Friday, August 19, 2016

PLAYING IN THE STREETS.....



தெருவில் விளையாட்டு....

நம் வாழ்க்கை - குடும்பம்சமூகம் என்ற பல அங்கங்களை கொண்டது... 
சமூக வாழ்க்கை என்பதுநம் சுற்றமும்நட்பும் சூழஅவர்களுடன் சந்தோஷங்களை பகிர்ந்துகஷ்டங்களில் பங்கெடுத்து வாழ்வது. 
இதற்கு நாம் குழந்தை பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தப் பட்டோம்... 
விளையாட்டுகள் மூலமாகபண்டிகைகொண்டாட்டங்கள் மூலமாககோவில்திருவிழாக்களின் மூலமாக... 
பண்டிகைகள்திருவிழாக்கள் சும்மா பக்திக்காக மட்டும் அல்ல
இந்த முக உரையுடன்... 

தெருவில் விளையாட்டு....

மாலையில். தெருவில். விளையாடிய விளையாட்டுகள்... சிநேகிதத்தை மட்டும் அல்ல... அந்த தெருவில் உள்ள  எல்லா பெரியவர்களுடனும் நல்லுறவை ஏற்படுத்திக் கொடுத்தது...

அவர்கள் எல்லாம் அடையாளப்படுத்தப் பட்டது, ஏதோ ஒரு உறவு  முறை வைத்துத்தான்....

நாலாம் நம்பர் வீட்டு மாமி, 18 ம் வீட்டு அக்காபக்கத்தாத்து மாமாஅம்புலுவின் அம்மாஅம்பியின் அண்ணாகப்புவின் பெரியம்மா, 10 ம்நம்பர் வீட்டு சித்தி...
இவர்கள் எல்லாம் எங்களுக்கும் மாமாமாமிஅம்மாஅண்ணாபெரியம்மாஅத்தை என்று உறவாகிப் போனார்கள் என்பதுதான் நிஜம்....

“Uncle, Aunty எல்லாம் கிடையாது.. அவைகள் எல்லாம் நம்மை அன்னியப் படுத்தும் வார்த்தைகளாய் எனக்குத் தோன்றுகிறது. 
அம்மாவை “mummy” என்றும்அப்பாவை “daddy”  என்றும் அழைப்பதேஎனக்குத் துளிக்கூட சந்தோஷம் தராத விஷயம்... அழகானநம் உள்ளத்தை பிரதி பலிக்கும் வார்த்தைகளான அம்மாஅப்பா என்ற சொற்கள் இனிமையானவை.   

'அம்மாஎன்பதில் :

'என்ற முதல் 'உயிர்எழுத்து...உள்ளிருக்கும் குழந்தைக்கு உயிர் கொடுப்பதால்
'ம்என்ற 'மெய்எழுத்து...உயிர் வளர 'மெய்' (உடல்) தேவை என்பதால்
'மாஎன்ற 'உயிர் மெய்எழுத்து...10 மாதம் கழித்துஉயிர்மெய் இரண்டையும் சேர்த்து உலவ விடுவதால் 

இதே போல் தான் 'அப்பாஎன்ற சொல்லும்.

தாய் மென்மையானவள் என்பதால் - மெல்லின எழுத்து 'ம்'
தந்தை வன்மையானவர் என்பதால் - வல்லின எழுத்து 'ப்'

தமிழ் மொழி பார்த்து பார்த்து செதுக்கப்பட்டது...

இதை மறந்துதமிழர் வீட்டு குழந்தைகள் 'மம்மி' , 'டாடிஎன்று அழைப்பது வருத்தம் !!!

