எங்க தாத்தா நாமம் (ஒற்றை) போட்டுக்
கொள்வார். அதற்கு அம்மாவின் விளக்கம் "நாங்க எல்லாம் 'வடவம்
முத்தி வைஷ்ணவம்' " ... ஏதோ
இது ஒரு படி ஒஸ்தி மாதிரி.
இதன் ரகசியத்தை நரசிம்ஹன் மாமா விளக்கினார்.
மன்னார்குடி யில் அதிகமாக வைஷ்ணவர்கள். ஆங்கிலேயர் காலத்தில் ஐயங்கார்களுக்கு நிலம் வாங்குவது, பட்டா போடுவது சுலபம். இதனால் அய்யர்கள், நாமத்தை போட்டுக் கொண்டு, நிலம் வாங்கினார்களாம். அதை justify பண்ண, இப்படி "வடவம் முத்தி வைஷ்ணவம்" என்று சொல்லிக் கொண்டார்களாம். "புஸ்........." என்று ஒரு விஷயம் !!

அந்த கிராமமே எங்க தாத்தாவுக்கும், மாமாவுக்கும் சொந்தம். இவர்களைத்
தவிர குடியானவர்கள் தான் அதிகம். எங்கும்
பசுமை. எவ்வளவு நிலங்கள்.
தாத்தாவிடம் மட்டும் லைசென்ஸ் உடன் துப்பாக்கி.
மாமாவின் பூந்தோட்டத்தை கோவில் குருக்கள் (பெருமாள்
கோவில் ) வாங்கி வீடு கட்டிக்
கொண்டிருக்கிறார். மாமா இருந்த வீடு தரை மட்டம். அஸ்திவாரம் மட்டும் தெரிகிறது.
No comments:
Post a Comment