Tuesday, August 16, 2016

AMMA.....


அம்மாவும் அப்பாவும் கடைசி வரை தனியாக இருந்தார்கள் !! 
அப்பா 87 வயது வரைஅம்மா 78 வயது வரை.

அம்மாவுக்கு 11 வயதில் கல்யாணமாகி,14 வயதில் முதல் குழந்தை பிறந்து, 9 பிறந்து
ஏழை வளர்த்து... அப்பாவின் டீச்சர் சம்பளத்தில்சொத்து எதுவும் இல்லாமல்... !
நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது !

அண்ணா இரண்டு பேரும் படித்துஎங்களுக்கெல்லாம் சாப்பாடுதுணி மணி... !! 
அம்மா பாதி நாள் பட்டினி...தனக்கென்று ஒன்றுமே வாங்கியதில்லை. 
எங்களை எல்லாம் நன்னா தான் வளர்த்தாள். பாசம் என்றால் அப்படி ஒரு பாசம்.
இதில்ஒரு அத்தை வேறு வீட்டோடு. நகை எல்லாம் அடகு அல்லது விற்றாள்...பாத்திரம் பண்டமெல்லாம் விற்றாள்

ஆனால் ஒரு நாள்அம்மா சிணுங்கியதில்லைகுறை பட்டதில்லைஅப்பாவை கோபித்தது இல்லை
"உங்களால் எனக்கு எவ்வளவு கஷ்டம்" என்று குத்தி காட்டியதில்லை.

கல்யாணம் பண்ணிஆளுக்கு இரண்டிரண்டு குழந்தை பேற்றுக்கு செஞ்சு..அண்ணாவிடம் பணம் எதிர்பாத்துஅவமானங்களை பொறுத்து... அப்பா கடைசி வரை tuition எடுத்து... அவர்கள் குடுத்ததை வாங்கிக்கொண்டு... அண்ணா குடுத்த  பணத்தில்சாப்பிட்டு..
உடம்பிலும்மனதிலும் எப்படி இந்த சக்தி ??

எதை குறை வைத்தாள் 
கல்யாணத்துக்கு அப்புறம்உள்ளூர். பெண்களுக்குபண்டிகை தவறாமல்அதற்கான பட்சணம்வெற்றிலை பாக்கு பழம் எடுத்துக்கொண்டுகாலில் செருப்பில்லாமல்இரண்டு பஸ் ஏறி... வெய்யிலில்... !!
ஆனால் ஒன்றில் மட்டும் அம்மா பிடிவாதமாக இருந்தாள்பிள்ளைகளிடம் இருக்கக்கூடாது ;  அது மட்டும் அல்லஅப்பாவை விட்டு தான் முதலில் போய் விடக்கூடாது என்றுவேண்டிக்கொள்வாள் !!

வளசரவாக்கத்தில்அண்ணா வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளிதானே கடைசி வரை அப்பாக்கு சமைத்துப் போட்டுபேரக்குழந்தைகள்(மன்னி வேலைபார்த்தாள்) வந்து , டிபன் குடுத்துஅப்பா அவாளை H W பண்ண வைத்து...
எல்லாம் எப்படி அதீத பாசத்துடன் !!
நான் போய் அடிக்கடி பார்த்தேனா இல்லையே !! என் குடும்பம் என்று selfish ஆக இருந்து விட்டேனே !! joint family வேறு.
 அப்பாவின் கடைசி நாட்களில்சனிக்கிழமை ஸ்கூல் லிலிருந்து நேராகப் போய் பார்த்துவிட்டு வருவேன். (எனக்கு 45 வயதில்தான் அந்த தைர்யம் வந்தது !!)

அப்பாவின் கடைசி நாளில் ... ஓ.. அப்பாவின் மரணம் கஷ்டமில்லாத ஒன்று..திடீரென்று... !!
அதற்குப்பிறகுஅம்மா வீட்டை காலி செய்துஅண்ணாவுடன்... நடை பிணமாக...
மோர் சாதம் கரைத்துக் குடித்து விட்டுப்படுத்துக்கொண்டு  (65 வருட தாம்பத்யம்..)
வருடங்கள் இருந்தாள். சனிக்கிழமை மத்தியானம் நான் வருவேன் என்று அந்த தனி வீட்டின் வாசலில் காத்துக்கொண்டிருப்பாள்..
அம்மாவுக்கு கிருணிப் பழம் மட்டும் ரொம்பப் பிடிக்கும். வாங்கிக்கொண்டு போவேன்..அதை வெட்டிமுதலில் எனக்கு குடுத்து விட்டு கொஞ்சம் சாப்பிடுவாள்.
நான் கிளம்பியதும்கேட் ஐ பிடித்துக்கொண்டுதெருக்கோடி போகும் வரைபார்ப்பாள்...

ஒரு முறைஎன் close friend ஐ அழைத்துப் போனேன்... (நம் பெரியவர்களுக்கெல்லாம் முன் permission வேண்டாம். அந்த formality எல்லாம் இப்போதான்.)
அம்மா முதல் முறை பார்க்கும்கேள்விப்படாத அந்த கீதா வுக்குஎன்ன ஆசையானஉபசாரம். உப்புமா பண்ணி கொடுத்துஅவள் ஆசை பட்டாள் என்றுதோட்டத்தில் (flat இல்இருக்கிறவர்களுக்கு சுண்டைக்காய் செடி என்ன தெரியும்) .. சுண்டைக்காய் தானே பறித்துபோதும் என்று சொல்ல சொல்லக் கேட்காமல்அவள் மடியை நிரப்பிகறிவேப்பிலைமுருங்கக்காய் பறித்து கொடுத்துசட்டென்று பூ தொடுத்துக் கொடுத்து... இன்றும் கீதா அதை நினைவு கூறுவாள்...

அம்மாநான் இப்போது குழந்தைகளை பிரிந்திருக்கும் ஏக்கத்தை அனுபவிக்கிறேன்...
என்னைப் பார்க்க வரவில்லை என்று வருந்துகிறேன்...
ஆனால்... நீ ஒரு தடவை கூட குறை பட்டு நான் பார்த்தது இல்லை... இப்போதுஉணருகிறேன்...(மனதில் ஏக்கத்தை வைத்து... வெளிக் காண்பிக்காமல்... எனக்கு புக்காத்தில் என்ன பிரச்சினை வருமோ என்று.....)

அப்பாஅம்மாஎன்னை மன்னித்து விடுங்கள்...
காலம் கடந்த கண்ணீர்... நான் உங்களுக்கு எதுவுமே செய்யவில்லை !!
மறு பிறவி எடுத்திருப்பீர்களா அப்படி என்றால் 25  , 23 என்ற வயதில்இருப்பீர்களா ? “

அம்மாநானும் எல்லோரிடமும் பாசமாகஇருக்கப்பார்க்கிறேன்... அதில் யாராவதாக வாவது நீ இருப்பாயா ?“
 மன்னித்து விடு... மன்னித்து விடு... மன்னித்து விடு... 

Please friends, daughters ... if your mother is alive , be in touch with them often... don't postpone visiting them; express your love openly... all that the mothers need is LOVE, LOVE, LOVE !! 

VK's corner

2 comments: