பழைய நாள் ல ரேடியோவில Sunday afternoon நாடகம் உண்டு. ஒரு ரேடியோ வை சுத்தி whole family உக்காந்து கேப்போம். நன்னா இருக்கும்.
கல்யாணம் ஆனதும் பெரிய சந்தோஷம் , இவர் கிட்ட இருந்த Mylapore Fine Arts membership தான். 2 டிக்கெட். அதை தவிர வாணி மஹாலில், இரண்டு - வீட்டில் போட்டி இல்லாமல் இருக்க.
67 களில் பாலச்சந்தர், சோ, மேஜர் சுந்தரராஜன், சேஷாத்ரி மனோகர் ... இவர்கள் நாடகமெல்லாம் ரொம்ப நன்னா இருக்கும். ஆனால் முக்கால் வாசி சீரியஸ். சோ து மட்டும் political satire. ஞான ஒளி, நீர்க்குமிழி, சோ வின் மனம் ஒரு குரங்கு, இன்னும் பல படமாக்கப் பட்டன. மெரினாவின் கதைகள், பூரணம் விஸ்வநாதன், YGP, எல்லாம் சூப்பரா இருக்கும். சோ வின் "மனம் ஒரு குரங்கு", "மொஹமத் பின் துக்ளக்" எல்லாம் படமாகி இருக்கு.
ஸ்கூட்டரில் நுங்கம் பாக்கத்திலிருந்து , சனிக்கிழமை மாலை கிளம்பி, drive in இல் டிபன் சாப்பிட்டு, வாசலில் அடர்த்தியாக கட்டி விற்கும் மல்லிகைப்பூ வாங்கி தலை நிறைய வெச்சுண்டு... (சந்தோஷமான நாட்கள்).
ஒரு YGP நாடகத்தில் , (YGM சின்ன பையன்), YGP , கூப்பிட்டு, "என் பையன் ரொம்ப நன்னா சஹஸ்ர நாமம் சொல்லுவான்" என்று வந்தவரிடம் அலட்டி விட்டு, YGM ஐ "கண்ணா, எங்கே, சஹஸ்ர சொல்லு" ம்பார். YGM கணீரென்று, "சஹஸ்ர நாமம்" என்று சொல்லுவான். மெரீனாவின் தனிக்குடித்தனம் எல்லாம் இன்றைக்கும் பார்த்து சிரிக்கலாம்.
அப்புறம் வந்தவர்கள், மௌலி, எஸ்.வீ.சேகர், பிறகு கிரேசி மோகன், காத்தாடி ... எல்லாம் காமெடி. டெல்லி கணேஷும் , T.V.Varadarajanum (வித் மெசேஜ்)
Mylapore Fine arts ராசி என்று எல்லா நாடகமும் அங்கே அரங்கேறும்.
80 மேல் நாரத கான சபா. ... இன்று வரை.
ஆனால்... சுமார் 10 வருஷமாக..
எல்லா ட்ராமாவுக்கும் போவேன். டிராமா ஆரம்பிக்கும் வரை ப்ரெஷ் ஆ இருப்பேன். அந்த ஹாலின் comfort & AC சேந்து, டிராமா ஆரம்பித்த 5 நிமிஷத்தில் தூங்கி போயிடுவேன். ஐவரும் எழுப்பி எழுப்பி பாத்து, இதற்குமேல் இவளை சீண்டினால். கொத்தி விடுவாள் என்று, விட்டு விட்டார்.
ஆனால், நடுவில் இன்டர்வெல் மணி அடித்ததும், போய் chips வாங்கிண்டு வந்து கொடுப்பார். அப்போது அதுவரை (!) நடந்த கதையை கேட்டுப்பேன்.
சிப்ஸ் ஒவ்வொண்ணா, சத்தமில்லாமல் சாப்பிடுவேன். பாக்கெட் காலி ஆனதும், என்னை அறியாமல் தூங்கி விடுவேன்.

டிராமா முடிந்ததும், சத்தத்தில் முழித்து, "என்ன ஆச்சு" ன்னு பாக்கி கதையை கேட்டால், இவர் கடுப்பை அடக்கிக் கொண்டு, சொல்லுவார். இதுவும் இன்று வரை தொடர்கிறது.
அதனால் தானோ என்னமோ, இப்போதெல்லாம் டிராமா, இடைவெளி இல்லாமல் 2 மணி நேரத்தில் முடித்து விடுகிறார்கள் !!
S.V.Shekhar, Kaatthaadi, Crazy Mohan, இவங்க டிராமாவில் எல்லாம் தூங்க முடியாமல் சிரிப்புத் தோரணங்கள் !!
அதிலும் சேகர் டிராமாவில், அன்றைய நிகழ்ச்சிகள், அரசியல் எல்லாம் நுழைத்து on the spot comment அடிக்க, கூட நடிப்பவர்கள் சட்டென்று re-act பண்ண முடியாமல், அவர்களும் சேர்ந்து சிரிப்பார்கள். அதை பார்த்தே நமக்கும் சிரிப்பு வரும்.
T.V. ல கூட, பொதிகை மட்டும் இருக்கும்போது, every Tuesday 7-8 PM டிராமா உண்டு. என் பெண் ஸ்கூலில் படித்தாலும், அதை என்னுடன் சேர்ந்து பார்க்க அனுமதி உண்டு !!
No comments:
Post a Comment