Sunday, August 21, 2016

NAVARATHRI....


நவராத்திரி.......

நம் வாழ்க்கை - குடும்பம், சமூகம் என்ற பல அங்கங்களை கொண்டது... சமூக வாழ்க்கை என்பது, நம் சுற்றமும், நட்பும் சூழ, அவர்களுடன் சந்தோஷங்களை பகிர்ந்து, கஷ்டங்களில் பங்கெடுத்து வாழ்வது.
இதற்கு நாம் குழந்தை பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தப் பட்டோம்... விளையாட்டுகள் மூலமாக; பண்டிகை, கொண்டாட்டங்கள் மூலமாக; கோவில், திருவிழாக்களின் மூலமாக... பண்டிகைகள், திருவிழாக்கள் சும்மா பக்திக்காக மட்டும் அல்ல; இந்த முக உரையுடன் - இப்போ நவராத்திரி பண்டிகை பற்றி பார்ப்போம்...

தஞ்சாவூர் அரண்மனையைச் சுற்றி... நாலு பக்கமும் ராஜ வீதிகள்; அவைகளைச்சுற்றி நாலு அலங்கங்கள்... அலங்கங்களுக்கு எதிராக கோட்டை சுவர்கள்.. பிறகு அகழி... அகழிக்கு அப்புறம் நாலு வாசல்கள்... நாங்கள் இருந்தது அலங்கம் .
..
எங்கள் தெருவில் ஒரு வரிசைதான் வீடு... எதிரே இடிந்து போன கோட்டை... அதை தாண்டி, மிக ஆழமான அகழி... தெருவின் இரு புறமும் - அரண்மனைக்கு செல்லும் வழிகள் ; கீழ வாசலுக்கு செல்லும் வழிகள்... நடுவில் சுமார்.... இருபது வீடுகள் இருக்கும் எல்லாம் street houses தான். compoundஎல்லாம் கிடையாது.
அந்த தெரு... அக்ரஹாரம் எல்லாம் இல்லை... எல்லா ஜாதியினரும் இருப்பார்கள்... அப்போது அந்த வித்தியாசமெல்லாம் தெரியாது... இப்போது யோசிக்கையில், அது ரொம்ப ஆரோக்கியமான விஷயமாக எனக்கு தோன்றுகிறது... no one was bothered about social, economic, caste status !!

அந்த தெருவில் 7/8 வீடுகளில் இருக்கும்... எங்காத்திலும் பெரிய கொலு உண்டு... (மரப்படி செய்து வைத்திருந்தார் அப்பா... 13 படிகள் கட்ட... அவைகளை பீரோ மாதிரி முன்னால் அடுக்கி, அந்த பலகைகளிலேயே ஷெல்ப்  பண்ணி, பொம்மை வைத்து, screw போட்டு முடுக்கி இருப்பார்... அதை கழட்டி, படி கட்டி, பொம்மை வைப்பது அப்பா வேலை. பண்ருட்டி போய் பொம்மை வாங்கி சேர்த்தார்... அந்த மண் பொம்மை கள் எல்லாம் தத்ரூபமாக இருக்கும்... பெரிசு பெரிசா... 1 ரூ விலிருந்து 5 ரூ பைக்குள் விலை முடிந்து விடும்...)

விஷயத்துக்கு வருவோம்... எல்லா குழந்தைகளுக்கும் கொலு பார்க்க ஆசை உண்டு... கும்பலாக சேர்ந்து தான் விசிட் .. உக்காந்து, நின்று, வளைந்து, பொம்மைகளின் அழகை ரசித்தாலும் சிறிது நேரத்தில் வரப்போகும் சுண்டலில் தான் கவனம் !


