Friday, June 26, 2020

(என்) வாழ்க்கை 'ரச'த்தை போன்றது .....

(என்) வாழ்க்கை 'ரச'த்தை போன்றது ..
மூன்று அடுக்குகள் கொண்டது...

முதல் அடுக்கு (அடி) வண்டல்...கிளறக்கூடாதது... காரம் அதிகம்...மற்றவருக்கும் பரிமாரக்கூடதது... கிளறினால் ஒரு நாள் ஆகும் தெளிவதற்கு

நடுவில்...இனிமையான நினைவுகள்...அதிகம் குழந்தைகளை பற்றியது..சுவையானது...அப்பப்போ அதை அசை போடலாம்... நாங்கள் இருவரும்...நான் பேச - அவர் கேட்க... அவர் கேட்க - நான் பேச... ரசனை...ரசனை..

மேலே..தெளிவு... அதுதான் என் குழந்தை மனம்... அன்றன்று நடப்பதை ரசிப்பது...சிரிப்பது... நேசிப்பது...முடிந்ததை செய்வது...

சில சமயம் கொஞ்சம் சப்பெண்டிருந்தாலும்... சுவையும் உண்டு... அந்த சுவை பழகி விட்டது....


No comments:

Post a Comment