Saturday, August 27, 2016

TREES & FLOWERS (2)....

மகிழம் பூ...

ஆகா... அந்த மரம் இருந்தாலே சுத்து வட்டு எல்லாம் வாசனையோ வாசனை.
கீழே நெறைய உதுந்து கிடக்கும். விடியற் காலையில்,, குளு குளு காற்றுடன், அந்த பூவை பொறுக்கறதே ஒரு அனுபவம். 
பொறுக்கியதை, தாவணி மடிப்பில் சேர்த்து, கொண்டு வந்து கொட்டி, (இதெல்லாம் தனியாக பண்ணக் கூடாது.. friends ஓட சேந்து பண்ணனும்) ஊசி நூல் வைத்து சரம் சரமாக கோத்து தலையில் வெச்சுண்டா  வாசனைதூக்கும்.. அந்தஇளம்பச்சைநிறமும், சின்ன சின்ன பூக்களும் அழகுதான்.

பவழ மல்லி, நந்தியா வட்டை... 
  

இரண்டுமே வெள்ளை; முந்தியது ஒரு அடுக்கு; பிந்தையது கொஞ்சம் அடுக்கடுக்கா இதழ்கள். 
சின்ன, அடர்த்தியான மரங்கள், பவழ மல்லியை , மரத்தை உலுக்கி உதுக்கலாம்; நந்தியா வட்டை பறிக்கணும்.
இவைகளை, ஊசி நூலில் கோத்து சுவாமிக்கு போடுவோம். 

 பவழ மல்லி, நந்தியா வட்டை, அரளி, செம்பருத்தி.. இவைகளெல்லாம், சின்ன தோட்டம் இருக்கறவா வீட்டுல கூட இருக்கும். 
கோவில் தோட்டங்களில் கண்டிப்பாக உண்டு...
                                       அரளி

                                 செம்பருத்தி

எங்க ஊருல எல்லாம், எல்லா கோவிலுக்கும் ஒரு நந்த வனம் இருக்கும்; சின்னதோ, பெரியதோ. அங்கே இந்த பூச்செடிகள் கண்டிப்பாக உண்டு. 
மெட்ராசில, எல்லா கோவிலிலும் நந்தவனம் இருக்கா ன்னு தெரியல்ல. 

அரளியில் மஞ்சள், சிகப்பு; செம்பருத்தியில் சிகப்பு ஒத்தை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி. 
இப்போ மெட்ராசில நர்சரியில , கலர் கலரா பாக்கறேன். 

தெருவில், வீட்டில் வேலியோரங்களில், ரொம்ப சின்ன சின்ன வெள்ளை நிற  தும்பைப் பூக்கள்மண்டிக்கிடக்கும்.. சின்னசெடிகளில்.
சங்கு புஷ்பமும் இப்படித்தான்... நமக்காகவே காத்திருப்பது போல் நீலம், ஊதா நிறங்களில் பூத்துக் கொட்டி கிடக்கும்.
                     தும்பைப் பூக்கள்
  சங்கு புஷ்பம்

அவைகளை பத்திரமாக பறிப்பது கூட கஷ்டம. அவைகளை நெறைய சேகரித்து வந்து, ஊசி நூலில் கோத்து, வட்ட வட்ட மாக வடை மாதிரி பண்ணி, அதை அரச மரத்தடி பிள்ளையாருக்கு வைப்போம்.

தஞ்சாவூரை சுற்றி நிறைய முந்திரி காடுகள். குட்டையாக அடர்த்தியாக, மரத்தின் மேல் பாகம், குடை மாதிரி அடர்த்தி இலைகளைக் கொண்டு இருக்கும்.. 


இவை தவிர, சுவரோரம் பிரண்டைகற்பூர வல்லி, வேலியில் படரும் வெத்திலை, ஆடு தொடா இலை
     பிரண்டை                கற்பூர வல்லி


ஆடு தொடா இலை











       வெத்திலை
இன்னும் எவ்வளவோ மரங்களுடனும், செடிக் கொடிகளுடனும், பூக்களுடனும் வாழ்ந்திருக்கிறோம்; இயற்கையை ரசித்திருக்கிறோம். 


No comments:

Post a Comment