Wednesday, June 12, 2019

கண்ணதாசன்.......



"எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே..." என்று ஒரு பாடல்.. கண்ணதாசன், ஜெமினி கணேசன் , டி.எம்.எஸ்.
பல்லவியில்...
"தேனேந்தும் மலராகி, வானேந்தும் நிலவாகி......"
இங்கே முதல் பார்ட் டில் யேந்தப்படுவது முதலில்;ஏந்துவது பின்னால்...
அடுத்த பார்ட்டில்.. ஏந்துவது முதலில்; யேந்தப்படுவது பின்னால்..
இந்த முரண் பாடு ஒரு அழகு...
"செங்கதிர் சுடர் போல என்கரம் நீண்டிருந்தால் அந்த சிங்காரச் சிலை தன்னை இங்கிருந்தே தொடுவேன்.."
என்ன ஒரு கற்பனை...
இதை விட சூப்பர் சரணம் ...
" மனம் விரும்பும் காட்சியை கனவினில் கண்டாலும் மையல் தீருமா...
நுரை தின்று பசியாறுமா....
மாமலரின் நிழல் தான் மணம் வீசுமா - முத்து
மாலையின் ஒளி  தான் விலை போகுமா...
நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா...."
(எப்படி இப்படி கண்ணதாசனால்.. கவி அரசா - சும்மாவா)
சஹானா ராகத்தில் - மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
----------------------
மற்றும் ஒன்று... டான்ஸ் பாட்டு...அதுவும் சஹானா...
அனுபல்லவி..
"விழி வாசல் தனிக் கடந்து வழி முழுதும் தெரிந்தவர் போல்
குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே..."
சரணத்தில்.. தூது போக யாருமில்லை என்பதற்கான காரணங்கள்..
"நிலவு தன்னை பழித்தொரு நாள் என் முகத்தை அவர் புகழ்ந்தார்
நிலவும் என்னை வெறுத்ததம்மா வழியுமில்லையே...
மலரை மிஞ்சும் அழகி என்று மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால்
மலரும் கோபம் கொண்டதம்மா துணையும் இல்லையே...
தென்றலைப்போல் ஆடி வரும் திரு மகளே என்றழைத்தார்
தென்றலுக்கும் பகயானேன் தூதுமில்லையே...."
கண்ணதாசன் - காளிதாசர், , கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர் .. என்று..
அவர்களின் இலக்கியத்திலிருந்து நிறைய வரிகள் கையாண்டிருக்கிறார்.. எனக்கு அது பிடிக்கும்..
'கட முட' பாஷை விட்டு எளிதாக...
"இடது தோளும் கண்ணும் துடிப்பது..." - ரகுவம்சம்
"அண்ணலும் நோக்கினாள்-அவளும் நோக்கினாள்.." "தோள் கண்டேன் தோளே கண்டேன்..."-கம்பன்
சிலப்பதிகாரத்திலிருந்து.. கண்ணகி, மாதவி அழகின் வர்ணனைகள், கோவலன் கோபித்துக்கொள்ளும் பாட்டு..." இப்படி நிறைய..அந்த வரிகளை, சுலபமாக, அழகு குறையாமல்.... கையாண்டிருப்பார்.....
எவ்வளவு அனுபவித்துப் படித்திருப்பார்?
முடிந்தால், கிடைத்தால் ரகு வம்சம், மேக தூதம், சாகுந்தலம் , மாளவிகா-அக்னிமித்ரம்... எல்லாம் ஒரு முறையாவது படித்துப் பாருங்கள்..
சம்ஸ்க்ருதத்தில் முடியாது... தமிழ் அர்த்தத்துடன்... ஏன் நாம் அந்த மொழியை அழித்தோம் ??
இன்னும் நிறைய பாடல்கள்..
 இந்த வரிகளை, நேரம் இருந்தால் அனுபவித்து படித்து, அசை போடுங்கள்...

2 comments:

  1. எண்ணமெல்லாம் பாடல் உவமைக்கவிஞர் சுரதா அவர்களுடையது.

    ReplyDelete
  2. எண்ணமெல்லாம் பாடல் உவமைக்கவிஞர் சுரதா அவர்களுடையது.

    ReplyDelete