Friday, June 26, 2020

கம்ப ராமாயணத்தில்.........

கம்ப ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு செய்யுள்
-----------------------------------------
எண் இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல்
மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால்
என செவியில் புகுதலோடும்
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த
ஆர் உயிர் நின்று ஊசல் ஆட
'கண் இலான் பெற்று இழந்தான்' என உழந்தான்
கடும் துயரம் -கால வேலான்
-------------------------------------------
விசுவாமித்திரர் ராமரை காட்டுக்கு வேள்வி காக்க அழைக்கும்போது....
அவர் சொற்கள் "வேல் பாய்ந்தது போல்" என்று மட்டும் சொல்லாமல்,
"ஏற்கெனவே இருக்கும் புண்ணில்"
"எரிகின்ற வேல்" ..... வேல் எறிந்தாலே துன்பம்.. அதில் எரிகின்ற வேல்... ஏற்கெனவே புண் இருக்கும் இடம்...
இந்த வார்த்தைகளில், துன்பத்தின் அளவு மூன்று மடங்காக உணரப்படுகிறது !!
------------------------------------------
'கண் இலான் பெற்று இழந்தான்' ....
கண் இழந்தாலே துயரம்....
அதில்... பிறவிக்குருடன், கண் பார்வை பெற்று, அதை இழக்கும்போது அதன் துயரம் மிகப்பெரியது...
(தசரதரும் பிள்ளை இல்லாமல், பிறகு பெற்று, இப்போது முனிவருடன் அனுப்பும் துயரம் பல மடங்காக இந்த உதாரணத்தில் சொல்லப்படுகிறது !!!
-------------------------------------------

No comments:

Post a Comment