பால் குடம்
அதே மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் ஒரு
ஞாயிற்றுக் கிழமை பால் குடம்
எடுப்பார்கள்.
பால் குடம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் எடுப்பார்கள்.
நிறைய பேருக்கு வேண்டுதல் இருக்கும்.
கரகம் மாதிரி இல்லாமல், பால் குடம்
காலையில் எடுப்பார்கள்.
பால் குடம் எடுப்பவர்கள் காலையிலேயே ஸ்நானம் செய்து, 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து விடுவார்கள். குடம் என்று பெயரே தவிர, அநேகமாக எல்லாம் சொம்புதான்.
சில பேர் காவடியும் எடுப்பார்கள். காவடிக்கு இரண்டு பக்கமும் இரு சின்ன சோம்பு
கட்டி தொங்க விட்டிருப்பார்கள் .
எல்லா சொம்புக்கும் சந்தன குங்குமம் இட்டு, பூ சுத்தி, பால் நிரப்புவார்கள்.
குறிப்பிட்ட நேரம் வந்ததும், அம்மனுக்கு
தேங்காய் உடைத்து, பால் குடங்கள்
தலையிலும், காவடி தொழிலும் வைக்கப் படும். ஊர்வலமாக, உறவினர்களும் புடை சூழ, நாலு வீதியிலும்
போவார்கள். காலுக்கு செருப்புப் போடக் கூடாது. வெய்யில் ஏற ஏற தரை சூடாக
இருக்கும். அதனால், எல்லா வீடுகளிலும்
தண்ணீர் குடங்கள் ரெடியாக வைக்கப் பட்டிருக்கும். அவர்கள் இரண்டு மூன்று வீடு
தள்ளி வரும்போது, எல்லோரும் வாசலில் நிறைய தண்ணீர் தெளிப்பார்கள்.
இப்படி வரிசையாக எல்லார் வீட்டிலும் தெளிப்பதால் தரை ஜில்லென்று இருக்கும். இதை
தவிர, பால் குடம் எடுப்பவர்கள் காலிலும் தண்ணீர்
ஊற்றுவார்கள்.
ஊர்வலத்தோடு, மேளம்,, தாரை, தப்பட்டை எல்லாம் போகும்.
கோவிலுக்கு வந்து சேர்வார்கள். ஆனால், சில பேருக்காவது சாமி வந்து ஆடாவிடில் பால் குடத்தை இறக்க மாட்டார்கள். நிறைய
பேருக்கு சாமி வந்து ஆடுவார்கள் மேளம் பலமாக அடிக்கப் படும். அந்த சூழலே
வித்தியாசமாக இருக்கும்.
ஒவ்வொருத்தருக்காக சாமி வர, அவர்கள் குடம்
இறக்கப் பட்டு, அவர்களுக்கு விபூதி, குங்குமம் பூசி, இளநீர் கொடுப்பார்கள்.
எல்லா குடங்களையும் இறக்கியதும் அம்மனுக்கு கற்பூரம் காண்பிக்கப் படும்.
எல்லோருக்கும் பிரசாதம் கொடுப்பார்கள்.
காவடி
No comments:
Post a Comment