கொஞ்சம் விளையாடி விட்டுதாகம் எடுத்தால் யார் வீட்டிலும் நுழைந்து தண்ணீர் கேட்டு குடிக்கும் உரிமை
அவர்கள் ஏதாவது சின்ன வேலையிட்டால்கடைக்கு ஓடி வாங்கி வரும்அல்லது செய்து குடுக்கும் மரியாதை...
வீட்டில் அவரவர் குழந்தைகளுக்கு சாயந்திரம் குடுக்கும் திபண்டத்தை, friends க்கு என்று எடுத்து வந்து பகிர்ந்து சாப்பிடுதல்....
எல்லார் வீட்டு கதவும் திறந்திருக்கஎல்லாரும் எங்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்து ரசிக்கும் பாசம்... 

சாயந்திர வேளையில்வீட்டுக் கதவை சாத்தி வைக்கக் கூடாது என்ற நம்பிக்கை அன்று ஏற்பட்டதுதான்.
(வீட்டிற்குள் லக்ஷ்மி வரும் நேரம்..வாசலில் மாடத்தில் அகல் விளக்கு ஏற்றி வைத்து.. கதவை திறந்து வைப்போம்எல்லோரும்)
எல்லாமே...எல்லாமே... பொது....   

ஸ்கூலிலிருந்து திரும்பும்போதே விளையாட்டு ஞாபகம் தான்... 
பையை வீசி எரிந்து விட்டுஅம்மா குடுக்கும் கஞ்சியை குடித்து விட்டு... (யூனிபாம் கிடையாதுசெருப்பு கிடையாது..)... ஓடி விடுவோம்....

பையன்கள் தனியாகவும்பெண்கள் தனியாகவும் தான் விளையாட்டு... சேர்ந்து விளையாடுவது இல்லை   

பெண்களெல்லாம் ஸ்கிப்பிங்ஓடி பிடித்துகல்லா மண்ணாநாலு மூலை தாச்சி
"கொல கொலையா முந்திரிக்கா-  நெறைய நெறைய சுத்தி வா,
 "ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது..." ,
 "கண்ணா மூச்சி ரே..ரே.. காட்டு மூச்சி ரே..ரே.. எனக்கொரு பழம் உனக்கொரு பழம் கொண்டோடிவா" 
 என்று பாட்டுடனும் 
சாட்பூட்த்ரீ .. போடாமல் விளையாட்டு ஆரம்பமே இல்லை..."
பசங்க எல்லாம், "பலீஞ்"  சடுகுடு , பம்பரம்பட்டம்பச்சை குதிரை... இதெல்லாம்... கிரிக்கெட் ஃபுட் பால் எல்லாம் ஆடினதாக நினைவில்லை...

நாங்க இதையும் விட்டு வைக்க மாட்டோம்... அவாளோட போட்டி போட முடியாது... அவாளுக்குத் தெரியாமல் நாங்களும் இதெல்லாம் விளையாடுவோம்.. சில அண்ணாதம்பிகள் ஹெல்ப்போடு !! 

எதிர்த்தாப்போல் வீடுகளும் கிடையாது... ரோடில் பஸ்கார் ஒன்றும் வராது... பயமே இல்லை... 
ஜூட்அம்பேல் யாருக்காவது அழுக்கு ஏதாவது ஓட்டினால்... அவர்களை சீண்ட 
"சீட்டாங்கோல்சீனிங்கோல்என்ன தொட்டா ஆறு மாசம் பாவம்" ன்னு சொல்லி... 
(இதுக்கு என்ன அர்த்தம் ன்னு இன்னிவரை தெரியாது...
நிமிஷத்துக்கு ஒரு சண்டை... மறுபடியும் சேரல் !!
எல்லாம் முடிந்துவீட்டுக்குப் போய்சில பல "கோள் " சொல்லி .. பெரியவா இந்த சண்டயிலேல்லாம் தலையிடவே மாட்டா... 
கால்கையில் இருக்கும் சிராய்ப்புகளையும்விழுப்புண் களையும் அலம்பிதுடைத்துஎரிய எரிய டின்க்ச்சர் போட்டு... வாயால் முணுமுணுத்து... 
"கடங்காராசவட்டிப்புடுவேன்கொமட்டுல குத்துவேன்நாசமத்து போகஆம்பள பசங்க வம்புக்கு போகாதே ன்னா கேக்கறியா " ன்னும், "பொம்மனாட்டி குட்டிகளோட உங்களுக்கு என்னடா விளையாட்டும்வம்பும் ?"  இன்ன பிற வசவுகளோடுநாங்கள் சொல்லும் எங்க வீர விளையாட்டை பற்றிய கதைகளை எல்லாம் பொறுமையா கேட்டு... சாப்பாடு போடுவா... 
மறு நாள்விட்ட "டூ" வெல்லாம் "சேத்தி" யாகும்.... விளையாட்டுகள் தொடரும்.. 

