சின்ன ஊருகளிலே, கிராமங்களிலே, லேடீஸ், பானையில் தயிர் கொண்டு வந்து விப்பா
அவா கையில
எண்ணெய் பிசுக்கும், வெண்ணை பிசுக்கும் ஒட்டிண்டிருக்கும். ஒரு விரலால, அன்னன்னிக்கு, தயிர் குடுத்துட்டு, கணக்குக் காக திண்ணை சுவத்துல கோடு போட்டு வெச்சுட்டுப் போவா.. மாசக் கடசீல பணம் வாங்க.
அந்த
செவுத்துக்குப் பேரு "ஆடை செவுரு"
ஒரு ஊருல ஒரு
ஆள், தன் வயசான அப்பாவை, திண்ணையில் இருக்க வைத்தான். அந்தப்பாக்கு ஒரு மண் சட்டி குடுத்திருப்பா.
அது அந்த ஆடை சுவத்துல ஆணியில் கவுத்து இருக்கும். தினமும்சாப்பாடுஅந்தமண்சட்டியிலவிழும்.
அந்த பெரியவர்
ஒரு நாள் இறந்து போனார்.
இடு காட்டு
காரியங்கள் முடிந்து , திண்ணையை அலம்பும் போது, அந்த சட்டிக்கு இனி வேலை இல்லை ன்னு , அதை தூக்கிப்
போட்டு உடைக்கப் போனான் அந்த ஆள்.
அவனுடைய பையன்
அதை பிடுங்கி, மறுபடியும் மாட்டினான்.
அப்பா "இனி
எதுக்கு அது. உன் தாத்தா தான் செத்துப் போயிட்டாரே?" ன்னு சொன்னான்.
அதுக்கு அந்த
பையன், "அப்பா, நாளைக்கு உனக்கும் வேண்டி இருக்கும் இல்லையா. அதனால் இருக்கட்டும்"
னான்.
அதனால் தான்
இந்த பழ மொழி...
"அப்பனுக்கிட்ட சட்டி ஆடை செவுத்துல கவுத்தே இருக்கும்"
No comments:
Post a Comment