எல்லாராத்திலேயும்... குழந்தைகள் வருவாளேன்னு சுவாரசியமா ஏதாவது பண்ணி வெச்சிருப்பா... சுவாமி நெய்வேத்யத்தை விட முக்கியம் இந்த குழந்தைகளுக்கு நெய்வேத்யம் .
எங்களுக்குள் ஒரு டீல் போடப்படும்... ஒருத்தரே எத்தனை தரம் ஒரே ஆத்துக்கு போறது... பங்கு போட்டு, மாத்திப்போம்... முதல் டீம் வேற வேற வீடுகளுக்கு போய், என்ன கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்போம்... அதற்கு தகுந்தாற்போல் கலெக்ஷன்அப்புறம், எல்லாத்தையும் சேர்த்து வைத்து, பங்கு போட்டு தின்போம்...
இதற்காக, நல்ல பாவாடை சட்டை போட்டு, வளையல், மாலை போட்டு, பூ வைத்து, குழந்தைகளுக்கு வருடம் தவறாமல், அலுக்காமல் கிருஷ்ணா , ராதா வேஷம் கட்டி.. குங்குமம் எடுத்து போய் அழைத்து...

அந்த பத்து நாளும் பசங்களுக்கும் கொண்டாட்டம் தான்... சுண்டல் சாப்பிடும் கொண்டாட்டம்... பெண் குழந்தைகளை சீண்டி வேடிக்கை பார்க்கும் கொண்டாட்டம்.., தங்கள் சுண்டலை “லபக் லபக்” என்று முழுங்கி விட்டு, தங்கைகளின் சுண்டல், கடலை மிட்டாய், எள்ளு பொடி இவைகளை பிடுங்கி திங்கும் கொண்டாட்டம்... உன் பேச்சு காய் என்று அழுது, மறு நாளே கூடி குலாவும் கொண்டாட்டம்.... மிஞ்சும் பூவம் பழங்களை , உருண்டைகளை வைத்து, கொலு கலைத்ததும், மரப்பாச்சிகளை எடுத்து, பொம்மை கல்யாணம் பண்ணும் கொண்டாட்டம்...

அப்போ எல்லாம் கார்டு போடுவது, நாட்கள் குறிப்பிடுவது எல்லாம் கிடையாது... ஃ போன் அழைப்புகள் கிடையாது... இவ்வளவு பேர்தான் என்று லிமிட் கிடையாது... வீட்டு பெரியவர்கள் மற்றவர்கள் வீட்டுக்கு போனாலும், வீட்டில் யாராவது இருப்பார்கள் , வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்க...
சுண்டலை தவிர வேறே gift எல்லாம் கிடையாது... அதனால் .. Economic வேறு பாடு கிடையாது...
இந்த பண்டிகைகளில் கத்துக்கொண்டது... பக்தியை விட, கூடி வாழ்வது... ! பெண்கள் வேலைக்கு போகும் வழக்கம் இல்லாததால், அவர்களுக்கும் ஒரு மாறுதல்...
இதெல்லாம் ஒரு Social Get together... indirectly we learnt a lot....

இந்த பண்டிகையின் நேரத்தில், வீட்டுக்கு வெளியில் நடப்பவை பற்றி எழுதினேன்.. இனி வீட்டுக்குள்ளே...
பாட்டு ஒரு மிக்கியமான அங்கம் இந்த பண்டிகையில்... இன்ன பாட்டுன்னு கணக்கே இல்லை... எது வேணா பாடலாம்...மோகன ராக கீதம் "வர வீணா" ன்னு கூட பாடலாம். நெறைய குழந்தைகள் பாட்டு கத்துக்கும்... கொஞ்சம் கூட inhibition ஏ இல்லாமல்... சரளி வரிசை கூட பாடும்.. எல்லாருக்கும் தெரியும் பாடச் சொல்வார்கள் என்று... அதனால் குழந்தைகளுக்கு கூச்சமில்லாமல் பாட பழகி விடும்..
பெரியவர்கள், பாட்டிகள் கூட பாடுவார்கள்... கலை ஞானத்தை வளர்த்தது இந்த பண்டிகைகள்..மற்றவர் பாடுவதை கேட்க, தானும் கத்துக்க வேணும்னு ஆர்வம், நாலைந்து பேராக சேர்ந்து பாடுதல், நடுவில் தடங்கினா கூட தப்பில்லை, யாரும் critical ஆ analyse பண்ண மாட்டா...

