Saturday, June 27, 2020

வத்தக் குழம்பு சாதம்......

வத்தக் குழம்பு சாதம்......
(நாரத கான சபாவில் , கச்சேரி நடுவில் , ஞானாம்பிக்கா கேன்டீனில் சாப்பிட்டு, அவர்களையே பக்குவம் கேட்டு, வீட்டில் செய்தது.)
பச்சை அரிசியை மிக்சியில் போட்டு - ஒரு டிர்ர்ர்ர்ர்ர்ர் .... ஒன்றிரண்டாக உடையும்.
கொஞ்சம் அதிகம் தண்ணீர் வைத்து குக்கரில் குழைவு சாதமாக வடிக்க வேண்டும்.
வத்தக் குழம்புக்கு , நல்லெண்ணெய் கொஞ்சம் தாராளமாக வைத்து , நிறைய மணத்தக்காளி வற்றல் தாளித்து, எப்போதும் போல் வத்தக் குழம்பு செய்ய வேண்டும். (மணத்தக்காளி வற்றல் மட்டும்தான் போட வேண்டும் )
சாதத்தை , பாத்திரத்திலிருந்து குக்கருக்கு டைரெக்ட்டாக மாற்றி, கரண்டியால் நன்றாக மசிக்க வேண்டும்.
வத்தக் குழம்பை அதனுடன் சேர்க்க வேண்டும். நன்றாக கிளற வேண்டும். gas சிம்மில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.
சாதம் தளர இருக்க வேண்டும். அப்புறம் கெட்டியாகிவிடும்.
நெய் தேவையான அளவு, அல்லது சாப்பிடும்போது, தேவையானவர்களுக்கு மட்டும் சேர்க்கலாம்.
செம டேஸ்ட்டாக இருக்கும்.

சாப்பிட கெஸ்ட் வரும்போது, இதுவும், தயிர் சாதமும் செய்து அசத்தலாம்.
-------------------------------------------------------------
தயிர் சாதத்துக்கும் , இதே போல் , அரிசியை உடைத்துக் கொண்டு, பாதி தண்ணீரும், பாதி பாலும் சேர்த்து , சாதம் ஆனதும் , குக்கருக்கு டைரெக்ட்டாக மாற்றி, நன்றாக மசித்து, மேலும் பால் சேர்த்து, கிளறி, கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு , உலர்ந்த திராட்சை - நெய்யில் தாளித்து, கொஞ்சமாக தயிர் சேர்த்து, பிசைய வேண்டும்.
மேற் கொண்டு, மூடுக்கு தகுந்தாற்போல், மாதுளம் பழம், துருவிய காரட் , பொடியாக நறுக்கிய வெள்ளரி பிஞ்சு, மாங்காய்.... இவற்றில் ஏதாவது கலக்கலாம்.
------------------------------------------------------------------------

No comments:

Post a Comment