Sunday, August 21, 2016

KARAGAM....


நம் வாழ்க்கை - குடும்பம்சமூகம்என்ற பல அங்கங்களை கொண்டது...
சமூக வாழ்க்கை என்பதுநம் சுற்றமும்நட்பும்சூழஅவர்களுடன் சந்தோஷங்களை பகிர்ந்துகஷ்டங்களில் பங்கெடுத்து வாழ்வது.

இதற்கு நாம் குழந்தை பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தப் பட்டோம்...
விளையாட்டுகள் மூலமாகபண்டிகைகொண்டாட்டங்கள் மூலமாககோவில்திருவிழாக்களின் மூலமாக...
பண்டிகைகள்திருவிழாக்கள் சும்மா பக்திக்காகமட்டும் அல்ல
all those activities gave us good SOCIALISATION ! we learnt values, customs, co-existance, give & take, to be satisfied with what we have etc. etc. 

முதலில் கோவில் திருவிழாக்களைப் பற்றிப் பார்ப்போம்....

தஞ்சாவூரில்எங்கள் தெருவில்எங்கள் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி ஒருசின்ன மாரியம்மன் கோவில்... வருடத்தில் இரண்டு முக்கியமான விழா.
ஒன்று ...கரகம்...

கரகம் எடுப்பவர் (யார் அதை தீர்மானிப்பார்கள் என்று தெரிய வில்லை -ஒரு particular குடும்பத்தில் வந்தவராக இருக்கலாம்) முதல் நாளிலிருந்தே விரதம்..

கரகம் அன்று..

அதை கட்டுவதற்கு --- அந்த கலையில் கை தேர்ந்தவர்கள்இருப்பார்கள் ... அவர்கள் 3/4 பேர் சேர்ந்து கட்டுவார்கள்...

ஒரு பெரியசொம்பு / வெண்கலப்பானை மாதிரி இருக்கும். அதன் மேல் கோபுரம் மாதிரி அலங்காரம்பண்ணிநெட்டியில் கலர் கலராக பொம்மைகள் (கிளிகள் எல்லாம் இருக்கும்) கட்டி...ரொம்ப அலங்காரமாக இருக்கும்...

அதை கட்டும்போது நாங்கள் எல்லாம் வேடிக்கைபார்த்துக்கொண்டே இருப்போம். ரொம்ப சுவாரசியமாக இருக்கும்... வீட்டில் இருந்துவெளியே இருப்பதே ஒரு சுவாரசியம்.. அதுவும் மற்ற குழந்தைகள் கும்பலோடு !!
எல்லாம் கட்டி முடிந்து...

கரகம் எடுக்கப்போகிறவரை சாயந்திரம் ஆறுஅல்லது குளத்துக்கு கூட்டி போவார்கள்.. அங்கே அவரை குளிக்க வைத்துஈர வேஷ்டி கட்டி
(அந்த வேஷ்டிக் கட்டே வித்தியாசமாககச்சாம் போட்டுமேலே குறுக்காக இரண்டுஅங்கவஸ்திரம் மாதிரி போட்டுஅவருக்கு நடக்க சௌகரியமாக இருக்கும்)

குளித்துவேஷ்டி கட்டியதும்மாலைகள் போட்டுவிபூதிகுங்குமம் பட்டையாகவைத்துகூட்டி வருவார்கள்.

கோவிலில் கரகத்துக்கு பூஜை செய்துநல்லநேரத்தில் அவர் தலை மீது வைக்கப்படும்.

அதை சுமந்து (பிடித்துக்கொள்ளலாம்... கரகம் டான்ஸ் ல தான் பிடிக்காமல் ஆடுவார்கள்) அவர் தெருத்தெருவாக அழைத்துச் செல்லப்படுவார்...
முன்னால்தவில்நாதஸ்வரம்உடுக்கைபம்பைமுனி போன்ற வாத்தியங்கள்

முன்னாலே... மயிலாட்டம்ஒயிலாட்டம்பொய்க்கால் குதிரைபுலி வேஷம் பச்சை காளி பவளக் காளி எல்லாம் போகும்...

(பச்சை காளி பவளக்காளி என்பது... இரண்டு ஆண்கள்... பெரிய கொம்பை இரண்டுகாலிலும் கட்டி (உயரமாக) ,பச்சை சிகப்பு ட்ரெஸ் போட்டுஅந்த ட்ரெஸ்பொம்மென்று stiff ஆகஇடுப்பிலிருந்து கவுன் போல் இருக்கும்மேலே அதே கலரில் சட்டை மாதிரி...அலங்காரமெல்லாம்.. கொஞ்சம் ஓவர் ஆகத்தான் இருக்கும்.. ஆனால் பார்க்கவேடிக்கையாகவும் இருக்கும்... அப்படியே உயரமாககுச்சி காலில் balance பண்ணிநடப்பார்கள்)

மணிக்கு (மாலை) ஆரம்பிக்கும். எல்லார் வீட்டு மனிதர்களும்இரவு கரகம் வரும் வரை தெருவில்தான்.
சாயந்திரம் வாசல் தெளித்துகோலம் போட்டுவைத்திருப்போம்...
இரவில் தெருவில் இருப்பது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்கொண்டாட்டம் தான்...
பயமே இல்லை... Stampede, திருட்டுஅடிதடிகிண்டல்கேலி... ஒன்றும் இல்லாமல்பெண்களும் சுதந்திரமாக இருப்பார்கள்..

ஒருவழியாக ராத்திரி 12 மணிக்கு ஊர்வலம் முடிந்ததும்கோவிலில் கரகத்தை இறக்கி வைத்துஅம்மனுக்கு பூஜை. அது வரைக்கும் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்.

நல்ல ட்ரெஸ்போட்டுபின்னிபூ வைத்துவளையல் போட்டுஅலங்காரம் பண்ணி...

எல்லாரும்அழகு பொம்மைகளாக வலம் வருவோம்...





No comments:

Post a Comment