Monday, August 29, 2016

FESTIVALS (2) - DEEPAVALI ...

தீபாவளி பண்டிகை
  

தீபாவளி எங்களால் ரொம்ப ஆர்வத்தோடு எதிர் பார்க்கப்படும் ஒரு பண்டிகை.
வருடத்தில் ஒரு புது டிரஸ்! ஆர்வம் இருக்கத்தானே செய்யும்?
ஆனால் அது என்ன என்பது கடைசி வரைக்கும் suspense !!
வீட்டின் பண நிலைமை !!
அநேகமாக தீபாவளிக்கு 2 நாளைக்கு முன்தான் துணி எடுப்பார் அப்பா.
பாவாடை சட்டைக்கு - சீட்டி என்றொரு துணி வகை உண்டு. என்றும் அதுதான்.
கஜம் (1 கஜம் = 3 அடி = 90 cm) 3 or 4 Rs. இருக்கும். மொத்தமாக வாங்கினால், இன்னும் மலிவு !
அதனால், மொத்தமாக வாங்கி, எங்கள் எல்லோருக்கும் அதே பாவாடை சட்டை. தாவணி போடும் அக்காக்களுக்கு, வாயில் தாவணி !
இதை தைக்க குடுத்து, தையர் காரன் பிகு பண்ணி, அவனை கெஞ்சி கூத்தாடி... !!
தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன் கையில் மருதாணி.
தீபாவளிக்கு முதல் நாள். ராத்திரி 8 மணிக்கு அய்யன்கடை தெருவுக்கு போவோம். தைத்த துணி வர 10 மணி கூட ஆகி விடும்.
அங்கேயே, கண்ணாடி வளையல்கள்.. ஆளுக்கு இரண்டு டஜன் !! சாமந்தி அல்லது கதம்பம்.
(ராத்திரி, ஒரு சிஸ்டர் ,அப்பாவுக்கு தெரியாமல் , சட்டை கையை பிடித்து, tightஆகதையல் போடுவாள்)

அம்மாவின் பட்சண களேபரம் ஒரு வாரம் முன்பு ஆரம்பித்து விடும். வருடா வருடம் அதே !!
கடலை மாவு தேன்குழல், ஓமப்பொடி, மைசூர் பாகு, லட்டு, ரவா உருண்டை, திரட்டுப்பால்...
உப்பு பட்சணங்கள் பிஸ்கட் டின் இல் full ஆக இருக்கும். sweets...சம்புடத்தில்.
தீவாளி மருந்து வீட்டிலேயே கல்லுரலில் சாமான்களை போட்டு, இரும்பு உலக்கையால் இடித்து, சலித்து, முதல் நாள் கிளறுவாள். 

இரவு முழுவதும் தூங்க மாட்டோம்.
ராத்திரி 12 மணிக்கு மேல் கோதுமை அல்வா, பஜ்ஜி, போண்டா வாசனை தூக்கும்

காலை 3 மணிக்கு ஆரம்பித்து... எண்ணெய் தேய்ப்பது என்றால்.. பேருக்கு இல்லை.. ஓமம் போட்டு காய்ச்சிய எண்ணெய்.. கோலம் போட்ட பலகை.. தட்டில் வெத்திலை பாக்கு, குங்குமம், ஒரு தட்டில் பக்ஷணம் ..விறகு அடுப்பில் பெரிய தவலையில் கொதிக்கும் வெந்நீர்.


வயது படி... starting from the youngest (அதாங்க நான் !!) உட்கார வைத்து, குங்குமம் இட்டு, வாயில் ஸ்வீட் குடுத்து, சூடு பறக்க தாராளமாக எண்ணெய் தேய்த்து...
சீயக்காய் தேய்த்து விட்டு; குளித்ததும் அப்பா கையால் துணி வாங்கி உடுத்தி, நீள தலை முடியை ஆற்றி, பின்னல் போட்டு, பூ வைத்து..
தீபாவளி மருந்து ஒரு உருண்டை. 
ஆறு மணிக்குமேல் அமாவாசை வந்து விடும் என்பதால், அதற்கு முன்பாகவே, போண்டா பஜ்ஜி எல்லாம் சாப்பிடுவோம். ஏன்னா, எல்லாத்திலையும் வெங்காயம் இருக்கும். 

                                   

 அண்ணாக்கள் வெடி வெடிக்க வேடிக்கை பார்த்து...
ஓலை வெடி என்று ஒன்று.. தென்னம் ஓலையில் செய்து நுனியில் திரி இருக்கும்.. நீளமாக இருக்கும்.. அதற்கும் மேலே அப்பா ஒரு நீள கொம்பில் ஆணி அடித்து , ஓலை வெடியை சொருகி குடுப்பார் ! அதை வீர தீரமாக வெடிப்போம் !! எல்லாம் ரொம்ப கொஞ்சம் தான். மொத்தமாக 5 rs. க்கு வெடி வாங்கினால் தாராளம்.
அதை தாம்பாளத்தில் வைத்து, மொட்டை மாடியில் வெய்யிலில் காய வைத்து, அது தாம்பாளத்தோடு வெடித்து சிதறியதெல்லாம் அழிக்க முடியாத நினைவுகள்...

பிறகு தட்டு நிறைய பக்ஷணம் வைத்து, வயிறு நிறைய சாப்பிட்டு... தூங்கி முழித்தால்..
அம்மா பாவம்... பாயசத்தோடு சமையல் முடித்திருப்பாள்.

(முதல் நாள் வெங்காய சாம்பார், உருளை கிழங்கு கரி... எப்படி அவ்வளவு சாப்பிட்டோம் ??)

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு... at least வசதி உள்ள வீட்டு குழந்தைகளுக்கு... பத்தோடு பதினொன்று.. அத்தோட இது ஒன்று என்ற மாதிரி புது டிரஸ் இல் thrill இல்லை.
Grand sweetsஇல் வாங்கிய பட்சணத்தை சாப்பிட interest இல்லை. (because even that is always available)
உறவுகளையும் நண்பர்களையும் தட்டில் பட்சணம் வைத்து எடுத்து போய், நமஸ்காரம் செய்து, பார்த்து வரும் பழக்கமில்லை...

பட்டாசு மட்டும் 10,000 / 20000 Rs. க்கு வெடிக்கிறார்கள்.

இனி வரும் generationகளுக்கு.. இதெல்லாம் புரியுமா ?
இந்த சந்தோஷங்கள் கிடைக்குமா ? 








3 comments:

  1. Awww .. andha naal ninaivugal .Looking fwd to this festival was more thrilling those days.. As u said, nowadays it is restricted to bursting crackers ,buying sweets, n watching d idiot box��..

    ReplyDelete