Friday, June 5, 2020

நினைவுகள் - 4



முதல் T.V.  
முதல் முதல் T.V. வந்தது 1974 ல் . அப்போ நாங்க பூனாவில இருந்தோம்... 
T.V.   ஐ பார்த்து ஒரே ஆச்சரியம் ! Black & White T.V. தான் .

அதை வாங்கி, அதை வைக்க ஒரு டேபிள் வாங்கி... 
கடைக்காரனே வீட்டுக்கு எடுத்து வந்து, கனெக்ஷன் குடுத்து அட்ஜஸ்ட் பண்ணினான்... 
அப்போ டி.வி. க்கு ஒரு Antenna உண்டு.... நீள Aluminium tube   Zig Zag ஆக வளைத்து, ஒரு நீள கொம்பு மேல் பொருத்தி, மொட்டை மாடியில் fix பண்ணி,   அதன் cable, ஜன்னல் வழியாக கொண்டு வரப்பட்டு, டி.வி. யில் பொருத்தப்படும்...

இது ஒரு பெரிய process... இந்த Antenna வோட direction ,   disturb ஆனா, படம் சரியா தெரியாது... 
இது அடிக்கடி நடக்கும் !! 
உடனே SK மேலே ஏறி, அதை கொஞ்சம் கொஞ்சமா 
திருப்பி, ரைட்டா , ரைட்டா (பாண்டி விளையாட்டு மாதிரி) கேட்டுண்டே இருப்பார்.... நான் கீழே இருந்து..."நோ..நோ.. ரைட், ரைட்" என்று குரல் கொடுத்துண்டே இருப்பேன்... 
இந்த விளையாட்டு அடிக்கடி நடக்கும்.

டி.வி. வந்த புதிதில் ஒரே ஒரு Channel தான்... தூரதர்ஷன். ... 
Programs only from 6 pm to 10 pm....அது நாங்கள் டி.வி. முன்  freeze ஆகும் நேரம்... Commercial break எல்லாம் கிடையாது. 

அந்தந்த ஸ்டேட் இல் அவா அவா language  !! 
ஆக, பூனாவில் மராத்தியும் , ஹிந்தியும். 

தினமும் 6 to 7 pm... "ஆம்த்தி மான்ஷம், ஆம்தி மதி"  ன்னு  "வயலும் வாழ்வும்" .. அதைக்கூட, புரிஞ்சிதா, புரியல்லயா ன்னு கவலை இல்லாம ஒரு மணி நேரமும் பாத்துண்டிருப்போம்... 

ஹிந்தி "chithrahaar" வாரத்துக்கு ஒரு நாள்... ரொம்ப நன்னா இருக்கும்... 
சனிக்கிழமை மராத்தி படம்; ஞாயித்துக்கிழமை.. ஹிந்தி. 

ஞாயித்துக்கிழமை, எல்லா வேலையும் முடித்து, படம் பாத்துண்டே சாப்பிடுவதற்கு வசதியாக கலந்த சாதம், சப்பாத்தி கரி என்று பண்ணி, எல்லாத்தையும் ஹால் ல கொண்டு வெச்சு, தட்டு, தண்ணி எல்லாம் ரெடி பண்ணி வெச்சுட்டு... 

படம் பாக்க உக்காந்தா... கை அலம்ப மட்டும்தான் எழுந்திருப்போம்...!! 

அப்ப மெட்ராஸ் தூர தர்ஷனுக்காக Training க்கு Mr.P.A. Perumaal வந்தார். அவருக்கு தான் எடுக்கும் ஒரு discussion forum க்கு, ஆள் வேண்டி இருந்தது. தெரிந்தவா மூலம், என்னை கூப்பிட... ஐயோ... மகா பெருமை... ! அங்கே மொதல்ல concept சொல்லிக்கொடுத்துட்டு, take க்கு போயிட்டார்... 
நாங்க 4/5 பேர் சுத்தி உக்காந்துண்டு.. casualஆ (!!) discussion !! 
இதில என்ன கொடுமைன்னா.. என்ன மறு நாள் final take க்கு மடிசார் கட்டிண்டு வரச்சொன்னார்... (I was hardly 31 yrs. old - I don't know why he got that idea ! I did not refuse... அப்புறம் சான்ஸ் போயிடுமே !! 

(காதலிக்க நேரமில்லை சச்சு "சாமரம் வீசின"  மாதிரி... என்னை யாராவது இப்ப டி.வி. டிராமா ல act பண்ண கூப்டா... "எனக்கு முன் அனுபவம் இருக்கு" ன்னு சொல்லிக்கலாம் 


No comments:

Post a Comment