Wednesday, June 12, 2019

சுகி. சிவம் சொற்பொழிவில் கேட்டது.......

கம்பன் தனது அரசியல் கோட்பாடுகளை வெளிப்படையாகவும், சில இடங்களில் மறைமுகமாகவும் புலப் படுத்துகிறார். இன்றும் அவைகள் பொருந்தும். "அரசியல் படலம் " என்று இரண்டு படலங்கள் உள்ளன்.
தசரதன் ஆட்சி, ஏறத்தாழ, மக்கள் நலன் விரும்பும் குடியாட்சி, உன்னதமான ஜனநாயக ஆட்சி. ஆனால். அதை அவரே மீறிய கட்டங்களும் உண்டு. மக்களின் நலம் பற்றியே சிந்திப்பவர் என்ற நிலை, ராமன் முடிசூட வேண்டும் என்ற மக்களின் கருத்தை, கைகேயி இடம் தான் சத்ய சந்தன் என்று காண்பிப்பதால், மக்கள் அவை புறக்கணித்து, சர்வாதிகாரத் தனமாக முடிவெடுக்கிறார்.
சிறந்த அரசியலை கம்பன் தெரிவித்த விதத்தை வேறு மேற் கோள்களில் பார்ப்போம்.
சுக்ரீவனுக்கு ராமன் சொல்லும் அரசியல் நுட்பமானது.
ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் ஆபத்தான கால கட்டம் என்பது அன்றும் இன்றும் என்றும் உண்மை. மக்களில் ஒரு வகையினர் ஆளும் கட்சியையும், மறு தரப்பினர் எதிர்ப்பதும், ஒரு வகை தரப்பினர் நாடு நிலையாக இருப்பதும் என்றும் நடக்கும். எதிர்ப்போர் எதிர்ப்பில் வருந்தக் கூடாது. நடு நிலயாளரை, தன் பக்கம் இழுத்திடல் வேண்டும்.
பலவீனமானவரை பழிக்கக் கூடாது. கூநியுடனான, விளையாட்டு வினையாயிற்று.
அரசுத்தலைவர்கள் காம விளையாட்டு ஆபத்தானது... கைகேயியின் மீது தசரதன் வைத்தது, வாலியின் முறையற்ற ஆசை... இவைகள் உதாரணங்கள்
காந்தியடிகள்., அரசுத்தலைமை இடம் அதிக நேர்மையை எதிர்பார்ர்துத்தான் 'ராம ராஜ்ஜியம்' என்றார். கம்பனும் அதையே விரும்புகிறார்.
வாலி, சுக்ரீவன் மனைவியை தன்னிடம் வைத்திருப்பதை தவறு என்று ராமன் நினைக்கிறார். அது அவன் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒதுக்க முடியவில்லை.
சுக்ரீவனிடம் "தலைமையோடு நின் தாரமும் உனக்கின்று தருவேன்" என்று அறிவிக்கிறார். தாரம் தருவது ஞாயம். தலைமையை எப்படி பறிக்கலாம் வாலியிடமிருந்து? தனி வாழ்க்கையில் ஒழுக்கமற்றவன், போது வாழ்விலும் ஒழுக்கம் அற்றவனாகவே இருப்பான் என்பது கம்பரின் வாதம்.
தற்காலத்திற்கும் பொருந்தும் உண்மை. மேலே இருப்பவர்கள் தவறு செய்யவில்லை என்றால், (எந்த விதத்திலும்-லஞ்சம் உட்பட) , அவர் கீழே இருப்பவனும் தவறு செய்ய மாட்டான்.
சுகி. சிவம் சொற்பொழிவில் கேட்டது.

No comments:

Post a Comment