வத்தக் குழம்பும் நானும் .....
எப்போது சாப்பிட ஆரம்பித்தேன் என்று ஞாபகம் இல்லை...ஆனால் என்று நானே பண்ண ஆரம்பித்தேன் என்று நன்றாக ஞாபகம் இருக்கிறது.
கல்யாணம் ஆன புதிதில் புக்காத்தில் எல்லோரும் சாயந்திரம் வெளியே போகும்போது, "ராத்திரிக்கு வத்த குழம்பு வைத்து, சாதம் குக்கரில் வைத்து விடு" என்று இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்து விட்டு போய் விட்டார்கள். நானும் பயந்துண்டே "சரி" என்று சொல்லி விட்டேன். ஆனால் எனக்கு சமையலில் ABC கூட தெரியாது. SK தான் ஸ்டெப் by ஸ்டெப் சொல்லிக் கொடுத்தார். !! ஒரு வழியாக சமைச்சுட்டேன். !! (இன்று வரை தான் சமையல் சொல்லிக் கொடுத்ததை பீத்திக் கொள்வதுதான் எரிச்சல் !!)
வடாம், பொரிச்ச அப்பளம், தேன்குழல், முறுக்கு - இதுல ஏதாவது ஒண்ண எடுத்து, வத்தக் குழம்புல தோச்சு தோச்சு சாப்பிடுவேன்.
பிஸ்கட், ரஸ்க், பிரெட் - வத்தக் குழம்பை spread பண்ணி சாப்பிடலாம்.
வாழை இலையில் சுடச் சுட சாதம் போட்டுண்டு, பருப்பு, நெய் ஊத்தி பிசைஞ்சு சைடில கொஞ்சம் வத்தக் குழம்பு ஊத்தி தொட்டு தொட்டு சாப்பிட்டா ... ஆஹா...
அதே இலையில சாதம் போட்டு , நெய் அல்லது நல்ல எண்ணெய் விட்டு, வத்தக் குழம்பு ஊத்தி பெசஞ்சு, பொரிச்ச அரிசி அப்பளம் தொட்டுண்டு சாப்பிட்டா... "சொர்கம்" ....
அதே இலையில சாதம் போட்டு, கெட்டி தயிர் விட்டு பிசைஞ்சு , நடுவில குழிச்சு, குழம்பு ஊத்தி, கலந்து கலந்து சாப்பிட்டா பிரமாதமா இருக்கும். அந்த குழியிலே கீரை மசியல் போட்டு, அதை குழித்து வத்தக் குழம்பு விட்டு கலந்து சாப்பிட்டால் இன்னும் ருசி.
அம்மா தயிர் சாதம் உருட்டி கையில் குடுக்க, நான் கட்டை விரலால் அதில் ஒரு குழி குழிக்க, அம்மா அதில் ஒரு ஸ்பூன் வத்தக் குழம்பு விட , அடா, அடா , அடா... அளவு தெறியாமல் சாப்பிடலாம். ஹும்ம்ம்ம்.... அதெல்லாம் ஒரு காலம்.