ஆம்பள பசங்க எல்லாம் உள்ளே வந்து கலாட்டா பண்ணாது... எல்லா பெண் குழந்தைகளும்... பாவாடை விரிய உக்காந்து, தாவணி ப் பெண்கள், புடவைப் பெண்கள், மடிசார் மாமிகள்... ஒரே வண்ண மயம்.
சின்னக் குழந்தைகளுக்கும் "பாடினால்தான் வெத்திலை பாக்கு சுண்டல் " ன்னு தெரியும். அதனால் நோ எஸ்கேப் ! சின்னப் பெண்கள் "வெத்திலை பாக்கு நான் தான் குடுப்பேன்" என்று அடம் பிடித்து, ஜாக்கிருதயாக தட்டை எடுத்து எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் கொடுப்பது அழகு.

கீழே இருந்து சில படிகள்... மண், பச்சை செடிகள், வயல்கள், முளை கட்டியது, வண்டிகள் என்று நம் வாழ்வின் முதல் கட்டமான விவசாய தொழிலையும், சின்ன சின்ன உயிர்ககளையும் காண்பிக்கும்.
மேலே செட்டியார், தானியங்கள், வியாபாரங்கள் அதற்கு மேலே பறவைகள் ; அப்புறம் மேலே காட்டு, வீட்டு மிருகங்கள்;பிறகு குறத்தி, குறவன் போன்ற மனிதர்கள், அதற்கும் மேலே, நம் நாட்டுக்காக சேவை செய்த காந்தி, நேரு போன்ற தலைவர்கள் பொம்மைகள்அதற்கும் மேலே மகான்கள்... விவேகானந்தர், சங்கரர்... முதலியனபிறகு தெய்வங்களுக்கு வருகையில் ... எல்லா சாமியும் இருக்கும்... தசாவதாரம், சிவன், பார்வதி, பள்ளி கொண்ட பெருமாள் என்று பலப் பல தெய்வ உருவங்கள்... எல்லாவற்றுக்கும் மேலே ஷக்தி

கொலு வைக்கையில் பிள்ளையார் பொம்மை முதலில் வைத்து அந்த இடத்தை பிறகு மாற்ற மாட்டோம். 
  இந்த கொலுவை பார்க்கையில்அதன் ஏற்பாடு பலப்பல விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்தது                                  
 .நம் சமூக அமைப்பு, evolution , கிராம அமைப்புகள்பொழுது போக்குகள்பழைய நாளைய வாழ்க்கை முறை
எல்லாவற்றுக்கும் மேலாக தெய்வ நம்பிக்கை... 
பாட்டெல்லாம் கூட பார்வதி லக்ஷ்மிசரஸ்வதி பற்றிய பாட்டுக்கள் அதிகம் பாடப்படும்...
வீரமும்கல்வியும்பணமும் .. எல்லாமுமே balanced ஆகா இருக்க வேண்டும் என்று காண்பிக்கும்... 
முதல் மூன்று நாள் ஷக்தி .... பலம்...
அடுத்த மூன்று நாள் ... செல்வம்...
கடைசி மூன்று நாள் ஞானம்... 
என்று நம் வாழ்கையை வகைப்படுத்தும்... 
சரஸ்வதி பூஜை அன்றுஅவரவர் வாத்தியங்கள் சுத்தம் செய்யப்பட்டுபுத்தகம் வைக்கப்பட்டு பூஜை செய்கையில்நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படும் "நான் இனி கலைகளிலும்படிப்பிலும் நன்றாக ஜொலிப்பேன்" என்று. 
தசமி அன்று கண்டிப்பாக படிக்க வேண்டும்... விஜயம் தான்... 
எங்களுக்கெல்லாம் சரஸ்வதி பூஜை ரொம்ப பிடித்த காரணம்... அன்று படிக்கக் கூடாது... 
மற்ற நாளெல்லாம் படித்து விடுவோமாக்கம் !! அன்று guilt  feeling இல்லாமல்படிக்காமல் இருக்கலாம்... 
ஒளிந்து ஒளிந்து விகடன் படித்ததில் குறைச்சல் இல்லை...
ஆக அந்த பத்து நாட்களும்...  குடும்பத்துக்கே கொண்டாட்டம்தான்... 
குடும்பத்தின் எல்லாருக்கும் பங்கு இருக்கும்... 
 வேறு என்ன சொல்ல ?       

             


No comments:

Post a Comment