ஒரு வயதுக்கு அப்புறம் பெண்களுக்கு வெளியில் விளையாட தடா... 
அப்புறம் என்ன... சும்மா இருப்போமா அதுக்காக... 
மொட்டை மாடியில் ஸ்கிப்பிங்வீட்டுக்குள் கண்ணா மூச்சி... எல்லாம் உண்டு.
லீவு நாட்களில் இருக்கவே இருக்கிறது "பல்லாங்குழிதாயம்புளியங்கொட்டை ஆடு புலிஏழாங் கல் 
(அதுக்கு ஒரு பாட்டு வேற... "பொண்ணு அலமேலுபோறாளாம் தண்ணிக்குதண்ணித் துறையிலதகுந்த மனையிலே, பூமா தேவி அம்மா புள்ள வரம் கேட்டாளாம் ...") 

இங்கே ஸ்கிப்பிங் பத்தி சொல்லியே ஆகணும். ஸ்கூலில் P.T. &   Evening Games Time இல் ஸ்கிப்பிங் கண்டிப்பாக உண்டு. ஸ்கூல்ல பிடி வைத்த நல்ல ஸ்கிப்பிங் கயறு இருக்கும். வீட்டில பெட் கட்டற கயறு எல்லாம் வெச்சு ஆடுவோம். 
தனியாக பின்னாலிருந்து முன்னால்முன்னாலிருந்து பின்னால், 'கத்திரிக்கோல்எல்லாம். நிறுத்தாமல் தடங்காமல்  எவ்வளவுகுதிக்கிறோம்னுஎண்ணுவாஅதுஒரு போட்டி. 
அப்புறம்ரெண்டு பேர்பெரிய கயிறை போட குறுக்கே பூந்து அதோட ஆடணும். நம்ம கையில இன்னொரு கயறு வெச்சுண்டுஅதையும்அந்த ரெண்டு பேர் போடற கயிறையும் synchronise பண்ணி ஆடணும். அதுலயும் முன்னால்பின்னால்கத்திரி எல்லாம் உண்டு. 
ஸ்கிப்பிங் ஒரு நல்ல exercise for all organs of the body & improves concentration. 
இந்த உள் வீட்டு  விளையாட்டெல்லாம் concentration , hand & eye co -ordination   .. memory , analytical thinking , exercise for eyes , neck   எல்லாவற்றையும் வளர்த்தது உண்மை தான்...  
அதை மட்டுமா வளர்த்தது....கூடி வாழ்தல்விட்டுக்கொடுத்தல்ஒருவருக்கு கஷ்டம் என்றால் ஓடி உதவுதல்... எல்லாமும்தான்...   
ஜிம்முக்கு போனதில்லை... "பருமனாக" ஆனதில்லை... பசித்து சாப்பிட்டோம்ருசித்து சாப்பிட்டோம்சிம்பிளாக சாப்பிட்டோம்அம்மா கையால் சாப்பிட்டோம்எல்லாருடனும் சேர்ந்து உக்காந்து சாப்பிட்டோம்தரையிலே உக்காந்தோம்... (படிக்க கூட சேரில் உக்காந்தது இல்லை.. (இருந்தா தானே !!) 

இதன் பலன்களை உடலளவில்மனதளவில் இன்னும் உணர்கிறோம்.. !!

No comments:

Post a Comment