராசியில் சூரியன் நுழையும்போது, ஆதவனின் சக்தி அதிகம்.
"மாசற்றவன் மாதவன் - ஆற்றல் மிக்கவன் ஆதவன்"
மேஷ ராசியில் சூரியன் நுழையும்போது, ஆதவனின் சக்தி அதிகம்.
"மாசற்றவன் மாதவன் - ஆற்றல் மிக்கவன் ஆதவன்"
(2 ) வைகாசியில் "வைகறையில்" எழுந்து, நிலத்தை சீர் படுத்துவார்கள்.
(3 ) ஆணி முத்து, அதாவது நல்ல விதைகளை வாங்கி வருவார்கள். (ஆணி என்பது ஆனி ஆயிற்று)
(4 ) "ஆடி பட்டம் தேடி விதை" - சேகரித்த விதைகளை விதைப்பார்கள்
(5 ) ஆவணி - உழவுத் துவங்கும்.
(6 ) "புரட்டாசி பொன்னுருக காயும்" - விதைகளுக்கு தேவையான ஒளி கிட்டும்.
(7 ) "ஐப்பசி அடை மழை பெய்யும்" - மாதம் மும்மாரி பெய்யும். அதாவது மாதத்தில் ஒரு நாள் முழுதும் பெய்ய வேண்டும், ஒன்பது நாள் காய வேண்டும். இது மாதிரி மூன்று முறை.
(8 ) கார்த்திகையில், மழை அதிகமாக பெய்ய வேண்டும். அப்போது களைகளை நீக்கி, சொக்கப்பானை கொளுத்துவார்கள் (இது ஒரு திரு விழா)
(9 ) மார்கழி - பயிர் விளைந்து மார்கழி பனியாய் விரிகிறது... மனித மனமும் ஆண்டவனை நினைத்து விரிகிறது..
(10 ) தை - அறுவடை மாதம்.
"ஆடி" மாதம் தொடங்கிய உழவு, ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்த பிறகு "தை" மாதம் அறுவடையோடு முடிகிறது.
"ஆடி" மாதம் தொடங்கிய உழவு, ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்த பிறகு "தை" மாதம் அறுவடையோடு முடிகிறது.
கிடைத்த நெல்லை சேகரித்து, தமிழர்கள் தங்கள் இருப்பிடமான "பாலை" , "குறிஞ்சிக்கு" திரும்புவார்கள்.
முதல் நெல்லை, நன்றிக்கடனாக சூரியனுக்கு பொங்கலிடுவார்கள்
"மாசியும்" , "பங்குனியும்" .. தங்கள் குடும்பத்துடன் கழித்து விட்டு, மீண்டும் சித்திரை முதல் தேதியில் உழவுக்காக கிளம்புவார்கள்.
சித்திரையில் துவங்கும் இந்த சுழற்சி, இயற்கை விதித்தது.
No comments:
Post a Comment