Friday, June 5, 2020

மூங்கிலிலை மேலே........


அக்காலத்தில் பம்ப் போன்ற இயந்திரங்கள் இல்லையாதலால் ஏற்றமிரைத்தே வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறாக ஏற்றமிரைத்துக்கொண்டிருந்த ஏற்றக்காரன் 

மூங்கிலிலை மேலே,, மூங்கிலிலை மேலே ... 

என்று இரு வார்த்தைகளை மட்டும் இசையுடன் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே ஏற்றமிரைத்தான். 

கம்பர் ஏற்றக்காரன் பாடிய நாட்டுப்புறப் பாடலை அதன் முன்னர் கேட்டாறியாதவராதலால் அவ்விரு வார்த்தைகளையே அடிக்கடி திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். 
அவர் இவ்வாறு கூறக்கேட்ட அம்பிகாபதி

"
மூங்கிலிலை மேலே துங்கு பனி நீரே 
தூங்கு பனி நீரை வாங்கும் கதிரோனே"

என்று பாடலின் வரியைப் பூர்த்தி செய்யவே, கம்பர் அகமிக மகிழ்ந்து,

"
ஏற்றக்காரன் பாட்டுக்கெதிர் பாட்டில்லை, 
என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை" 

என்று பாராட்டி மகிழ்ந்தார்.


No comments:

Post a Comment